இயேசுவின் பட்சம் சேர்ந்திருத்தல் Jeffersonville, Indiana, USA 62-0601 11.லூயிவில்லில் ஏதோ ஓரிடத்தில் நீங்கள் உண்பதற்கான விடுதி ஒன்றுள்ளது. அதன் பெயர்... ஞாபகம் வருகின்றதா என்று பார்ப்போம். டாக்பாட்ச் உணவு விடுதி (Dog patch Restaurant). அவ்விடத்திலிருந்து எனக்கு ஒரு அறிவிப்பு வந்துள்ளது. அவ்விடுதியில் யாராகிலும் உண்ண நேர்ந்தால், நீங்கள் அதற்காக அவர்களுக்கு செலுத்தும் பணத்தை அவர்கள் எடுத்து, அதிலிருந்து தசமபாகத்தை சபைக்கு அனுப்புவார்களாம். அது 319 மேற்கு ஜெபர்ஸன் வீதியில் உள்ளது. ஆகையால் தான், அவர்கள் காணத்தக்கதாக, பில்லி அந்த அறிவிப்பை வைத்திருக்கிறான் என்று நினைக்கிறேன். இப்பொழுது, சகோதரர்களே, மனிதர் கூட்டத்தை நீங்கள் நடத்துவதற்கு கடைபிடிக்கும் முறை எனக்குத் தெரியாது - நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றோ, அல்லது உங்கள் கூட்டங்களை எவ்விதம் நடத்துகிறீர்கள் என்றோ, நீங்கள் வழக்கமாக கடைபிடிக்கும் முறையிலிருந்து நான் விலக நேரிட்டால், என் கவனத்தை நீங்கள் ஈர்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். 2இன்றிரவு, அது தீர்மானிக்கப்பட்டுள்ளது, நான் எண்ணினேன், அண்மையில் நமது மிகவும் அன்பார்ந்த மேய்ப்பரான சகோ. நெவிலுடன் நான் பகல் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, என் இருதயத்தில் இருந்த ஒன்றை நான் அவரிடம் கூறினேன். நாம் தாமே ஒரு கூட்டம் மனிதரையும் ஊழியக்காரரையும் (இவர்கள் சுவிசேஷத்தில் இங்கே நம்முடைய கூட்டாளிகள் ஆவர்) ஒன்று கூட்டினால், பொது ஜனங்களுக்கு முன்பாக நாம் பேசத் தகாததை,நம்மில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளலாம் என்று எண்ணினேன். ஏனெனில் நாம் கிறிஸ்துவ மனிதர் என்னும் முறையில் ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறோம். அந்த விதத்தில்... வழக்கமாக சபையோரின் மத்தியில், ஒரு குழுவின் மத்தியில், நீங்கள் ஒன்றைக் கூறுவீர்களானால், ஒருவர் இப்பக்கம் சிறிது சாய்ந்து கொள்வார், வேறொருவர் அப்பக்கம் சாய்ந்து கொள்வார், அப்பொழுது எல்லாமே போய்விடுகிறது. ஆனால் இன்றிரவு நாம் என்ன முயற்சி செய்யப் போகிறோம் என்பதைக் குறித்து என் இருதயத்தில் இப்பொழுது உள்ளதை நான் உங்களுக்கு எடுத்துரைக்கப் போகின்றேன். அது சபையைக் குறித்தும், அதன் இடம், ஸ்தானத்தைக் குறித்துமே. அதை நாம் நேரத்தோடே முடித்துக் கொண்டால், வார்த்தையின் பேரில் நான் சிறிதளவு உங்களிடம் பேச விரும்புகிறேன் - அது பரவாயில்லை என்றால். அதை முடித்துக் கொள்வோம், நாம் நமது விவகார சம்பந்தமான பாகத்துக்கு, உங்களிடம் முதலில் நான் எடுத்துரைக்க விரும்பும் பாகத்துக்குச் செல்வோம். ஒவ்வொரு இரவும் பழக்கமாக செய்வது போல, 9.30 மணிக்கு ஜனங்களை வெளியே அனுப்பிவிடலாம் என்று நினைக்கிறேன். உங்களை நீண்ட நேரம் வைத்துக் கொள்ளாமலிருக்க நான் முயற்சி செய்கிறேன். நாளை சனிக்கிழமை, அது ஒரு பெரிய வர்த்தக நாள். ஆனால் இப்பொழுதுதோ... நமது பலசரக்கு சாமான்களை நாம் வாங்க வேண்டும். 3நான் சகோ. நெவிலுக்கு பகிரங்கமாகக் கூற விரும்புகிறேன்... உங்கள் ஒவ்வொருவருக்கும் இதைக் கூற விரும்புகிறேன், உங்களிடம் நாம் தனிப்பட்ட விதத்தில் பேசிக் கொண்டிருப்பதைப் போல, ஏனெனில் எத்தகைய குழு என்றால்... இதை நான் உண்மையாக கருதி, விசுவாசித்து போதிக்கிறேன். அதென்னவெனில், தேவன் மனிதனை, தம் ஜனங்கள் கொண்ட தமது சபைக்கு தலைவனாக நியமித்திருக்கிறார் என்பதே. பாருங்கள்? அது ஒரு... நேற்றிரவு நான் ''ஜானி'' ஜாக்ஸன் சபையில், தேவன் தமது ஜனங்களை வார்த்தையினால் அரணாக்கியிருக்கிறார் என்று பிரசங்கித்தது போல. ஸ்திரீதான் அந்த கோட்டை தாண்டி வந்து, யோசனைக்கு வழிகொடுத்தாள். அவ்விதம் செய்தபோது, தேவன் தமது சபையை தமது வார்த்தையினால் அரண்படுத்த, சதாகாலங்களிலும் ஒரு மனிதனை நியமித்திருக்கிறார். இப்பொழுது நான் சகோ. நெவிலுடன் தனிப்பட்ட முறையில் பேசி அவரைச் சிறிது உற்சாகப்படுத்த விரும்புகிறேன். நேற்றிரவு நான் பிரசங்க பீடத்தில் இருந்தபோது, இரண்டு அல்லது மூன்று முறை சிந்தனைகளைப் பகுத்தறிதல் எனக்கு வந்தது. ஆனால் நான் அதை விட்டு விலகினேன். ஏனெனில், அண்மையில், சில வாரங்களுக்கு முன்பு நான் கண்ட சொப்பனத்தின் அர்த்தம் என்னவென்பதை நான் அறிந்து கொள்ளும் வரைக்கும், சிந்தனைகளைப் பகுத்தறிதலை என்னை விட்டு எவ்வளவு தூரம் விலக்க முடியுமோ, அவ்வளவாக அதை விலக்க - நான் முயன்று கொண்டிருக்கிறேன். அந்த சொப்பனம் நீண்ட நேரம் எனக்கு உண்டாயிருந்தது. அதை நான் இந்த சபைக்கு அறிவித்தேன். அது செய்தியைக் குறித்தும் சிந்தனைகளைப் பகுத்தறிதலைக் குறித்ததுமாயிருந்தது; அது சரியாக வரவில்லை. என் கருத்து என்னவெனில், அதற்கான நேரம் முடிந்துவிட்டது. ஒருக்கால் நான் தவறாயிருக்கக் கூடும். ஆனால் சகோ. நெவில் ஒருவிதமாக சோர்ந்து கலக்கமடைந்தார் என்பதை நான் கவனித்தேன். 4சகோ. நெவில், இதை இந்த ஐக்கியத்தில் நாம் எதிர்பார்த்ததுதான் என்பதை நீங்கள் அறிய வேண்டுமென்று விரும்புகிறேன். இந்த ஐக்கியத்தில் தொடர்பு கொண்டுள்ள ஊழியக்காரர்களுக்கு, கடந்த சில நாட்களாக சாத்தான் என்ன செய்ய முயன்று கொண்டிருக்கிறான் என்பதை கவனித்தீர்களா? சில நிமிடங்கள் அதைக் குறித்து ஆலோசனை செய்து பாருங்கள். இன்றிரவு இங்கு சகோ. க்ரேஸ் (Brother Crase) உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு சாலையில் நேர்ந்த விபத்தில், ஏறத்தாழ கொல்லப்பட்ட நிலை ஏற்பட்டது. பாருங்கள்? எனக்கும் துப்பாக்கி வெடித்ததனால், என் தலை ஏறத்தாழ சிதறிப் போக வேண்டிய நிலை ஏற்பட்டது. பாருங்கள்? சாத்தான் நமது உயிரை எடுக்கப் பார்க்கிறான். நீங்களும் கூட உங்கள் காரை விபத்துக்குள்ளாக்கி, நீங்களும் மற்றும் ஒரு ஸ்திரீயும் கொல்லப்பட்டிருக்கக் கூடும். பாருங்கள், ஊழியக்காரர்கள் மட்டுமே. அந்த ஊழியக்காரர் குழுவைப் பாருங்கள். அது சாத்தான், அவன் நம்மைத் தொலைத்து விடப்பார்க்கிறான். ஏதோ ஒருவிதமான அலுவலைக் குறித்துப் பேசுவதற்காக இங்கு நாம் கூடிவரவில்லை என்பதை நாம் உணரவேண்டும். நாம் கிறிஸ்துவைக் குறித்துப் பேசவும், நாம் பற்றிக் கொள்ள வேண்டியவைகளைக் குறித்தும், இந்நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்தும் பேசவுமே இங்கு நாம் கூடி வந்திருக்கிறோம். தைரியமாயிருங்கள். என்ன வந்தாலும், என்ன நேரிட்ட போதிலும், எதுவுமே உங்களைச் சுற்றி நெருக்கி திகைப்படையச் செய்ய இடங்கொடுக்க வேண்டாம். காலங்கள் தோறும் உள்ள கன்மலையைப் போல திடமாக நில்லுங்கள். தேவன் எல்லாவற்றையும் சரிப்படுத்துவார். அவர் அதை உங்களுக்கு நிரூபித்திருக்கிறார். உங்களை கலக்கமடையச் செய்திருக்கக் கூடும் என்பது உண்மைதான். அது அந்த ஸ்திரீயை கொன்றிருக்கக் கூடும். அவ்விதம் நேர்ந்திருந்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் அது உங்கள் மனதில் இருந்திருக்கக் கூடும். அநேக காரியங்கள் உங்களைத் தொல்லைப்படுத்தியிருக்கக் கூடும். ஆனால் தேவன் இன்னமும் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். இவைகள் நன்மைக்கேதுவாக உண்டாகும்படி செய்துவிடுகிறார். சாத்தான் நம்முடைய உயிரையும் எடுத்துக் கொண்டிருக்கக் கூடும். எனவே, சாத்தான் சபைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறான். 5அன்று காலை நான் சபைக் கட்டிடத்தின் மூலைக்கல்லை நாட்டின் போது, நான் ஒரு மேய்ப்பனாக ஆவேன் என்று நினைக்கவேயில்லை. தொடக்கத்தில் அது என் அழைப்பாய் இருக்கவில்லை. என் முதல் அழைப்பு, ஊழியக்களத்தில் சுவிசேஷகப் பணியைச் செய்ய வேண்டும் என்பதே. பல ஆண்டுகளுக்கு முன்பு, இத்தெருவின் மறுபுறத்தில், ஒரு கூடாரத்தில் அது ஆரம்பித்தது. அங்கிருந்த சகோ. ராய் டேவிஸ்ம் அவருடைய சபைக் கட்டிடமும் எரிந்து போனது என் நினைவுக்கு வருகிறது. அந்த ஜனங்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல் சிதறுண்டனர். அவர்களுக்குப் போக இடமில்லை. நான்... திரு . ஹிப்ஸ்டென் பெர்க் என்பவர் அப்பொழுது போலீஸ் தலைமை அதிகாரியாக இருந்தார். அவர் என்னை அழைத்து, “உமக்கு உதவிசெய்ய நாங்கள் இங்கிருக்கிறோம்'' என்றார். அவர், ''நான் ஒரு கத்தோலிக்கன் தான், ஆனால் அந்த ஜனங்களுக்கு உடைகள் கூட ஒருவேளை இல்லாமல் இருக்கலாம்.'' (அது பொருளாதாரம் நிலை மோசமாக இருந்த சமயம்). ''அவர்கள் வேறு சபைகளுக்குச் செல்கின்றனர். அந்த இடத்தில் அவர்கள் பொருத்தமற்றவராய் உள்ளது போல் உணருகின்றனர். அவர்கள் நல்லவர்கள். அவர்களில் அநேகரை எனக்குத் தெரியும். பில்லி, நீங்கள் ஒரு சபையை ஆரம்பிக்க விரும்பினால், உங்களுக்கு எவ்விதத்திலும் உதவி செய்ய நாங்கள் உறுதுணையாய் இருப்போம்” என்றார். அதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். 6நாங்கள் முதலில் ஜெபித்து கர்த்தரைக் கேட்டோம், ஜனங்கள் என்னிடம் வந்து, அவர்கள் போவதற்கு ஒரு இடம் இருப்பதற்காக, ஒரு சபையைக் கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அப்பொழுது நாங்கள் இந்த இடத்தில் கட்டத் தீர்மானித்தோம். ஒரு இரவு, இந்த மணிநேரத்தின்போது, குதிரை புல் வளர்ந்திருந்த இந்த இடத்தில் (இங்கிருந்து சற்று தொலைவில்), பள்ளத்தில் தன்ணீர் தேங்கியிருந்தது, அழுக்கு குவியல் இருந்த இந்த இடத்தில், கர்த்தர் என்னிடம் திட்டவட்டமாகப் பேசி, “இந்த இடத்தில் கட்டு'' என்றார். என்னிடத்தில் ஒரு காசு கூட இல்லை. எங்கள் எல்லோரிடமும் சேர்த்து எண்பது சென்ட் அல்லது ஒரு டாலர் இருந்தது. அது... அதைக் குறித்து இப்பொழுது நீங்கள் சிரிக்கலாம், ஆனால் சகோதரனே, அக்காலத்தில் அது நிறைய பணமாகக் கருதப்பட்டது. அண்டைவீட்டார் ஒருவர் ஒரு பானை பீன்ஸ் சமைத்து, மூன்று நான்கு நாட்களாக ஒன்றுமே புசித்திராத அண்டையிலுள்ள ஒருவரை, அவரோடு பீன்ஸை பகிர்ந்து கொள்ளும்படி அழைப்பதுண்டு. அது பொருளாதார நெருக்கடி உண்டாயிருந்த காலம். இளைஞரில் அநேகர் அந்நாட்களை கண்டிருக்கமாட்டார்கள். ஆனால் அது நெருக்கடியான காலம். இந்த சபையில் காணிக்கை தட்டை இரண்டு அல்லது மூன்று முறை சபையோரிடம் அனுப்பினாலும், ஜனங்கள் நிரம்பி வழிந்திருந்தபோதிலும், முப்பது சென்டுகள் மட்டுமே காணிக்கை கிடைக்கக் கூடிய காலத்தை நான் கண்டிருக்கிறேன். அதற்காக நீங்கள் அவர்களைக் கெஞ்ச வேண்டும். அது உங்களுக்கு முப்பது சென்டுகள் கிடைத்தால், அது ஒருசிறந்த காணிக்கை என்பதாக கருத வேண்டும். பாருங்கள்? அது உண்மையிலேயே கடின போக்காக இருந்தது. 7சபைக் கட்டிடம் கட்டுவதற்கு எங்களிடம் ஒன்றுமே இல்லை. ஆராதனைக்குச் செல்ல ஒரு இடம் இருப்பதற்காக, ஒரு சபைக் கட்டிடத்தைக் கட்ட வேண்டுமென்பது ஜனங்களின் விருப்பமாயிருந்தது. ஏனெனில் அந்நாட்களில் செய்தியானது... அது இப்பொழுது மோசமாகக் கருதப்படுகிறது என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் அந்நாட்களில் எவ்வாறு இருந்தது என்பதை நீங்கள் அறிய வேண்டும். அப்பொழுது யாருமே இருக்கவில்லை அதன் பிறகு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படும் தண்ணீர் ஞானஸ்நானமும், நாம் விசுவாசித்து நிலை நிற்கும் ஆசீர்வாதங்களும் மற்ற காரியங்களும். எனவே, இங்கு நாங்கள் தங்கி ஒரு கூடாரத்தைக் கட்டுவோமென்று என் இருதயத்தில் தேவனுக்கு வாக்களித்தேன். நாம் மூலைக் கல்லை நாட்டின் அன்று காலையில் அவர் ஏறக்குறைய 8.00 மணியளவில் என்னை ஒரு தரிசனத்தில் சந்தித்தார். அப்பொழுது நான் உட்கார்ந்து கொண்டு சூரியன் மேலே எழும்பி வருவதை கவனித்துக் கொண்டிருந்தேன். அது ஏறக்குறைய ஆண்டின் இந்த சமயம் தான். அவர் என்னை நதிக்கரையில் சந்தித்த பிறகு, என்னிடம் உரைத்திருந்தார். கர்த்தருடைய தூதன் அந்த ஒளியில் பிரத்தியட்சமானபோது, அதை நான் தூரத்தில் காண்கையில், அது ஒரு நட்சத்திரத்தைப் போல் காணப்பட்டது. அது நான் இருந்த இடத்திற்கு நேராக இறங்கி வந்து, அந்த குறிப்பிடத்தக்க வார்த்தைகள் பேசப்பட்டன. எனவே, ஜனங்கள் ஆராதிப்பதற்கான ஒரு இடத்தை அமைக்க வேண்டுமென்று என் மனதில் தீர்மானித்தேன். 8நான் எனக்குள், “அது எனக்காக அல்ல, அது எனக்கு ஒன்றுமில்லை, இருப்பினும் தேவனுடன் சம்பந்தப்பட்ட எந்த ஒன்றும் என்னுடைய பாகமாகவும் இருக்கிறது. அது எதுவாயிருந்தாலும்... தேவனுடைய பிள்ளைகளுக்காக உள்ள எதுவும் எனக்காகவும் உள்ளது. நான் இதைச் செய்ய, அதைச் செய்ய கடமைப்பட்டுள்ளேனோ என்னமோ, அது எங்கிருந்தாலும் தேவனுடைய பரம்பரையினரின் பேரில் கவனம் செலுத்துவது என்னுடைய கடமையாகும்'' என்று எண்ணினேன். பாருங்கள்? நீங்கள் கூறுவது போல், ''நல்லது நான்... நீங்கள் சிறுவராயிருந்தபோது, ''மரம் வெட்டுவது தான் என் வேலை, அதை சுமந்து செல்வதல்ல. ஜான் அதை செய்யட்டும். அதன் மேல் பனி விழுந்தாலும், மழை பெய்தாலும் எனக்குக் கவலையில்லை. அவன் போய் அதைக் கொண்டு வரட்டும்“ என்று கூறினது போல. அந்த வீட்டின் பிள்ளை என்ற முறையில், அந்த மரம் உங்கள் அம்மாவுக்காக நனையாமல் பார்த்துக் கொள்வது உங்கள் கடமையாகும். பாருங்கள்? நீங்களே அதை சுமந்து சென்றிருக்க வேண்டும். 9அவன், “நல்லது, ஃபரான்க் போய் தண்ணீரைக் கொண்டு வந்திருக்க வேண்டும். அது என் வேலையல்ல'' என்று கூறலாம். ஃபராங்க் தண்ணீர் கொண்டு வரவில்லையென்றால், தண்ணீரைக் கொண்டு வர கவனித்துக் கொள்வது உன் வேலையாகும். அவ்வளவுதான். அவ்விதமாகவே அதன் போக்கு உள்ளது. தேவனுடைய குடும்பத்திலும் கூட போக்கு அவ்வாறே உள்ளது. அவர்களில் சிலர். அண்மையில் அவர்கள் சிலர் என்னிடம், “இவ்விதம் பிரசங்கிப்பதை விட்டுவிடுங்கள். அப்படிச் செய்தால், நீங்கள் பெற்றுள்ள நண்பர்களின் நட்புத் தன்மையை பாழாக்கிக் கொள்வீர்கள். அதை விட்டுவிடுங்கள். அவர்கள் செய்வது தவறு என்று எனக்குத் தெரியும். ஆனால் அது நம்முடைய வேலையல்ல'' என்றனர். அப்படியானால், அது யாருடைய வேலை? அது தவறாயிருக்குமானால் அதை யாராவது சுட்டிக் காட்ட வேண்டும். எனவே அதை நாம் தொடர்ந்து செய்வோம். சபையைக் குறித்து நான் அவ்விதமாகவே உணருகிறேன். 10சபை கட்டிடத்தைக் கட்டுவதைக் குறித்த திட்டங்களில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாயிருந்தன. அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. ஒருவர் கட்டிடம் வேண்டுமென்று விரும்பினார், மற்றொருவர் அது வேண்டாம் என்று எண்ணினார். இப்படியும் அப்படியுமாக கருத்துக்கள் இருந்தன. அவ்விதமாகவே இருப்பதையே நீங்கள் காண்கின்றீர்கள். நீங்கள் ஊழியக்காரரோடு ஈடுபடும் போதும், மற்றும் வர்த்தகர்கள், குழுக்கள், ஒரு கூட்டம் மனிதர் உள்ள எந்த இடத்திற்கும் நீங்கள் சென்றாலும், அவர்கள் வெவ்வேறு கருத்துக்களை உடையவர்களாயிருப்பார்கள். எனவே நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவர் உங்களுக்கு இருக்க வேண்டும். அந்த நபரை நீங்கள் தேர்ந்தெடுத்து, எல்லோரும் அவருடன் ஒத்துழைக்க வேண்டும். இராணுவத்தில் நடப்பதைப் போல், உங்களுக்கு... ஒருவர் தளபதியாயிருக்கிறார் (General). அது தான் தலைமை அலுவலகம். ஆனால் ஒரு இராணுவக் கூட்டத்திற்கு அதிகாரி (Captain) ஒருவர் இருக்கிறார். தலைமை அதிகாரி கட்டளை கொடுத்தால், அதை மாற்றுவதற்கு தளபதிக்கு அதிகாரம் உண்டு. சபைக்கு தலைமை தளபதி இயேசு கிறிஸ்துவே. அவருடைய ஊழியக்காரர் வெவ்வேறு குழுக்களுக்கு அவர் கீழே அதிகாரிகளாக இருக்கின்றனர். இவர்கள் பூமியில் அவருடைய பிரதிநிதிகளாக உள்ளனர். 11அவர்கள் எத்தனையோ காரியங்களைச் செய்ய முயன்றனர், இங்குள்ள சிறு கூடாரத்திலிருந்தவர்கள். முடிவில் அதை நான் கட்டி முடித்த பின்பு, என்ன நடக்கிறதென்று பார்க்க, அமைதியாயிருந்தேன். அதன் பிறகு, சுமார் பதினைந்து பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு, கர்த்தர் என்னை சுவிசேஷ பணிக்காக அழைத்தார். நான் சபையை விட்டுச் சென்றேன். இருப்பினும், அதை நான் புறக்கணிக்க முடியாது. இங்கு தவறான ஏதாவதொன்று ஆரம்பித்தால், அந்த விஷயத்தில் என் வாக்கை (Vote) போட வேண்டுமென்பதற்காக, என் பெயரை இச்சபையுடன் இணைத்து வைத்திருக்கிறேன். நான் வந்து தவறானதை தடுத்து நிறுத்த எனக்கு அப்பொழுது உரிமையிருக்கும். ஏனெனில் காரியங்களை நேர்படுத்த நான் பதினேழு ஆண்டுகளாக இந்த பிரசங்க பீடத்தில் வியர்வை சிந்தி பாடுபட்டிருக்கிறேன். எல்லா விதமான கோட்பாடுகளும் கொள்கைகளும் நிலவி வருகின்ற இக்காலத்தில்.... இது எந்த ஸ்தாபனத்துடன் சேராத ஒன்றாக இருப்பதால், எழும்பிப் பறந்த கோட்பாடுகள் அனைத்தும் இந்த வழியாகப் பறந்து வந்தன. தேவனுடைய ஒத்தாசையினால் நாம் கலப்படமற்ற சுவிசேஷத்துடன் இங்கு உறுதியாக நின்றோம். இன்றிரவு வரைக்கும் இச்சபை அவ்வாறே நின்று வருகிறது. எனவே நாம்... ஆனால்... இந்த சபை எனக்கு கீழ் உள்ளதிலிருந்து விலகும்படியாக முயற்சி செய்யப்பட்ட நேரங்கள் உண்டாயிருந்தன. என் பெயர் மட்டும் இதனுடன் இணைக்கப்படாமல் இருந்திருந்தால், இது இன்றிரவு பயங்கரமான, தர்மசங்கடமான நிலையில் நிச்சயமாக ஆழந்திருக்கும்... அது நானல்ல, தேவன் தாமே அதை செய்தார். 12ஆனால், இப்பொழுது அதை நான் காண்கையில், அது தனக்குரிய ஸ்தானத்தை வந்தடைந்துள்ளது. நாம் ஒரு மகத்தான மணிநேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த சபையைக் குறித்து ஏதாவதொன்றைக் கூறுவது இன்னும் என் சிரத்தையாயுள்ளது. பாருங்கள்? ஏனெனில் அது என்னுடைய ஒரு பாகமாயுள்ளது. நான் இங்கிருந்தாலும் இல்லாமற்போனாலும், அது இன்னும் என்னுடைய ஒரு பாகமாயுள்ளது. அது சுத்தமாகவும், தெளிவாகவும் இயங்குகின்றதா என்று பார்த்துக் கொள்வது என் கடமையாகும். அதுவே நான் தேவனுடைய ராஜ்யத்துக்கு செய்யும் சிறந்த தொண்டாகும். இந்நாட்களில் நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்... 13இச்சபையுடன் இணைந்த சிறு சபைகள் உள்ளதை நான் அறிகிறேன். அதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். இங்குள்ள சகோ. க்ரேஸும் அவருடைய செல்லர்ஸ் பர்க் குழுவும்; ஊடிகாவில் சகோ. ஸ்நெல்லிங் வகித்த ஸ்தானத்தில் இப்பொழுதுள்ள பின்னால் உள்ள அந்த சகோதரன்; இங்குள்ள சகோ. ரட்டில், மற்றும் சகோ. ஜூனியர் ஜாக்சன், அந்த விலையேறப்பெற்ற இளைஞர்கள். அவர்கள் நல்லவர்கள். அருமையான தேவனுடைய மனிதர். இவர்கள் இந்த செய்தியைப் பிரசங்கிக்கின்றனர். அவர்கள். ஒருவர் மற்றவரிடம் சிறிது கருத்து வேற்றுமை கொண்டிருக்கக் கூடும். அது போதகர் குழுவினிடையே காணப்படும் மனித இயல்பு மாத்திரமே. போதகர்களிடையே சிறிது கருத்து வேற்றுமை இருக்குமானால்... அது ஒன்றும் பெரிய வேற்றுமை இல்லை. ஒரு வேளை ஒருவர், ''ஆயிரம் வருட அரசாட்சி வரும் என்றும் அப்பொழுது இயேசு வெள்ளைக் குதிரையின் மேல் காணப்படுவார் என்றும் நான் விசுவாசிக்கிறேன்'' எனலாம். வேறொருவர், ''அவர் வரும்போது, வெள்ளை மேகத்தில் வருவார் என்று நான் விசுவாசிக்கிறேன்'' எனலாம். நல்லது, அவர் வரப்போகிறார் என்று அவர்கள் விசுவாசிக்கும் வரைக்கும் - அதுவே முக்கியமான காரியம். பாருங்கள்? அவர் எந்தவிதமாக வந்தாலும்... அவர் வரப்போகிறார் என்று அவர்கள் விசுவாசித்து, அதற்கென்று ஆயத்தப்படுகின்றனர். அந்த விதத்தில்... 14நான் கண்டு பிடிக்க முயன்று, அதைக் குறித்து ஆழ்ந்து படித்துக் கொண்டு வருகிறேன் (அதை நான் சபையோருக்குத் தெரிவித்திருக்கிறேன்). நான் ஆதி சபையைக் குறித்துப் படித்து, அபிஷேகம் பெற்றிருந்த அந்த மனிதர் கர்த்தருடைய வீட்டை எவ்விதம் ஆயத்தம் செய்தனர், கர்த்தரைஆராதிப்பதற்கு கடைப்பிடிக்கப்பட்ட ஒழுங்குமுறைகளையும் நான் உன்னிப்பாக கவனித்து வந்துள்ளேன். அது என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. சில நாட்களுக்கு முன்பு நான் இங்கே, யோவேல்: 2-ல் உரைக்கப்பட்டுள்ள, “வெட்டுக்கிளிகளும், பச்சைக் கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் உரைக்கிறார்” என்னும் பொருளின் பேரில் பிரசங்கித்தேன். சபையின் மேல் தேவன் கண்காணிகளாக நியமித்த இந்த மனிதர் என்ன செய்தனர் என்றும், அவர்கள் எவ்வாறு சபையைப் பாதுகாத்து வந்தனர் என்பதைக் குறித்தும் நான் ஆழந்து படித்தேன். 15நாம் இப்பொழுது ஆதி சபையிலிருந்து தொடங்கி, (சுமார் ஐந்து நிமிடங்கள் மட்டுமே), அவர்கள் காலங்கள் தோறும் என்ன செய்தனர் என்பதை படிப்படியாக கொண்டு வரப்போகிறேன். அதன் பிறகு வருங்காலத்திற்கென நான் கொண்டுள்ள தரிசனத்தை உங்களுக்குக் காண்பிப்பேன். தொடக்கத்தில் சபையானது பெந்தெகொஸ்தேயில் ஆரம்பமானது. பரிசுத்த ஆவியானவர் அங்கே கூடியிருந்தவர்கள் மேல் விழுந்தார். இயேசு பன்னிரண்டு பேர்களைத் தெரிந்து கொண்டார். அது வருவதற்கு முன்பு, எல்லாம் ஒழுங்கில் வரும் வரைக்கும் பரிசுத்த ஆவியானவர் காத்துக் கொண்டிருந்தார். வேத வாக்கியங்களின் நிறைவேறுதலாக, யூதாஸ் அக்கிரமத்தினால் விழுந்து போனான். அவனுடைய கண்காணிப்பை ஏற்றுக் கொள்வதற்கென அவர்கள் ஒருவனைத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. 16எல்லாவற்றிற்குமே காத்திருக்கும் காலம் ஒன்றுண்டு என்று நான் நம்புகிறேன். வேதவாக்கியம் நிறைவேறுவதற்காக, எல்லாம் சரியாக ஓழுங்குக்குள் வரும் நேரம் வரைக்கும் காத்திருக்க வேண்டும். அநேக தருணங்களில் நாம் பொறுமையை இழந்து விடுகிறோம். ஒரு சிறு பிள்ளையைப் போல், நாம் பெரிய காரியங்களை எதிர்பார்த்து, முன்னதாகவே தாவி குதித்து விடுகிறோம். அது ஊழியத்தை அதிகமாக பாதித்துவிடுகிறது. பாருங்கள்? நாம் பயபக்தியுடன் முன் சென்று, இருதயத்தில் ஒரு நோக்கத்தைக் கொண்டவர்களாய், இன்னின்ன காரியத்தில் தேவன் நம்மை உபயோகிக்க விருப்பமுள்ளவராயிருந்தால்.... அவர் வழியைத் திறந்து கொடுக்கும் வரைக்கும் நாம் காத்திருப்போம். ஏனெனில் அவரே நமக்கு முன்னால் செல்ல வேண்டியவராயிருக்கிறார். ஒரு இரவில் தாவீது யுத்தத்துக்கு புறப்பட்டுச் சென்றது உங்களுக்கு ஞாபகம் உள்ளதா?அவன் சண்டையில் களைப்புற்று, முசுக்கட்டை செடியின் கீழ் படுத்துக் கொண்டான். அதன் இலைகளின் அசைவினால் தேவன் அவனோடு பேசி அவனுக்கு முன்னே செல்லும் வரைக்கும் அவன் காத்திருந்தான். அதன் பிறகு அவன் தைரியத்தோடு சென்றான். ஏனெனில் தேவன் அவனுக்கு முன்னே செல்கிறார் என்பதை அவன் அறிந்திருந்தான். சகோதரரே, யுத்தம் வரவேண்டும் என்பதை அறிந்தவர்களாய், நாம் மட்டும் அவ்விதம் செய்வோமானால்; ஆனால் வழியை உண்டாக்க தேவனுடைய கரம் நமக்கு முன்னே செல்லுவதைக் காணும் வரைக்கும் நாம் காத்திருக்க வேண்டும். 17நான் கவனித்தேன், எவ்வாறு சபைகள்; சுவிசேஷ ஊழியம் எல்லாவிடங்களிலும் பரம்பினது. அதன் பிறகு, பவுல் நமது ஜனங்களுக்கு ஒரு பெரிய மிஷனரியாக விளங்கினதை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். தேவன் அவனை நடத்திச் சென்ற இடங்களுக்கெல்லாம் அவன் சென்று சபையை ஏற்படுத்தினான் என்று நாம் காண்கிறோம். அது ஒரு புதிய விசுவாசமாக இருந்தது. அந்நாட்களில் ஆசியா மைனரிலும் ஐரோப்பா முழுவதிலும் இருந்த சபைகள் அந்த செய்தியை விசுவாசிக்கவில்லை. ஆனால் அவன் செய்தியை பிரசங்கித்தபோது, அநேகர் மனம் மாறினார்கள். அங்கு ஒருவருமே இருக்கவில்லை... அவன் ஜனங்களை அந்நிலையில் விட்டு வந்தால், அவர்கள் மீண்டும் தங்கள் அஞ்ஞான தெய்வங்களிடத்துக்கும், யூத மார்க்கத்துக்கும் திரும்பிச் சென்று விடுவார்கள். ஏனெனில் மனம் மாறினவர்களுக்கு போதிக்க ஒருவரும் இருக்கவில்லை. அவர்கள் போவதற்கு ஒரு இடமும் இருக்கவில்லை. எனவே, பவுல், தேசத்தின் வெவ்வேறு பகுதிகளில், சபைகளை ஏற்படுத்தினான். அந்த சபைகள் ஒவ்வொன்றுக்கும் அவன் ஒழுங்குக்குட்பட்ட, நம்பத்தகுந்த ஒரு மனிதனை வைத்து விட்டு வந்தான். இந்த மனிதன் மேய்ப்பன் (Pastor) என்று அழைக்கப்பட்டான். இந்த சபைக்கு பிறகு பல்வேறு சிறு சபைகள் இதிலிருந்து எழும்பின. இளைஞர்களும் வயதில் மூத்தோரும் எழும்பி, அதிலிருந்து சபைகளை உண்டாக்கிக் கொண்டனர். முதலாம் சபைக்கு தலைவனாக இருந்த மனிதன் கண்காணிப்பாளன் (bishop) என்று அழைக்கப்பட்டான். அவனை விட்டுச் சென்ற அவனுடைய பிள்ளைகள், மேய்ப்பர்கள் என்று அழைக்கப்பட்டனர். இந்த சிறு சபைகள் எல்லாமே இந்த கண்காணிப்பாளரிடத்தில் வந்தனர். 18ஐரேனியஸ் தன் காலத்திலும் அவ்விதமே செய்தார். மார்டினும் அவ்வாறே செய்தார். பாலிகார்ப்பும் அவ்வாறே செய்தார். காலங்கள் தோறும் வழிவழியாக அதே முறையை அவர்கள் அனுசரித்து வந்தனர். அதன் பிறகு சபையின் அப்போஸ்தலன், அவன் தான் பவுல்... உலகை விட்டுச் சென்ற போது, யோவான் சபையின் கண்காணிப்பை ஏற்றுக்கொண்டான். யோவான் கடந்து சென்றபோது, பாலிகார்ப் அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பாலிகார்ப் கடந்து சென்றபோது, ஐரேனியஸ் பொறுப்பை வகித்தார். அதன் பிறகு மார்ட்டின், இவ்விதம் காலங்கள் தோறும் ரோமன் கத்தோலிக்க சபை ஸ்தாபிக்கப்படும் வரைக்கும் நடந்து வந்தது. அது ஸ்தாபிக்கப்பட்டவுடனே, இவையனைத்தையும் அது சுக்குநூறாக உடைத்து அவர்களை சுட்டெரித்து சிதறடித்தது. அப்பொழுது பச்சைக்கிளி இதை பட்சித்தது, முசுக்கட்டை பூச்சி அதை பட்சித்தது, மற்ற புழுக்கள் அதை பட்சித்து, அதை பட்சித்து முடிவில் அடிமரம் வரைக்கும் அவை பட்சித்துவிட்டன. ஆனால் தேவன் இவைகளையே திரும்ப அளிப்பதாக வாக்களித்தார். நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று என் முழு இருதயத்தோடும் நான் விசுவாசித்து வந்திருக்கிறேன். விசுவாசிக்கிறேன். இன்றிரவு இயேசு வராமலிருப்பதை தடுக்க இன்னும் அதிக காரியங்கள் நிறைவேறுவதற்கு இல்லை என்று நான் விசுவாசிக்கிறேன் (ஒருக்கால் இதைக் குறித்த என் வேத வாக்கியங்களின் வியாக்கியானம் தவறாயிருக்கக்கூடும்). இன்னும் நிறைவேறாமல் விடப்பட்டுள்ள வெகு சில காரியங்கள், காலை விடியு முன்பு நிறைவேறக் கூடும் என்று நான் விசுவாசிக்கிறேன். ஒருக்கால் அது நிறைவேறும் நேரத்தைப் குறித்து நான் தவறாயிருக்கக் கூடும் என்று நான் விசுவாசிக்கிறேன். ஒருக்கால் அது நிறைவேறும் நேரத்தைக் குறித்து நான் தவறாயிருக்கக் கூடும், ஆனால் அது மிகவும் சமீபமாயுள்ளது. அதை நான் விசுவாசிக்கிறேன். இதை ஞாபகம் கொள்ளுங்கள், பவுல் அவ்வாறு விசுவாசித்தான்; யோவான் அவ்வாறு விசுவாசித்தான்; ஐரேனியஸ் அவ்வாறு விசுவாசித்தார்; மார்டின் அவ்வாறு விசுவாசித்தார்; மற்றும் அனைவருமே அவ்வாறு விசுவாசித்தனர். 19தேவன் திவ்விய வாசகனாகிய யோவானிடம், ''நான் வருவதற்கு இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் உள்ளன'' என்று கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும்? யோவான் திரும்பி வந்து சபையோரிடம், “நல்லது, நாம் புசித்து, குடித்து மகிழ்ச்சியாயிருக்கலாம் என்று எண்ணுகிறேன். ஏனெனில் இன்னும் அநேக சந்ததிகள் கடந்து செல்ல வேண்டும் (பாருங்கள்?) இயேசு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு வரப்போவதில்லை'' என்று கூறியிருப்பான். பாருங்கள்? எனவே... பாருங்கள், சபையானது தளர்ந்து போன நிலையில் இருந்திருக்கும். அவர்கள் பந்தய ஓட்டத்துக்கு ஆயத்தமாக இருந்திருக்கமாட்டார்கள். அவருடைய வருகைக்காக காத்திருத்தல் என்பது இருந்திருக்காது. என்னவாயினும், உங்களுடைய எதிர்பார்க்குதலே முக்கியம் வாய்ந்தது. நீங்கள் அந்த ஜாமத்தில் நித்திரையடைந்து, அதே எதிர்பார்க்குதலுடன் நீங்கள் விழித்தெழுவீர்களானால், அந்த ஒன்றையுமே அது தடை செய்ய முடியாது. ஏனெனில் நீங்கள் எப்படியும் உரியநேரத்தில் இருக்கப் போகிறீர்கள். பாருங்கள்? நான் என்ன கூறுகிறேன் என்பது புரிகின்றதா? பரி. மார்டின் உயிர்த்தெழுதலின் போது விழித்தெழும்புகையில், பரி. பவுல் மற்றுள்ளோரும் விழித்தெழும்புகையில், அவர்கள் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தைப் போலவே புத்துணர்ச்சியுடன் காணப்படுவர். ஏனெனில் அவர்கள் அவருடைய வருகையை எதிர் நோக்கினவர்களாய், அதே எதிர்பார்த்தலுடன் கல்லறைக்குச் சென்றனர். ஒரு உரத்த சத்தம் உண்டாகும், அப்பொழுது முழு சபையும் மேலே எழும்பி வரும். பார்த்தீர்களா? அப்படித்தான் இருக்கும். எனவே அதனால் பரவாயில்லை. 20பாருங்கள், அவருடைய வருகையை இப்பொழுதே நாம் எதிர் நோக்கினவர்களாய் இருக்கவேண்டும். அது எப்பொழுது இருக்கும் என்று நமக்குத் தெரியாது. ஒருக்கால்... அது நூறு ஆண்டுகள் கழித்து இருக்கலாம்; அல்லது ஐந்நூறு ஆண்டுகள், ஆயிரம் ஆண்டுகள். பத்தாயிரம் ஆண்டுகள் கழித்து இருக்கலாம். எனக்குத் தெரியாது. யாருக்குமே தெரியாது. ஆனால் நாம் ஒவ்வொரு நாளும், அவர் அந்த நாளில் வருவார் என்று எண்ணி வாழ வேண்டும். பாருங்கள்? அவர் இந்த நாளில் வருவார் என்பதாய் நாம் வாழ்வோமானால், நாம் விழித்தெழும்போது (நாம் நித்திரையடைந்து, உயிர்த்தெழுதலில் விழித்தெழும் போது), நாம் அப்பொழுதுதான் உறங்கி எழுந்ததைப் போல் புத்துணர்ச்சி பெற்றிருப்போம். எக்காளம் தொனிக்கும். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் உயிரோடெழுந்திருப்பார்கள். உயிரோடிருக்கிற நாமும் அவர்களோடு கூட ஆகாயத்தில் எடுக்கப்பட்டு கர்த்தரைச் சந்திப்போம். பாருங்கள்? எனவே அது புத்துணர்ச்சியுள்ளதாய் இருக்கும். 21ஆனால் இப்பொழுது, அந்த நேரம் வரைக்கும், அவர் வரும் வரைக்கும், அவர் அடுத்த நிமிடம் வந்திடுவார் என்பதைப் போல் நாம் ஒவ்வொரு நாளும் வாழ விரும்புகிறோம். ஏனெனில் அந்த நிமிடம் உங்கள் வாழ்க்கையின் முடிவாக இருக்கக்கூடும். நீங்கள் எப்பொழுது போவீர்கள் என்பதை அறியமாட்டீர்கள். இது நம்மில் சிலருக்கு கடைசி மூச்சாக இருக்கக்கூடும். இப்பொழுது நாம் அந்த மூச்சை நமக்குள் பெற்றிருக்கிறோம். எனவே நீங்கள் அது போல் வாழ விரும்புகிறீர்கள். இப்பொழுது, நாம் தொடர்ந்து முன்னேறுகையில், காலம் என்னும் மணல் பரப்பில், நம்முடைய அடிச்சுவடுகளை, மற்றவர்கள் காணத்தக்கதாக, பதிய வைக்க வேண்டும். பவுல், தான் சென்ற வழியில் செல்லாமல் இருந்திருந்தால், எவ்விதம் பின்பற்றுவது என்பதை யோவான் அறிந்திருந்திருக்கமாட்டான். யோவான் தன் வழியில் செல்லாமல் இருந்திருந்தால், எவ்விதம் பின்பற்றுவது என்பதை பாலிகார்ப் அறிந்திருந்திருக்கமாட்டார். பாலிகார்ப் தன் வழியில் செல்லாமல் இருந்திருந்தால், எவ்விதம் பின்பற்றுவது என்பதை மார்டின் அறிந்திருந்திருக்கமாட்டார். நான் என்ன கூறுகிறேன் என்று விளங்குகிறதா? ஒவ்வொருவரும் காலம் என்னும் மணல் பரப்பில் தங்கள் அடிச்சுவடுகளைப் பதிக்கவேண்டும். 22சகோதரரே, நாம் இங்கு பெற்றுள்ளதை விட சிறந்த ஒன்றைப் பெற்றுள்ள ஒரு ஸ்தாபனம்- அல்லது விசுவாசிகளைக் கொண்ட வேறொரு குழு உள்ளதென்று நான் நினைத்திருந்தால், இச்சிறு உறுப்பினரை நான் மிகவும் விரைவாக அதனுடன் ஒன்று சேர்த்திருப்பேன். நான் காத்திருந்தேன். நான் வாஞ்சித்தேன், என்றாவது ஒரு நாளில் நான் உரைத்து வந்த அந்த மகத்தான தீர்க்கதரிசியாகிய எலியா வருவார் என்று நான் எதிர்பார்க்குதலுடன் விசுவாசித்துக் கொண்டு வருகிறேன். நான் எப்பொழுதும் விசுவாசித்து, அந்த நாளைக் காண நான் உயிர் வாழ்வேன் என்று எண்ணி வந்திருக்கிறேன். அந்த நபர் காட்சியில் எழும்பும் போது, நான் மாறிக் கொள்ளலாம். அப்பொழுது என் சிறு சபையிடம், ''சகோதரரே, நாம் வரக் காத்திருந்த மனிதன் இவர் தான். இந்த மனிதன், இவர் தான் என்று கூறுவேன். அதற்காக நான் காத்திருந்து வந்திருக்கிறேன். அது ஏற்கனவே நடந்து விட்டிருந்தால், நான் இங்கிருந்து கொண்டு, “சகோதரரே, இது தான் அவர்” என்று சொல்வேன் என்று எதிர்பார்க்கிறேன். பாருங்கள்? சபையானது அந்நிலையில் வைக்கப்பட்டுள்ளதைக் காண நான் விரும்புகிறேன். நான் ஏதோ ஒன்றை மிதித்து, அது உரத்த சத்தமிடும்படியாக செய்துவிட்டிருக்க வேண்டும் (சகோ. பிரன்ஹாம் ஒலிபெருக்கி 'கேபிள்'களை (cables) மிதித்ததனால், ஒலிபெருக்கியின் ஓசை பாதிக்கப்படுகிறது - ஆசி) எனவே இப்பொழுது, இதைக் கூற விரும்புகிறேன். இது ஒரு நிர்மாணிக்கப்பட்ட சபை... 23சிறிது நேரம் நான் மறுபடியும் நிறுத்திக் கொள்ளட்டும். நான் பம்பாய்க்குச் (இப்போதைய மும்பை நகரம் - தமிழாக்கியோன்) சென்றபோது... (ஜனங்களின் மேல் அது கொண்டிருந்த விளைவின் காரணமாக, அதுவே எனது மிகச் சிறந்த கூட்டம் என்று எண்ணுகிறேன்). நான்... ஆப்பிரிக்காவில் ஒரு நேரத்தில் 30,000 பேர் கிறிஸ்துவினண்டையில் வந்தனர் என்றால், பம்பாயில் குழுமியிருந்த ஐந்து லட்சம் பேர்களில், ஒன்றறை அல்லது இரண்டு லட்சம் பேர் ஒரே நேரத்தில் கிறிஸ்துவினண்டையில் வந்தனர். என்னால் என்ன செய்யமுடியும்? அங்கு ஒன்றுமேயில்லை. ஒருக்கால் அவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் இருந்திருக்கும். அங்கு சபை எதுவும் இல்லை. என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவர்களை ஒப்படைக்க யாருமே இருக்கவில்லை. நான் விசுவாசிக்கும் செய்தியின் காரணமாக, ஒரு பெந்தெகொஸ்தே ஸ்தாபனமும் கூட என்னுடன் ஒத்துழைக்கவில்லை. அத்தனை ஆத்துமாக்களும் ஒருக்கால் மீண்டும் சீக்கியர்கள், ஜைன மதத்தினர், புத்த மதத்தினரிடம், அவர்கள் எந்த மதத்திலிருந்து வந்தனரோ, அந்த மதத்திற்கே திரும்பிப் போய் விட்டிருக்கக் கூடும். அவர்களை வைத்துக் காக்க ஒரு இடமும் இருக்கவில்லை. அது வெட்கத்துக்குரிய செயலாகும். அது அவமானம் (பாருங்கள்?) ஏனெனில் நான் கொண்டிருந்த என் நிலையின் காரணமாக, எனக்கு ஒத்துழைப்பே கிடைக்கவில்லை. பாருங்கள்? 24நல்லது, நான் ஆப்பிரிக்காவுக்கு அப்ரிகான்ஸ் விசுவாச மிஷன் என்னும் ஸ்தாபனத்தின் ஆதரவில் சென்றேன். நான் அவ்விதம் செய்த போது... அவர்களுடைய கருத்துக்களுடன் நான் இணங்க முடியாது. அவர்கள் ஜனங்களுக்கு திரித்துவ ஞானஸ்நானம் கொடுத்து, மூன்று முறை முகத்தை முதலில் முழுக்குகிறார்கள். அவர்களில் ஒருவர் மூன்று முறை முதுகு பக்கம் முழுக்குகிறார்; ஒன்று பிதாவாகிய தேவனுக்கு, இன்னொன்று வேறொரு தேவனாகிய குமாரனுக்கு, இன்னொன்று வேறொரு தேவனாகிய பரிசுத்த ஆவிக்கு - மூன்று வெவ்வேறு தெய்வங்களுக்கு மூன்று முறை ஞானஸ்நானம் கொடுப்பது, இப்படிப்பட்ட காரியங்களைச் செய்வது. டர்பனில் நடந்த கூட்டம் சரியாக இராமல், பெந்தெகொஸ்தே விசுவாசத்தில் உள்ளவர்கள் கருத்துவேற்றுமை காரணமாக சிதறுண்டு போயுள்ளதை மக்கள் கண்ட போது, அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்கள் போவதற்கு இடம் எதுவும் இருக்கவில்லை. 25ஒருக்கால், இங்கு ஒரு எழுப்புதல் இப்பொழுது நமக்கு இருந்திருந்தால், சகோதரரே... இதை நான் இவ்வாறு கூறட்டும். இப்பொழுது தான் நமக்கு ஒரு பெரிய எழுப்புதல் உண்டாயிருந்ததென்றும், சகோதரராகிய நீங்கள் இப்பொழுது தான் மனம் மாறினீர்கள் என்றும், இவ்வகையான சபை தேசத்தில் எங்குமேயில்லை என்றும் வைத்துக் கொள்வோம். நான் தான் அந்த சுவிசேஷகன் என்றும், நான் உங்களை விட்டு செல்கிறேன், உங்களை மறுபடியும் காணமாட்டேன் என்றும் வைத்துக் கொள்வோம். நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுக்கு எவ்வித உணர்வு இருக்குமென்றால்... உங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாது. நீங்கள் மறுபடியும் அந்த சேற்றுக்குள் செல்ல முடியாது. நீங்கள் அதற்குள் மீண்டும் சென்று, உங்கள் மனைவிகள் குட்டை கால் சட்டைகள் அணிவதற்கு அனுமதித்து, நீங்களும் சீட்டுக் கச்சேரிக்கும் நடனங்களுக்கும் சென்று, மறுபடியும் திருப்தி கொள்ள முடியாது. நீங்கள் வெளிச்சத்துக்குள் வந்து விட்டீர்கள்; நீங்கள் அதற்கு மேலாக உயர்த்தப்பட்டுவிட்டீர்கள். “இது என்னுடைய கோட்பாடு'' என்று சொல்வதற்கு பதிலாக, ”இது தேவனுடைய வார்த்தை'' என்று சொல்லும் நிலைக்கு வந்துவிட்டீர்கள். நீங்கள் இது என்ன கூறுகிறது, இது என்ன கூறுகிறது என்று ஆராய்ந்து அதன்படி வாழத் தலைபட்டுவிட்டீர்கள், ஸ்தாபனங்கள் கூறுவதன் படி அல்ல... நீங்கள் அங்கு சென்று அவர்கள் சொல்வதைக் கேட்கிறீர்கள், அவர்கள் சூதாட்டம் - ஆடுவதையும் நடனத்துக்குச் செல்வதையும் காண்கிறீர்கள். அவர்கள் இது, அது, மற்றதை செய்கின்றனர், ஏதோ ஒரு சிறு பிரசங்கம்- மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதைப் பற்றியோ அல்லது பதினைந்து நிமிடங்களில் நிறுத்திக் கொள்ளப்படும். இவையெல்லாம் நீங்கள் பல நாட்களாக ஒவ்வொரு நாளும், வார்த்தையின் பேரில் பசியூட்டும் விழாவில் கலந்து கொண்ட பிறகு, உங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாது. நீங்கள் அதைக் குறித்து அதிக பாரமடைந்து, சபையின் அங்கத்தின் ஒரு சிலர் ஒரு சபையைத் தொடங்கி, அவர்களே சத்தியத்தைப் பிரசங்கிக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றிவிடும். ஏனெனில் உங்கள் இருதயம் தேவனுடைய வார்த்தைக்கென்று கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும். உங்களைப் போலவே சலிப்படைந்த மக்களுக்காக நீங்கள் பரிதாபப்படுவீர்கள். அது உண்மையல்லவா? 26இயேசு வரப்போகிறார் என்று நீங்கள் அறிந்துள்ள போதிலும், அவர் நாளை வரப்போகிறார் என்ற போதிலும், இன்றைக்கு நீங்கள், தேவனுடைய ராஜ்யத்தில் உடன் குடிமக்களாக இருக்கும் மக்கள் ஒன்று சேருவதற்காக ஏதாவதொன்றை செய்ய வேண்டுமென்று விரும்புவீர்கள். அவர்களுடன் ஐக்கியங்கொள்ள நீங்கள் விரும்புவீர்கள். அது உண்மை. எனவே அது இவ்வாறு இருக்குமானால்... ஒரு பெரிய எழுப்புதலை முன்னணியில் நின்று தொடங்க தேவன் எனக்கு உதவி செய்து என்னை உபயோகித்தார் என்று என் முழு இருதயத்தோடும் நான் விசுவாசிக்கிறேன். ஆதி நாட்களுக்கு பிறகு, உலகத்திலே நிகழ்ந்த மிகப் பெரிய எழுப்புதல் இதுவேயாகும். அது உலகம் முழுவதிலும் பரவிற்று. அதை நாம் அறிவோம். அது உண்மை. அந்நேரத்தில் எல்லாம் போய்விட்டிருந்தது. அவர் என்னை நதிக்கரையில் சந்தித்து என்னிடம், நான் பெற்றிருக்கும் செய்தியானது கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாகத் திகழும் என்றார். அச்சம்பவம் நடந்தபோது அங்கிருந்த ஒருவருமே இன்றிரவு இங்கில்லை என்று நினைக்கிறேன். அது ஏறக்குறைய முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. அப்பொழுது அந்த ஒளி பிரத்தியட்சமானது, நான் அங்கு நின்று கொண்டு அதை நேருக்கு நேராகக் கண்டேன், அங்கு நின்று கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் அதை கண்டனர். அது கீழே இறங்கி வந்து, அந்த சத்தம் பேசினது. பல ஆண்டுகள் கழித்து, புகைப்படம் எடுக்கும் கருவிகள் அதன் படத்தை எடுத்தன. நதிக்கரையில் அது எவ்விதமாக காணப்பட்டது என்று நான் உங்களிடம் கூறினேனோ, அதே விதமாக அது புகைப்படத்தில் காணப்பட்டது. சகோதரரே அநேக காரியங்களில் நான் தவறாயிருக்கக்கூடும். ஆனால் ஒரு மாய்மாலக்காரனாக இருக்க விரும்பவில்லை. நான் உங்களுடன் உத்தமமும் நேர்மையுமாயிருக்க விரும்புகிறேன். 27பின்பு, வேறொரு காரியம், நான் போய்விட்டிருந்தால்,இப்படிப்பட்ட ஒரு சபைக் கட்டிடத்தை நாம் கட்டியிருக்க முடியாது. நான் போய்க்கொண்டே இருந்திருந்தால், நமக்கு என்ன கிடைத்திருக்கும் என்று கூறுவது கடினமாகும் (பாருங்கள்?), ஆனால் பரலோகத்தின் தேவன், இங்கு ஒரு சபைக் கட்டிடத்தை கட்ட வேண்டும் என்னும் எண்ணத்தை என் இருதயத்தில் தந்தார். அதன் பிறகு, சுவிசேஷ ஊழியத்துக்கு வெளியே செல்லும்படி அவர் என்னை அழைத்தபோது... நமக்கு மேய்ப்பருக்கு பின் மேய்ப்பர் இங்கு இருந்து வந்திருக்கின்றனர். ஆனால் இப்பொழுது நமக்கு இந்த விசுவாசத்தில் நிலைத்திருக்கும் விலையேறப் பெற்ற சகோதரர் ஒருவர் இருக்கிறார். அவர் செய்தியை விசுவாசிக்கிறார். செய்தியை விசுவாசிக்கும் மற்ற சகோதரரும் நமக்குள்ளனர். (நான் அதிக சத்தமிடுகிறேனா, சகோ. பீலர்?) (சகோ. பிரன்ஹாம் சகோ. பீலருடன் உரையாடுகிறார் - ஆசி). நம்மிடம் பொருள் உண்டு. 28நீங்கள், “நல்லது, சகோ. பிரன்ஹாமே, மகத்தான பரலோகத்தின் தேவனின் அடையாளங்களுக்கும் அற்புதங்களுக்கும் அவர்கள் செவி கொடுக்காமல் போனால், நாம் எப்படி அதைச் செய்யப் போகிறோம்?'' என்று கேட்கலாம். நல்லது, பவுல் அதே கருத்தைக் கொண்டிருந்திருந்தால் என்னவாயிருக்கும்? பாருங்கள்? என்ன... ஆனால் அவன் அப்படி செய்யவில்லை. அந்த கண்காணிப்பாளர்கள் செய்திக்கு விசுவாசமுள்ளவர்களாய் இருந்தனர். பவுல் அடிக்கடி, அவனுடைய சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட பிறகு... அவன் எவ்விதம் சபைகளைச் சந்தித்து, மேய்ப்பர்களுடனும் கண்காணிப்பாளர்களுடனும் பேசி, ஏழை ஜனங்களின் நிவாரணத்துக்காக மக்களிடம் பொருளுதவி பெற்றான் என்றெல்லாம் நீங்கள் வேதாகமத்தில் வாசித்திருக்கிறீர்கள், ஓ, அது மகத்தான ஐக்கியமாய் இருந்தது. ஒரு பெரிய எழுப்புதலாக, பெரிய மகிழ்ச்சிகரமான நேரமாய் இருந்தது. பரிசுத்த ஆவி மக்களின் மேல் விழுந்து, தீர்க்கதரிசன செய்திகள் அளிக்கப்பட்டன. 29பாருங்கள், அவன் பிலிப்புவினிடம் சென்ற போது அவனுடைய குமாரத்திகள், ''நம்முடைய சகோதரன் அங்கு செல்லும் போது, அவருக்காக சங்கிலிகளும் சிறையும் காத்திருக்கின்றது என்று தீர்க்கதரிசனம் உரைத்தனர். அவன் முற்றத்துக்கு வெளியே கூட செல்லவில்லை, அதற்குள் அகபு என்னும் தீர்க்கதரிசி நடந்து வந்து தெருவின் மறுபுறம் நோக்குகிறான். அவன் இதற்கு முன்பு, ஆசியா முழுவதிலும் இருந்த சபைகளுக்கு தலைமை கண்காணிப்பாளனாக இருந்த பவுலைக் கண்டதேயில்லை. அவன் அங்கு நடந்து சென்று, பவுல் தனது அங்கியைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து, பவுலின் கரங்களைக் கட்டி, ''கர்த்தர் உரைக்கிறதாவது, இதை அணிந்திருந்த நபருக்கு சங்கிலிகளும் சிறையும் காத்திருக்கிறது'' என்றான். பாருங்கள், தீர்க்கதரிசனம் உரைத்தல். பவுல் எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும், என் இருதயத்தை இப்பொழுது உடைத்துவிடாதீர்கள். என் ஓட்டத்தை நான் முடிக்கட்டும்'' என்றான். அவன் களைப்புற்றிருந்தான்; அவனுடைய வேலை முடிந்துவிட்டது. கண்காணிப்பாளரின் பொறுப்பை அவன் தீமோத்தேயுவிடம் ஒப்படைத்துவிட்டு, அவன் போய்க் கொண்டிருந்தான். 30நாம் இளைஞர்களைக் குறித்து சிந்திக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். நமக்கு பிள்ளைகள் உள்ளனர். இங்குள்ளவர்களில் பெரும்பாலாருக்கு விவாகமாகி, பிள்ளைகள் உள்ளனர். வளர்ந்து வரும் பிள்ளைகளைக் குறித்தென்ன? பாருங்கள்? அங்கு குடிகாரர்கள் தங்கள் வலைகளை அந்த ஆற்றில் வீசி, பெர்ச் (Perch) என்னும் ஆற்றுமீனை இழுக்கும் போது, நான் அவர்களிடம் சண்டயிடுவது போல்... அங்கே பெரிய நல்ல பெர்ச் மீன்கள் இந்த கூறை உயரம் வரைக்கும் குவியலாக குவிக்கப்பட்டிருக்கிறதை நான் கண்டிருக்கிறேன். அதன் துர்நாற்றம் அந்த ஆற்றைச் சுற்றிலும் இருக்கும். வேட்டை அதிகாரி என்ற முறையில்அங்கு நான் சென்று அவர்களை நிறுத்தப் போனேன். உடனே எனக்கு கடிதம் வந்தது. “அவர்களை விட்டு விடு'' என்று. நீங்கள் என்ன செய்ய முடியும், அது கெண்டகியைச் சேர்ந்தது. கெண்டக்கி வேட்டை அதிகாரி இங்கு வரமுடியாது, ஏனெனில் அது அவருடைய வரம்பைக் கடந்துள்ளது. இந்தியானா வேட்டை அதிகாரிக்கு ஒன்றும் சொல்ல முடியாது. ஏனெனில் அந்த ஆறு கெண்டக்கியைச் சேர்ந்தது. பார்த்தீர்களா; ஒன்றுமே செய்ய முடியாது. நான், ''மீன் பிடிக்க ஆவல் கொண்ட ஒரு மகன் எனக்கு இருக்கிறான். இருபதாண்டுகள் கழித்து அவன் ச்சப் (Chub) என்னும் ஆற்றுமீனைப் பிடித்தால் அவனுடைய புகைப்படத்தை செய்தித்தாளில் போட்டுவிடுவார்கள் - இந்த வலைகள், தூண்டில்கள் மற்றவைகளை அவ்விதமே உபயோகிக்க விட்டுவிட்டால் என்றேன். அப்படித்தான் இப்பொழுது ஆகிக்கொண்டு வருகின்றது. பாருங்கள்? என்ன விஷயம்? வளர்ந்து வரும் பிள்ளைகளைக் குறித்து நாம் சிந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். 31எனவே நமக்கு பின்னால் வரப் போகும் இளைஞர்களைக் குறித்து நாம் கருத்துள்ளவர்களாய் இருக்க வேண்டும், நமது பிள்ளைகளுக்கு ஒரு இடம் இருக்க வேண்டும். நமது பெண் பிள்ளைகள் இவ்வுலகின் காரியங்களில் சிக்கிக் கொள்வதை நாம் விரும்பமாட்டோம். இவர்கள் அவர்களுடைய தாய்மார்களைப் போலவே வளர்க்கப்பட வேண்டுமென்று நாம் விரும்புவோம். அதற்காக நாம் முன்னேற்பாடு செய்ய வேண்டும். நாளை என்று ஒன்று இல்லாமல் போனால் - அது நமக்குத் தெரியாது. நாளை என்று ஒன்று இல்லாமல் போனால், எஜமானனின் பணியில் நாம் ஈடுபடுவதைத் தவிர வேறொன்றையும் செய்யவில்லை. அவர் வரும்போது, நம்முடைய பணியை நாம் செய்து கொண்டிருக்கிறவர்களாக காணப்படுவோம். பாருங்கள்? எனவே இதை நான் ஆலோசனையாகக் கூறுகிறேன். இதை சகோ. நெவிலுக்குத் தெரிவிக்கிறேன். இப்பொழுது உள்ள விதமாகவே இதை தொடர்ந்து நடத்துவோம். அது உள்ள விதமாகவே இதை விட்டுவிடுவோம். இந்த இளம் ஊழியக்காரர்களுக்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். பாருங்கள், நியாயத்தீர்ப்பின் நாளில், இந்த பள்ளத்தாக்குகள் அனைத்துக்கும் எந்த சாக்கு போக்கும் இராது, ஏனெனில் இங்கு எல்லாவிடங்களிலும் நமக்கு சிறிய சபைகள் உள்ளன - வெளிப்புற சபைகள். நேற்றிரவு நான் ஒரு சகோதரனுடைய சபைக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த அனைவரும் வார்த்தை என்னும் அரணுக்குப் பின்னால் இருக்கின்றனரா என்று நான் கேட்டேன். அப்பொழுது எல்லோருடைய கரங்களும் உயர்த்தப்பட்டன. அது எனக்கு நல்லுணர்வை அளித்தது. பாருங்கள்? 32சகோதரரே, நான் நினைப்பது என்னவெனில், இங்குள்ள இந்த சபையைப் போல என் ஊழியத்தில் என் புத்திக்கு எட்டின் வரைக்கும், நான்கு காரியங்கள் செய்யப்படலாம். ஒருக்கால் அது நான்கு காரியங்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த ஒரு நோக்கத்தையே என்னால் எண்ணிப் பார்க்க முடிகிறது. நதிக் கரையில் என்னோடு பேசின அவர்... அது மாத்திரமே புறஜாதி சபைக்கு விடப்பட்டிருக்குமானால்- அதை நாம் சபையைக் குறித்து எழுதப்பட்டுள்ள வெளிப்படுத்தின விசேஷம் ஒன்று, இரண்டு, மூன்று அதிகாரங்களில் உணருகிறோம். சபையானது 4-ம் அதிகாரத்தில் மேலே எடுத்துக்கொள்ளப்படுகிறது. அது 19-ம் அதிகாரம் வரையிலும் திரும்பி வரவில்லை. அது உபத்திரவ காலத்துக்குப் பிறகு, உபத்திரவ காலத்தின் போது தேவன் யூதர்களுக்கு அழைப்பு கொடுக்கிறார். அது உண்மை. ஒரு துளி மழை பூமியில் விழும் முன்பு ஏனோக்கு மேலே சென்றது போல. அவன் போய்விட்ட பிறகு உபத்திரவம் தொடங்கினது. பாருங்கள்? உபத்திரவம் தொடங்குவதற்கு முன்பு நோவா பேழைக்குள் சென்றுவிட்டான். உபத்திரவம் தொடங்குவதற்கு முன்பு லோத்து சோதோமை விட்டு வெளியேறிவிட்டான். பாருங்கள்? அவ்வாறே உபத்திரவ காலத்துக்கு முன்பு சபையானது போய்விட்டிருக்கும். உபத்திரவ காலத்தின் போது புத்தியில்லாத கன்னிகைகள் வலுசர்ப்பத்தினால் வேட்டையாடப்படுவார்கள் (அது வாயிலிருந்து தண்ணீரை ஊற்றிவிட்டது - தண்ணீர் என்பது திரளான ஜனங்களை, சேனைகளைக் குறிக்கும்). அது தேடி, அவளுடைய சந்ததியான மற்றவர்களைக் கண்டுபிடித்து, அவர்களைக் கொன்றுபோடும். அது உபத்திரவ காலத்தில் நடக்கும். ஆனால் சபையோ வீட்டுக்குச் செல்லும். அது நாளை நடக்குமானால், இன்று நாம் பணி செய்வதை அது தடுக்காது. இன்றைய நாளை நாம் எண்ணிப் பார்ப்போம். 33இப்பொழுது, நான் என்ன நினைக்கிறேன் என்றால், அந்த தூதன் என்னிடம், “கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாய் யோவான் ஸ்நானன் அனுப்பப்பட்டது போல் உன் செய்தி...'' என்று கூறினார். நான் இந்த செய்தியை எடுத்துச் செல்ல வேண்டும். அது கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாய் இருக்கும். நல்லது, அது அப்படி இருக்குமானால், நாம் உண்மையில் மிக மிக அருகாமையில் இருக்கிறோம். சகோதரரே, ஏனெனில் நேரமும் செய்தியின் வெளிச்சமும் ஏறக்குறைய இப்பொழுது போய்விட்டது. 34பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவி விழுந்து அந்த சகோதரர் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்ட போது,சிறிது காலத்திற்குள்ளாகவே செய்தியானது மங்கத் தொடங்கி, அவர்கள் கிறிஸ்துவுக்காக உறுதியாய் நின்று சபைகளை நிறுவி, அவருடைய வருகையை எதிர் நோக்கியிருந்தனர் என்பதை கவனித்தீர்களா? அதே காரியம் தான் இன்றைக்கும் சம்பவிக்கிறது. ''பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்தவைகளை திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் உரைக்கிறார்'' என்னும் வேதவாக்கியம் உண்மையாயிருக்குமானால், அதுவே செய்தியாயிருக்குமானால், (தேவன் என்னை மன்னிப்பாராக, எனக்குத் தெரியவில்லை) , அப்படியிருக்குமானால், உண்மையில் காலம் சமீபமாயிருக்கிறது, ஏனெனில் செய்தியானது முடிவடைந்துவிட்டது. 35அன்றொரு நாள் நான் ஒரு சொப்பனம் கண்டேன். அதில் சிந்தனைகளைப் பகுத்தறிவதற்கென, திரளான என் நண்பர்கள் - ஆயிரக்கணக்கானோர் - கூடியிருந்த கூட்டத்துக்கு நான் சென்றிருந்தேன். ஒரு ஆள் வந்து என்னைக் கூட்டிக்கொண்டு சென்றார்... (பில்லி என்னை வழக்கமாக கூட்டிக்கொண்டு செல்வதுண்டு, அவன் என்னிடம் பேசாததனால்) இந்த மனிதன் தகாத காரியங்களைப் பேசிக் கொண்டு வந்தார், அதன் காரணமாக, நான் அங்கு அடைவதற்கு முன்பாக, அபிஷேகம் அனைத்தும் என்னை விட்டுப் போய்விட்டது. அப்பொழுது, நான், “நல்லது, அங்கு நான் சென்று செய்தியைப் பிரசங்கித்து, ஜனங்களிடம், 'ஸ்தாபனங்களுடன் விளையாடிக் கொண்டிருக்காதீர்கள்” என்றும், “அவைகளை விட்டு வெளியே வாருங்கள்” என்றும் சொல்வேன் என்று எண்ணினேன். நான் மேடையை அடைந்தேன். அப்பொழுது சொப்பனம் என்னைவிட்டகன்றது. அதன் அர்த்தம் என்னவென்று எனக்கு விளங்கவில்லை, ஆனால் நான் தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். எனக்குத் தெரியவில்லை. 36ஒருக்கால் அது என் பாதையின் முடிவாக இருக்கக்கூடும்; அது கர்த்தருடைய வருகையாக இருக்கக்கூடும்; அது நாளின் மாற்றமாக இருக்கக்கூடும்; அது அந்த மகத்தான ஒருவரின் வருகையாக இருக்கக்கூடும், ஏற்கனவே வந்தவரைத் தவிர வேறொருவர் வரவேண்டுமென்றிருந்தால், அது அதுவாக இருக்கலாம். நாம் எதையெல்லாம் இப்பொழுது கருதினோமோ, அவையெல்லாம் இருக்கக்கூடும். இன்றிரவு தேவனுக்கு முன்பாகவும் சகோதரராகிய உங்களுக்கு முன்பாகவும் நான் நிற்கையில், அது என்னவென்று எனக்குத் தெரியாது. என்னால் அது என்னவென்று உங்களிடம் கூற இயலாது. எனக்குத் தெரிந்திருந்தால், உங்களிடம் கூறியிருப்பேன், அது எந்த வழியாகச் செல்கிறது என்று நான் அறிந்திருந்தால், அதை நான் கூறியிருப்பேன், ஆனால் எனக்குத் தெரியாது. என்னால் கூற இயலாது. ஒரு துளி நடத்துதலும் இல்லாமலே நான் இப்பொழுது கூட்டங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். நான் கூட்டங்களுக்குப் போகும் காரணம், எனக்கு சும்மா உட்கார்ந்து கொண்டிருக்க பிரியமில்லை. வேறொவரையும் போலவே எனக்கும் காட்டுக்குச் செல்ல பிரியமாயிருக்கிறது. இந்த விஷயத்தில் நான் தவறாயிருந்தால், தேவன் என்னை மன்னிப்பாராக, 37மூன்று காரியங்கள் எனக்கு சம்பவிக்க வகையுண்டு. இது என் பாதையின் முடிவாக இருந்து, மற்ற ஒருவர் பொறுப்பை எடுத்துக் கொள்ளக் கூடும். அவர் அதைப் பெற்றுக் கொள்ள, நான் அவருக்காக பாதையை திறந்து விட்டேன். பிரசங்கம் செய்ய வரப்போகிறவர் வார்த்தையில் உறுதியாக நின்று, ''பிள்ளைகளின் விசுவாசத்தை பிதாக்களிடத்திற்கு திருப்புவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது என் பாதையின் முடிவாக இருக்கலாம். அல்லது அவர் என் ஊழியத்தை வெளிநாடுகளில் நடத்தும் சுவிசேஷ ஊழியமாக மீண்டுமாக மாற்றலாம். அல்லது, அவர் என்னை சுவிசேஷகனாக இனி ஒருபோதும் அழைக்காமல், என்னை எங்காவது வனாந்தரத்துக்குக் கொண்டு சென்று என்னை அபிஷேகித்து, வரவிருக்கும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அந்த ஒருவராக'' அனுப்பலாம் என்று நான் நினைக்கிறேன். இவைகளில் ஏதாவது ஒன்றாக அது இருக்கலாம். நான் போய்க் கொண்டிருந்த வழியில் இனி நான் செல்லமுடியாது. ஏனெனில் நான் - ஜனங்கள் என்னை விசுவாசித்து வந்திருக்கின்றனர். இதை நான் கூற வேண்டியவனாயிருக்கிறேன் (மனிதருக்கு முன்பாக இதை கூறுகிறேன்), அநேக சமயங்களில், ஜனங்கள் என்னைத் தீர்க்கதரிசியாக கருதியுள்ளனர். நான் அவ்விதம் என்னைக் கருதுவதில்லை. இல்லை, ஐயா, நான் கருதுவதில்லை. நான்... நான் தாழ்மையுள்ளவனாக இருக்க வேண்டும் என்பதற்காக இதைக் கூறவில்லை. நான் உண்மையைக் கூறவேண்டும் என்பதற்காகவே இதைக் கூறுகிறேன். என்னைக் கர்த்தருடைய தீர்க்கதரிசியாக நான் கருதிக்கொள்வதில்லை. எனக்கு அந்த கெளரவம் கிடையாது. 38வரப்போகும் தீர்க்கதரிசிக்கு ஒரு அஸ்திபாரத்தைப் போட உதவுவதற்காக கர்த்தர் என்னை சிறு விசேஷித்த காரியங்களில் உபயோகித்து வந்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். நான் இயங்கும் விதமாக ஒரு தீர்க்கதரிசி இயங்கமாட்டான். அது உங்களுக்குத் தெரியும், தீர்க்கதரிசி ஒரு சுவிசேஷகனல்ல, சுவிசேஷகனும் ஒரு தீர்க்கதரிசியல்ல. மேய்ப்பன் ஒரு சுவிசேஷகனல்ல, சுவிசேஷகனும் ஒரு மேய்ப்பனல்ல. தேவன் சபையில் முதலாவது அப்போஸ்தலர்களையும், பிறகு தீர்க்கதரிசிகளையும், பிறகு போதகர்களையும், பிறகு மேய்ப்பர்களையும் ஏற்படுத்தியிருக்கிறார். தேவன் அவர்களை சபையில் நியமித்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு உத்தியோகத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால் அன்று காலை நான் மூலைக்கல்லை நாட்டின் போது (இப்பொழுது நீங்கள் ஆவிக்குரியவர்களாயிருந்தால், இதை கிரகித்துக் கொள்வீர்கள்)- ஜனங்களுடைய கூக்குரலின் காரணமாக அந்த மூலைக்கல்லை உடைத்து, அந்த புத்தகத்தை எடுத்து நீங்கள் படிப்பீர்களானால், அதில், ''சுவிசேஷகனுடைய வேலையைச் செய்'' என்று சொல்லப்பட்டுள்ளது. அவர் என்னை சுவிசேஷகனாக இருக்க அழைக்கவில்லை, ஆனால், ''நீ சுவிசேஷகனுடைய வேலையைச் செய். ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்திறவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக் கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுகதைகளுக்குச் சாய்ந்து போகுங் காலம் வரும்'' என்றார் பாருங்கள்? அந்த வசனத்தை அவர் மேற்கோள் காட்டி, அது வேதாகமத்தில் எங்குள்ளது என்றும் கூறினார். அவர் அதை மூன்று முறை உரைத்தார். நான் வேதாகமத்தை எடுத்து அவர் சொன்ன இடத்திற்குத் திருப்பினேன். அது அங்கே இருந்தது. பெந்தெகொஸ்தே ஒருத்துவக்காரர், பெந்தெகொஸ்தே சபைகள் ஆகிய இரண்டு வாளிகளைக் குறித்து நீங்கள் அறிவீர்கள். அவைகளை நான் இனக்கலப்பு செய்யவில்லை. அவைகளை அவைகள் இருந்த இடத்திலேயே நட்டேன், ஏனெனில் அவர்கள் இருவருமே தவறு என்பது என் கருத்து. ஆனால் அவைகளை விட்டுவெளியேறினவுடனே, நான் சிலுவையண்டை அறுவடையின் போது இருந்தேன். 39உத்தமமாயுள்ள எவரையும் தேவன் மதிக்கிறார். பேதுரு அவ்வாறு கூறினான். தேவன் பட்சபாதமுள்ளவர் அல்ல என்பதை அவன் அறிந்து கொண்டான். கொர்நேலியுவின் வீட்டில் அவர்கள், முதலில் நடந்தது போலவே, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட போது, எல்லா ஜாதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. பாருங்கள்? தேவன் பட்சபாதமுள்ளவர் அல்ல. மிகவும் உத்தமமுள்ள மனிதன் உத்தமமாகத் தவறாயிருப்பானானால் - ஆனால் அவன் உத்தமமாயிருந்தால் - தேவன் அவனை எங்காவது ஒளியினிடத்தில் நடத்துவார். அவன் அதனிடம் வருவான். ஏனெனில் தேவன் அதைச் செய்ய கடமைப்பட்டவராயிருக்கிறார். கர்த்தருடைய வருகையை ஒரு மிகப்பெரிய காரியமாக நாம் கருதுகிறோம், ஆனால் செய்தியோ இன்னும் செல்லவில்லை. கர்த்தர் திரும்ப வரும்போது முன் குறிக்கப்பட்ட ஒரு கூட்டம் இங்கிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருக்கால் அது ஒரு டஜன் பேருக்கும் அதிகமாக இல்லாமல் இருக்கலாம். பாருங்கள்? நமக்குத் தெரியாது, அது ஒருக்கால் பத்து கோடி பேர்களாக இருக்கலாம், அல்லது பத்தாயிரம் பேர்களாக இருக்கலாம். ஆனால் முன்குறிக்கப்பட்டவர்கள் இச்செய்தியைக் கேட்டு அதை விசுவாசிப்பார்களானால், இச்செய்தி தேவனால் அனுப்பப்பட்டதாக இருக்குமானால்; அப்படித்தான் நாம் விசுவாசிக்கிறோம். 40இப்பொழுது, அப்படியானால் நாம் காலத்தின் முடிவில் வந்தடைந்திருக்கிறோம்... தேவன் என்னை அழைத்திருப்பாரானால் (இப்பொழுது கவனியுங்கள், இது திரும்பச் சொல்லக் கூடியதல்ல), தேவன் என்னை அவருடைய தீர்க்கதரிசியாக இருக்க அழைத்திருப்பாரானால், நான் நிச்சயமாக அந்த உத்தியோகத்தை வகிக்கவில்லை. தீர்க்கதரிசிகள் சுவிசேஷகப் பணியைச் செய்வதில்லை. தீர்க்கதரிசி ஒருவன் தன்னை வனாந்தரத்தில் மறைத்துக் கொண்டு தேவனுடன் தனித்திருந்து, அவன் என்ன செய்ய வேண்டுமென்று தேவன் அவனுக்கு உத்தரவு அருளும் வரைக்கும் அங்கிருக்கிறான்; அதன் பிறகு அவன் அங்கிருந்து புறப்பட்டு வெளிவந்து, தன் செய்தியை அளித்துவிட்டு, மறுபடியுமாக வனாந்திரத்திற்குள் சென்று விடுகிறான். அவன் ஒரு சுவிசேஷகன் அல்ல, அவன் சுவிசேஷகர்களைப் போல கூட்டங்களை நடத்தி, மற்றவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதில்லை. அவன் சுவிசேஷகர்களைப் போல் போதிப்பதில்லை. அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைப் பெற்றிருக்கிறான். அதுதான், அவ்வளவுதான். அவன் அதை உரைத்துவிட்டு, துண்டுகள் விழ வேண்டிய இடத்தில் விழுவதற்காக அவைகளை எறிந்துவிட்டு, திரும்பிப் போய் விடுகிறான். அவன் எங்கிருக்கிறான் என்று யாருக்குமே தெரியாது, அவன் எங்கோ தனிமையில் இருக்கிறான். 41இப்பொழுது என்னால் இருக்க முடியாது... அல்லது அவர் என்னை தீர்க்கதரிசியாக இருக்க அழைத்திருப்பாரானால், நான் சுவிசேஷகனாக இருக்கமுடியாது. நான் சுவிசேஷகனாக இருக்க அவர் என்னை அழைத்திருப்பாரானால், நான் தீர்க்கதரிசியாக இருக்க முடியாது. நான் கூறுவதன் அர்த்தம் உங்களுக்கு விளங்குகிறதா? எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர் முதலில் என்னிடம் ஜனங்களின் கைகளைப் பிடித்து அவர்களுக்காக ஜெபிக்கக் கூறினபோதும், அதன் பிறகு அவர்களுடைய இருதயத்தின் இரகசியங்களை அறிந்த போதும், மற்றெல்லா காரியங்களையும் நான் பயபக்தியோடு செய்து வந்திருக்கிறேன். சகோதரரே, அவை பிழையற்றவைகளாக இருந்து வந்துள்ளன. அது உண்மையென்று உங்களுக்குத் தெரியும். உங்கள் ஒவ்வொருவருக்கும் அது தெரியும். பாருங்கள்? அது உலகம் முழுவதும் முழக்கமிடும் என்று அவர் கூறினார். அவர் கூறின்படியே அதை செய்து நிறைவேற்றினார். வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு தேசமும் அதைக் கேட்டுவிட்டது. எல்லாவிடங்களிலும் - செய்தித் தாள்கள், ஒலி நாடாக்கள் பதிவு இவைகளின் மூலமாக - உலகெங்கிலும் அவர் எப்படி இதைச் செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் உலகின் எல்லா பாகங்களிலுமிருந்து கடிதங்கள் வந்த வண்ணமாய் உள்ளன. தொலை தூரத்திலுள்ள தாய்லாந்து மக்களும், ஆப்பிரிக்க பழங்குடியினரும் - மிஷனரிமார்கள் இந்த பழங்குடியினரிடையே செய்திகளடங்கிய ஒலிநாடாக்களுடன் திரளாகச் சென்று, வார்த்தையின் அர்த்தத்தை விளக்கிக் கூறியுள்ளனர். இப்பொழுது உலகம் முழுவதிலும் (பாருங்கள்?) நாம் இதைக் குறித்து கேள்விப்படுகிறோம். இப்பொழுது அவர்கள் - சபையானது உலகம் பூராவிலும், எல்லாவிடங்களிலும் முன் குறிக்கப்பட்டவர்களைக் கொண்டுள்ளது. இரண்டு பேர் படுக்கையிலிருப்பார்கள். இரண்டு பேர் வயலில் இருப்பார்கள், பாருங்கள்? ஒருவன் எடுத்துக் கொள்ளப்பட்டு, மற்றவன் விடப்படுவான். 42இப்பொழுது, நான் சுவிசேஷகனுடைய வேலையைச் செய்துவிட்டபடியால் (இதுவே என் வேண்டுகோள்), நான் என் வேலையை சரிவர செய்து தேவனுக்குப் பிரீதியாக இருந்திருக்குமானால் - நான் அவருக்குப் பிரீதியாய் நடந்து கொண்டேன் என்று நம்புகிறேன். என் தவறுகள் அனைத்துக்கும் நான் மன்னிப்பு கோருகிறேன். அப்படியிருக்குமானால், அவர் என்னை சுவிசேஷக களத்திலிருந்து அழைத்து, தம்முடைய தீர்க்கதரிசியாக்கிக் கொள்வார். அப்படியிருக்குமானால், நான் சுவிசேஷகப் பணியை விட்டுவிடுவேன். அவர் என்னை தீர்க்கதரிசியாயிருக்க அழைப்பாரானால், நான் சுவிசேஷகனாக இருக்க முடியாது. நான் சுவிசேஷகனாக இருந்தால், தீர்க்கதரிசியாக இருக்க முடியாது. நான் இவ்விரு உத்தியோகங்களையும் ஒன்றோடொன்று கலந்து விடுகிறேன். அதுதான் எனக்கு எப்பொழுதும் விளங்காத புதிராக இருந்தது. மேடையில் நின்று கொண்டு... அது எப்பொழுதுமே நன்றாக இல்லை. ஆனால் வெற்றிகரமாக இருந்தது. தேவன் அதை உபயோகித்தார். அது தேவனுடைய நேரடியான சித்தம் (direct will) அல்ல என்று நான் எண்ணினேன். அது அவர் அனுமதித்த சித்தம் (permissive will). மேடையின் மேல் நின்று கொண்டிருக்கும்போது, கிடைக்கப் பெறும் ஓரிரண்டு தரிசனங்கள் என்னை பெலனற்றுப் போகச் செய்துவிடும். பாருங்கள்? நீங்கள் ஒருவரிடம், அவர் எவ்விதம் தன் வாழ்க்கையை நேராக்கிக் கொள்ள வேண்டும், அவர் என்ன செய்ய வேண்டும் என்று கூறினால், அடுத்தாற்போல் நின்று கொண்டிருப்பவரும் அதையே எதிர்பார்கிறார். அவரிடம் கூற முடியாது. மற்றவர்கள் நான் ஒரு துரோகி என்றும், பின் மாற்றமடைந்தவன் என்றும், பிசாசு என்றும் கருதுகின்றனர். ஏனெனில் அவர்கள் அறிய விரும்புவதை நான் கூறாததனால், பாருங்கள், அதுவல்ல உத்தியோகம் - அந்த வகையில் ஒரு தீர்க்கதரிசி இயங்குவதில்லை. 43ஒரு தீர்க்கதரிசி வனாந்தரத்தில் தங்கியிருந்து, அங்கிருந்து புறப்பட்டு மருத்துவமனைக்கு அல்லது வேறோரிடத்துக்குச் சென்று, “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று தான் உரைக்க வேண்டியதை உரைத்துவிட்டு திரும்பிச் சென்றிடுவான். அவன் ஒரு சுவிசேஷகன் அல்லவே அல்ல. அவன் கூட்டங்கள் நடத்தி காரியங்களை விவாதிப்பதில்லை. அவன் யாரிடம் அனுப்பப்படுகிறானோ, அவருக்கு கர்த்தருடைய வார்த்தையை உடையவனாயிருக்கிறான். அவன் வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டால், அவன் வெள்ளை மாளிகையின் முன் நின்று கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உரைக்கிறான். அது மாகாணத்தின் ஆளுநருக்கு அல்லது வேறு யாருக்காவது இருந்தால் அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உரைக்கிறான். அவன் சுவிசேஷகனைப் போல ஒரு கூட்டம் சபைகளுடன் ஈடுபட்டு, அவர்கள் வந்து வார்த்தையை ஏற்றுக் கொள்ளச் செய்ய முயன்று, இவைகளைப் பிரசங்கிப்பதில்லை. அவன் ஒரு சுவிசேஷகன் அல்ல. எனவே பாருங்கள், சகோதரரே, அதன் காரணமாகத்தான் நான் என்னை தீர்க்கதரிசி என்று அழைத்துக் கொள்வதில்லை. நான் அந்த உத்தியோகத்தில் இல்லை. பாருங்கள்? நான் கூறுவது உங்களுக்குப் புரிகிறதா? இப்படியாக நீண்ட காலமாக அநேக காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நான் நம்புவது என்னவெனில்... உங்களுடைய நேரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. இன்றிரவு வார்த்தையை வாசித்து சிறிதளவு அதன் பேரில் பேச விரும்புகிறேன். 44இப்பொழுது, நான் செய்து கொண்டிருப்பது இதுதான். நான் இந்தியானாவில் வசிக்கவேண்டுமென்று நினைக்கவேயில்லை. நான் இடம் விட்டு இடம் திரிபவன். நான் ஓரிடத்துக்கு வசிக்கச் சென்று அதன்பிறகு, “நான் வேறோரிடம் சென்று வசிப்பேன்'' என்று நினைப்பதுண்டு. என்னால் ஓரிடத்தில் நிலைத்து வசிக்க முடியாது. வேறோரிடத்துக்குச் சென்று, அதன்பின்பு, ”அங்கு சென்று வசிப்பேன் என்று நினைப்பேன். நான் அவ்விதம் செய்யும்போது... என் மனைவி என்னை (அவர்கள் பாடும் அந்த பாடல் என்ன?) “அமைதியற்ற காற்றுகள்” (Restless winds), அந்த பாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்களில் பெரும்பாலோர் அதைப்பாடக் கேட்டிருக்கிறீர்கள். நல்லது, அவள் அப்படித்தான் என்னை அழைக்கிறாள், “அமைதியற்ற காற்றுகள்” என்று. நான் இங்கு வந்தவுடனே, ''நான் வீட்டுக்குச் செல்ல வேண்டும், என் மனைவி பிள்ளைகளைப் பார்க்கவேண்டும்'' என்று எண்ணுவதுண்டு. நான் இங்கு வந்து பிரசங்கம் செய்து விட்டு, வீடு திரும்பி மனைவியை முத்தம் செய்து பிள்ளைகளைத் கட்டித் தழுவி, முற்றத்துக்கு சென்று புல்லை செதுக்கும் போது, விமானம் பறந்து செல்வதைக் கண்டால் என் முகத்தில் படிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே அந்த விமானத்தில் செல்ல வேண்டும் என்று எண்ணுவேன். நான் எங்காவது சென்று கொண்டேயிருக்க வேண்டும். நான் ஓரிடத்துக்கு செல்ல வேண்டுமென்று நினைப்பேன். அங்கு சென்று சிறிது நேரம் பிரசங்கித்து விட்டு சுற்றுமுற்றும் பார்ப்பேன். மற்றொரு விமானம் சென்றால், எனக்கு அந்த விமானத்தில் போக வேண்டும். பாருங்கள், நிலையாக தங்கும் இடம் எனக்குக் கிடையாது. என்னால் அவ்வாறு செய்ய முடியாது. நான் அமைதியற்றவனாய் இடம்விட்டு இடம் மாறிக் கொண்டிருப்பவன். ஏதோ ஒன்று... என்னால் அதை தவிர்க்க முடியாது. அது எனக்குள் உள்ள ஒன்று, அதை நான் செய்யவேண்டுமென்று எனக்குத் தெரியும். 45சபையை நான் இந்நிலையில் விட்டுவிட்டு இங்கிருந்து நடந்து வெளியேறுவது எனக்கு பயங்கர உணர்ச்சியை விளைவிக்கும். இங்கு அமர்ந்துள்ள மனிதர்களாகிய உங்களுடன் அந்த மகிமையான தேசத்தில் நித்தியத்தைக் கழிப்பேன் என்று நான் விசுவாசிக்கிறேன் என்பதை எண்ணிப்பாருங்கள். நம்மிடம் அருமையான மனிதர், திடமான ஜனங்கள் உள்ளனர். மிக அண்மையில், இச்சபையில் ஜனங்களின் மத்தியில் ஒரு எழுப்புதல் உண்டாயிற்று. அவர்கள் மத்தியில் ஆவியானவர் வந்து அவர்களுக்கு வரங்களை அளித்தார். அவர்கள் மத வெறியில் (Fanaticism) சென்று விடுகிறார்களா என்று அவர்களைக் கவனித்துக் கொண்டேயிருந்தேன். அவர்கள் அவ்வழியில் போகத் தொடங்கின ஒவ்வொரு முறையும் ஆவியானவர் அவர்களைத் தடுத்து அவர்களை இங்கே பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு வந்தார். நான் ''கர்த்தருக்கு ஸ்தோத்திரம்'' என்று எண்ணினேன். பாருங்கள் உங்கள் நிலையில் நீங்கள் நிலைத்திருங்கள், அது அருமையாயிருக்கும். பாருங்கள்? இப்பொழுது, இதுவே என் கருத்தாகும். நான் எங்காவது போக வேண்டும் என்பது சாத்தியமானால்... நான் எங்கே போவேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இங்கே என்னால் சும்மா உட்கார்ந்து கொண்டு இருக்க முடியாது. என்னால் இங்கே தங்கியிருக்க முடியாது. முடியவே முடியாது. நான் எங்காவது சென்றாக வேண்டும். அந்த இடத்திலும் சில நாட்கள் மாத்திரமே தங்கிவிட்டு, நான் வேறொரு இடத்துக்குச் சென்றுவிடுவேன். நான் எங்காவது சென்றாக வேண்டும். நான் எங்கே போகிறேன் என்று எனக்குத் தெரியாது. ஆபிரகாமுக்கும் கூட அவன் போகிற இடம் தெரியவில்லை. அவன் நதியைக் கடந்து புறப்பட்டு சென்றான். அவ்வளவுதான். 46இந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டுமென்று நான் நினைக்கிறேன் என்றால்... நமக்கு ஒருசபை அவசியம் என்று நான் விசுவாசிக்கிறேன். நமக்கு தேவனுடைய வீடு அவசியம் என்று நினைக்கிறேன். நீங்கள், ''நல்லது, கர்த்தர் வரப்போகும் நேரத்தில் எல்லா பணத்தையும் அதில் செலவிடுவதா?'' எனலாம். நல்லது, கர்த்தர் வருகிறார் என்றால், இந்த பணத்தை வைத்துக் கொண்டிருப்பதனால் என்ன பயன்? பாருங்கள்? ஜனங்கள் சபைக் கட்டிடத்தைக் கட்டுவதைக் கட்டுவதற்காக இந்த பணத்தை ஒதுக்கி வைத்திருக்கும்போது (அன்றிரவு நான் இங்கு வாக்கு எடுத்தபோது அது 100% ஆக இருந்தது) , அதை கட்டுவோம்! அதை கட்டுவோம் என்று நான் கூற முற்படுகிறேன். ஆம், ஐயா! இதை நான் முன்பு வெளிப்படையாகக் கூறினதில்லை, ஆனால் இப்பொழுது மனிதராகிய உங்கள் முன்னிலையில் இதைக் கூற விரும்புகிறேன். இங்கு ஸ்திரீகளை நான் அழைக்கவில்லை. ஏனெனில் ஒரு ஸ்திரீ இந்தப் பக்கமும், வேறொரு ஸ்திரீ அந்தப் பக்கமும் சாய்வார்கள். அதைச் செய்வதற்கான காரணத்தை உங்களிடம் கூற முயல்கிறேன். கர்த்தர் அடுத்த வாரம் வருவாரானால், இந்த வாரம் நாம் சபைக் கட்டிடத்தைக் கட்டத் துவங்குவோம். நிச்சயமாக, அவருக்கு நாம் காண்பிப்போம். நம்முடைய கடமையின் பாதையில் நாம் நின்று கொண்டிருப்போம். ஆம்,ஐயா. 47பிறகு, சபைக் கட்டிடம் கட்டி முடிந்துவிட்டால், ஏன்... அவர்... அவர் பத்து ஆண்டுகள் கழித்து வருகிறார் என்றால்? அவர் இருபது ஆண்டுகள் கழித்து வருகிறார் என்றால்? அல்லது நூறு ஆண்டுகள் கழித்து அவர் வருகிறார் என்றால்? அது என்னவாயினும், அவர் எப்பொழுது வருகிறார் என்பதைக் குறித்து நமக்கு பாதகமில்லை. அதற்கு முன்பே அவர் நமக்காக வருவார் என்று நாம் அறிந்திருக்கிறோம். ஏனெனில் நாம் இன்னும் நூறாண்டு காலம் உயிர் வாழ முடியாது. அவர் நமக்காக வருவார், ஆனால் நாம் மற்றவர்களை பிரிந்து செல்லும்படி நேரிடும். நான் இவ்வாறு சிந்தித்தேன். ஏன் இங்குள்ள சபை நிர்வாகத்தினர் (Church Board) (நான் இப்பொழுது அவர்களிடம் பேசுகிறேன்) அந்த சபையைக் கட்டும்படி விட்டுவிடக்கூடாது? அவர்கள் அதை இங்கு கட்டி, அழகுபடுத்தி, ஜனங்கள் வருவதற்கு ஒரு நல்ல இடத்தை அமைக்கலாம். சகோ. நெவில் சபையின் மேய்ப்பராக இருக்கலாம் என்று நான் ஆலோசனை கூறுகிறேன் - சபையானது அவரை மேய்ப்பராக வைத்துக்கொள்ள விரும்பும் வரைக்கும். அது சபையின் வோட்டு உரிமையாக இருக்கிறது. அவர் வரும்படி விரும்பி அவர் அந்த பணியை வகித்து, விசுவாசத்தில் நிலைத்திருந்து, கர்த்தருடைய வழிநடத்துதலை பெற்றிருக்கும் வரைக்கும் - அவர் மேய்ப்பராக இருக்க கர்த்தருடைய வழிநடத்துதல் அவருக்கு இருந்து, சபையோர் அவருக்கு வோட்டு போட்டு அவரை அவ்விதமே தேர்ந்தெடுப்பார்களானால் அவர் சபையின் மேய்ப்பராக இருக்கலாம். 48இங்குள்ள ஒவ்வொரு மனிதருக்கும் - சகோ. க்ரேஸ், சகோ. ஜூனியர் போன்ற மற்ற மனிதருக்கும், மற்றும் இங்குள்ளவர் அனைவருக்கும் - நான் கூற விரும்புவது என்னவெனில், உங்கள் பணியில் நிலைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டாயிருந்து, இந்த சபையுடன் இணைந்துள்ள வரைக்கும்... நீங்கள் போய் ஒரு மெதோடிஸ்ட் சபையை சந்திக்க முடியாது. அவர்களுடன் உங்களுக்கு ஐக்கியம் இருக்க முடியாது. நீங்கள் பாப்டிஸ்ட் சபைக்குச் சென்று அவர்களிடம் அந்நிய பாஷைகளில் பேசுவதைக் குறித்தும் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பதைக் குறித்தும் பேசமுடியாது, அவர்கள் உங்களை அவ்வளவு வேகமாக உதைத்துத் துரத்திவிடுவார்கள் (சகோ. பிரன்ஹாம் விரல்களை சொடுக்குகிறார் - ஆசி). அது உண்மை. நீங்கள் அங்கு உட்கார்ந்திருப்பீர்களானால், நீங்கள் காகங்களின் கூட்டத்தின் மத்தியில் புறாவைப் போல் இருப்பீர்கள். உங்களுக்கு ஐக்கியம் இருக்கவே இருக்காது. நீங்கள் மரித்துப் போவீர்கள். நான் மெதோடிஸ்களையும் பாப்டிஸ்டுகளையும் இப்பொழுது கேலி செய்யவில்லை, அதை நினைவில் கொள்ளுங்கள். நான் அவ்விதம் கூறவில்லை. நான் ஒப்பிட்டுக் கூறுகிறேன். மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள் இவர்களிடையே அநேகர் நல்லவர், பயபக்தியுள்ளோர் உள்ளனர். நான் ஐக்கியத்தைக் குறித்துப் பேசுகிறேன். அங்கு சகோதரர், அவருடைய பெயர் என்ன? இன்றிரவு பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் சுவிசேஷகர்? சகோ. ஜெ. டி. பார்னல், அவருடன் சகோ. பீலர். இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்த சகோதரர்... அவர்களில் சிலர். இங்குள்ள உங்களில் அநேகர் , உங்கள் வாழ்வில் அழைப்பைப் பெற்ற தேவனுடைய மனிதர், நீங்கள் ஏதாவதொன்றைச் செய்து கொண்டிருக்கலாம். சும்மா உட்கார்ந்து கொண்டிருக்காதீர்கள். நாம் ஏதாவதொன்றை செய்துகொண்டிருப்போம். நீங்கள் ஒரு ஆத்துமாவையாவது இரட்சிப்புக்குள் கொண்டு வராமலிருந்தால், அந்த ஒரு ஆத்துமாவை இரட்சிப்புக்குள் கொண்டு வாருங்கள் - நாம் ஒவ்வொருவருமே... 49இப்பொழுது, நான் நினைப்பது என்னவெனில், இந்த சபையானது. மனிதராகிய நீங்கள், இந்த சபைக் கட்டிடத்தைக் கட்டி முடிந்தபிறகு, இதை உங்கள் தலைமை அலுவலகம் போல் உண்டாக்கிக் கொண்டு, இங்குள்ள சகோ. நெவில் உங்கள் மத்தியில் மூத்த மூப்பராக ஏற்படுத்திக் கொள்ளலாம். பாருங்கள்? சில வேளைகளில் உங்கள் சபையில் நீங்கள் விவாதிக்க இயலாத பிரச்சினை எழும்புமானால், அதை சகோ. நெவிலிடம் கொண்டு வந்து, நீங்கள் ஒருமித்து அதை விவாதியுங்கள். அங்கே... உங்களால் எந்த தீர்மானத்துக்கும் வர இயலாமல் போனால், நான் விரைவில் வந்து விடுவேன், அப்பொழுது நாம் எல்லோரும் சேர்ந்து அதற்கு தீர்வு காணுவோம். அதன் பிறகு அங்கே, உங்கள் சொந்தக் குழுக்களில் மற்ற ஊழியர்களுக்குப் பயிற்சி அளியுங்கள் - ஊழியத்திற்கென நீங்கள் வாழ்விலே அழைப்புள்ளதாக நீங்கள் காணும் மனிதருக்கு - அந்த இளைஞர்களுக்குப் பயிற்சி அளியுங்கள். அவர்களை இந்த மூப்பரிடம் கொண்டு வாருங்கள். நீங்கள் அனைவரும் ஊழியக் கூட்டங்களில் ஒருமித்து உட்கார்ந்து, தேவனுடைய ஆழமான காரியங்களை அங்கு போதியுங்கள். செல்லத்தகாத பாதையின் முடிவுக்குச் செல்லாதீர்கள். யாரையாவது ஒருவரை, உங்களுக்கு நம்பிக்கையுள்ள ஒருவரை, உங்களுக்குத் தலைவராக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சில வேளைகளில் அவர் காணும் விதத்தில் நீங்கள் காணவில்லையென்றால், அதனால் பரவாயில்லை, எப்படியாயினும் நீங்கள் விசுவாசத்தில் இருக்கிறீர்கள், முன்னேறிச் செல்லுங்கள். நாம் ஒன்றாக கூடும்போது நாம் அனைவரும் - நாம் ஜெபம் செய்வோம். அப்பொழுது தேவனுடைய பகுத்தறியும் வரம் இறங்கி வந்து, அது என்னவென்று தெளிவாக எடுத்துரைத்து (பாருங்கள்?) அதை எப்படி செய்வதென்பதை அவர் தெரியப்படுத்துவார். அங்கே, சபைகள் போய் கேட்கலாம். ஒரு கூட்ட மனிதருக்கு பயிற்சியளித்து... நான் எங்காவது சுவிசேஷக பணியில் ஈடுபட்டிருப்பதால், அவர்களை உலகம் முழுவதிலும் வெவ்வேறு இடங்களில் அமர்த்தலாம். 50நான் இந்தியாவுக்குத் திரும்பிப் போவேனென்றால் அங்கு நான் ஜனங்களிடம் சொல்வேன். அங்கு ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். அங்கு ஓரிரண்டு வாரங்கள் தங்கி, அவர்கள் ஊழியத்தைப் பார்க்கலாம்; அவர்கள் அதை வாஞ்சிப்பார்கள்; அது சத்தியமென்று அவர்கள் விசுவாசிப்பார்கள்; அவர்கள் அஞ்ஞான மார்க்கத்தை விட்டு வெளி வருவார்கள். அதன் பிறகு எனக்கு... ஒருவேளை இரண்டு அல்லது மூன்று வாரங்களில்... அங்கு நான் இரண்டு இரவுகள் இருந்தபோது, ஒரு லட்சம் பேர் கிறிஸ்துவினிடம் மனம் மாறினர். அவர்களுக்குப் போக இடமேயில்லை. அடுத்த நாள் நான் விமானமேறி ரோமாபுரிக்குச் சென்று அங்கிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குப் பயணமானேன். அவர்களை ஓநாய்களின் மத்தியிலுள்ள ஆடுகளைப் போல் விட்டுவிடும்படியாயிற்று. எனக்கு ஒரு கூட்டம் மனிதர், செய்தியில் பயிற்சி பெற்ற இளைஞர், இருந்திருப்பார்களானால் (பாருங்கள்?) நான் அவர்களிடம், “இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள்; இங்கிருந்து நான் புறப்பட்டுச் செல்லும் முன்னர், இந்த சபைகளை நாம் ஒழுங்குக்குள் கொண்டு வரப்போகின்றோம். எனக்கு மனிதன் இருக்கிறார். அவருக்கு ஏற்கனவே தந்தியடித்துவிட்டேன். அவர்களிடம் பணம் உள்ளது. இதன் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் புறப்பட்டு, வழியில் உள்ளனர். அவர் ஒரு நல்ல மனிதன், அவருடன் இரண்டு மூன்று இளைஞர் வருகின்றனர். அவர்கள் அவருக்கு உதவியாளர்களாக, துணைபுரிபவர்களாக இருப்பார்கள்'' என்பேன். இவ்விசுவாசத்தில் உள்ள ஒரு சபை அங்கு நிறுவப்படலாம். அது இந்தியாவில் ஒரு வெளிப்புறச் சபையாக (outpost) இருக்கும். அவ்வாறே ஜெர்மனியில் வெளிப்புறச் சபை, சுவிட்சர்லாந்தில் வெளிப்புறச் சபை நிறுவப்படலாம். இந்நேரத்தில் நான் சென்ற தேசங்கள் அனைத்திலும் அத்தகைய வெளிப்புற சபைகள் நிறுவப்பட்டிருக்க வேண்டும். செய்தியானது... ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்ற வேண்டும், அந்த மற்றொன்றிலிருந்து தோன்ற வேண்டும். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? 51நாளை இரவு, அல்லது அதற்கடுத்த நாள் இரவு, மாட்ஸன்போஸே இங்கு வருதை நீங்கள் காணலாம். அவர் எனது நண்பர். ஒரு ஊனமுற்ற, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒரே ஒருவர். டாங்கனீகாவில் என்ன செய்தார் என்பதை நீங்கள் காணலாம். அவர் அங்கு சென்று மாட்ஸன் போஸே நல்லவர், ஆனால் நாம் விசுவாசிக்கும் விசுவாசத்தை அவர் விசுவாசிப்பதில்லை. நான் அவரை வெளியே கொண்டு போய் வேத வாக்கியங்களைக் கொண்டு அவரைக் கட்டிப் போட்டு, “மாட்ஸன், நீர் என் நண்பர். நீர் இங்கிருந்து குதித்து ஓடிவிட முடியாது. நாம் இங்கு நின்று கொண்டு, கிறிஸ்தவ சகோதரர் என்ற முறையில் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டுபேசப் போகிறோம் என்றேன். பாருங்கள்? நான் செய்தியை அவருக்கு முன்பாக தெளிவாக வைத்தேன். அவர் அங்கு நின்று கொண்டு, “சகோ. பிரன்ஹாமே, நீர் கூறுவது நிச்சயம் உண்மை'' என்றார். நான், ''மாட்ஸன், நீர் அதை விசுவாசிப்பதில்லை, அதை விசுவாசித்தால் ஏற்றுக் கொண்டிருப்பீரே'' என்றேன். அவர், ''நல்லது சகோ. பிரன்ஹாமே, நீர் சொல்வது சத்தியம் என்று நான் விசுவாசிக்கிறேன்'' என்றார். ''அப்படியானால் அதை ஏன் நீர் ஏற்றுக் கொள்ளக் கூடாது?'' என்று கேட்டேன். பாருங்கள்? அதை அவர் உள்ளத்தில் கொழுந்து விட்டு எரியச் செய்கிறேன். அவர்... அவர் இங்கிருந்து புறப்பட்டுச் சென்றவுடனே, அகன்று போய்விடுகிறார். பாருங்கள்? 52ஆனால் அந்த மனிதன் மிஷன் ஊழியத்தில் என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள் - ஒரே ஒரு மனிதன். அவர் சிக்காகோவுக்கு அனுப்பி, பர்டன் இன்னும் மற்றவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை அங்கு அனுப்பி ஊழியத்தை தொடங்கி, அதன் விளைவாக வருகை தருகின்றனர். அவர் வரங்கள் பெற்ற மனிதர் அல்ல, அங்கு சென்று ஊழியத்தைத் தொடங்க போதிய தைரியமுள்ளவர். அப்படியிருக்க, இந்த விசுவாசத்தின் கீழ் உள்ளவர் எவ்வளவு சாதித்திருக்க முடியும்? அது லட்சக்கணக்கில் இருந்திருக்கும். நிச்சயமாக நாம் நேரத்தை இழந்துவிடுவோம். அதுதான் என் அபிப்பிராயம். இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், இதை நீங்கள் செய்யும்போது, நீங்கள் சகோதரர் இன்னின்னாருடன் கருத்தொருமித்தில்லாதிருப்பதை காண்பீர்கள். நீங்கள் கருத்து வேற்றுமை கொண்டவர்களாக இருக்கலாம். இதை நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் நல்லது, அவர் என்னைப் போல் விசுவாசிக்காததால், நான் அவருடன் எந்த சம்பந்தமும் கொள்ள மாட்டேன்'' என்று கூறினால், உங்களில் ஏதோ தவறுள்ளது. மற்ற ஆளிடம் எந்த தவறும் இல்லை; உங்களிடமே தவறுள்ளது. சகோதரர் ஒருமித்திருக்க முயலும் போது... ஒரு காரியம் உண்டு, பிரன்ஹாம் குடும்பத்தாராகிய நாங்கள் ஒன்பது பேர். நாங்கள் வீட்டில் வளர்க்கும் நாய்களைப் போல் சண்டை போட்டுக் கொள்வது வழக்கம். ஆனால் என்னவாயினும், நாங்கள் சண்டை போட்டு முடிந்த பின்னர், அப்பொழுதும் பிரன்ஹாம் குடும்பத்தினரே. ஒருவர் மற்றவர் பிரன்ஹாம் குடும்பத்தில் ஒருவர் என்று அறிந்திருந்தேன், அவரும் நான் பிரன்ஹாம் குடும்பத்தில் ஒருவன் என்று அறிந்திருந்தார். பாருங்கள்? ஆனால் நாங்கள் சண்டையிட்டுக் கொள்வோம். நீங்களும் உங்கள் குடும்பத்தில் அவ்விதம் செய்வதுண்டு, ஆனால் அவர்கள் அனைவரும் உங்கள் சகோதரரே. அவ்விதமாகத்தான் அது உள்ளது. நமக்கு வேற்றுமை இருக்கக்கூடும். (அதனால் பரவாயில்லை). நாம் அப்பொழுதும் ஒன்றாயிருக்கிறோம். நாம் கிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருக்கிறோம். இந்த செய்தியை நாம் விசுவாசிக்கிறோம். அதில் நாம் நிலைத்திருப்போம். 53செய்ய வேண்டிய காரியம் அதுதான் என்று நான் கருதுகிறேன். இயேசு வரும் வரைக்கும் நாம் தொடர்ந்து செயல்படுவோம். அதைத்தான் நான் இவ்வகையில் கூற முற்படுகிறேன். நான் நம்புகிறேன் நீங்கள் மட்டும்... பாருங்கள், நீங்கள் அதைக் குறித்து உற்சாகமுள்ளவர்களாக இருக்கவேண்டும். உங்களுக்கு உற்சாகமில்லையென்றால், ஏதோ தவறுள்ளது. ஏதோ தவறுள்ளது. நீங்கள்... “நல்லது, சென்ற மாதம் நான் உற்சாகம் கொண்டவனாய் இருந்தேன், ஆனால் இப்பொழுது என்னவென்று எனக்குத் தெரியவில்லை'' என்று நீங்கள் கூறலாகாது. பாருங்கள், அப்படியானால் எங்கோ ஏதோ தவறுள்ளது. பாருங்கள், நீங்கள் எந்நேரமும் உற்சாகமுள்ளவர்களாய் இருக்க வேண்டும் (பாருங்கள்?) நீங்கள் எப்பொழுதும் ஆர்வம் கொண்டிருக்கவேண்டும். சாத்தான் உங்களை பிடிக்கப் பார்க்கிறான்... எனக்கு எப்பொழுதும் நமக்கு முந்தின ஜனாதிபதியாக இருந்த திரு. ஐசன்ஹோவரை பிடிக்கும். எனக்கு அவர் மேல் மிகுந்த அபிமானம் உண்டு. அவர் கூறினதாவது; ''நாங்கள் போரில் சண்டையிடும் போது, அநேக சமயங்களில் நாங்கள் குண்டை எடுத்து துப்பாக்கியில் போட்டு சுடும்போது, குண்டு வெடிக்காமல் போயுள்ளது. நாங்கள் சரணடையவில்லை. நாங்கள் வேறொரு குண்டைப் போட்டு சுடுவோம், அதுவும் வெடிக்காமல் போய்விடும். நாங்கள் முயற்சியைக் கைவிடலாம். ஒரு குண்டு வெடிக்கும் வரைக்கும் நாங்கள் சுட்டுக் கொண்டேயிருந்தோம்.'' 54அதுதான், போரில் ஜெயிக்க அதுவே வழி. முயன்று கொண்டேயிருங்கள். குண்டைப்போட்டு துப்பாக்கியைச் சுடுங்கள். உங்களுக்கு ஒரு நோக்கம் உண்டு, சுடுவதற்கு ஒரு இலக்கு உண்டு. அது வெடிக்காமல் போனால், அதை எறிந்து விட்டு வேறொரு குண்டை போட்டு மறுபடியும் முயற்சி செய்யுங்கள். ஒரு குண்டு வெடிக்கும் வரைக்கும் முயன்று கொண்டேயிருங்கள். அந்த வெடிகுண்டுகளில் ஒன்று வெடிக்கும். அப்படித்தான் நாம் செய்ய வேண்டும். சுட்டுக் கொண்டேயிருங்கள். ஏதாவதொன்று நடக்கும் வரைக்கும் சுட்டுக் கொண்டேயிருங்கள். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? இப்பொழுது சுட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்கு நடத்துதல் அல்லது பொறுப்பு இல்லாமலேயே, செய்வது இன்னதென்று அறியாமல் போய்க் கொண்டிருக்கிறேன். லட்சக்கணக்கானோர் என்னை நோக்கிக் கொண்டிருக்கின்றனர். நான் என்ன செய்யப் போகிறேன்? என்னுடைய அடுத்த அசைவு என்ன? நான் மரித்துவிட்டதாக சிலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்; சிலர் இவ்விதம் எண்ணுகின்றனர். அன்றொரு நாள் என் துப்பாக்கி எதேச்சையாக வெடித்தபோது, நான் தற்கொலை செய்து கொள்ள முயல்வதாகக் கூறினர். பாருங்கள்? தேசம் முழுவதிலும் அது கூறப்பட்டது. பாருங்கள்? அவைகள் அனைத்தையும் நான் எதிர்த்து போராட வேண்டியதாயுள்ளது. அதுவுமல்லாமல், ஜனங்களைக் குறித்த பாரம் எனக்குள்ளது. 55நீங்கள் பேசிக் கொண்டிருக்கிற மக்களின் இருதயங்களை அறிந்து கொள்ளும் திறனை தேவன் உங்கள் மேல் வைத்திருந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அதைக் குறித்து எண்ணிப் பாருங்கள்! பாருங்கள், சகோதரரே, ஒருவேளை உங்களுக்கு பாரங்கள் உண்டு என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் புரிந்து கொள்வதில்லை. அது மட்டும் அல்லாமல், இங்கு உங்களுக்கு பொறுப்பு உள்ளது... நீங்கள், “சகோ. பிரன்ஹாமே, அது உங்களுக்கு சுலபமாய் உள்ளது, நீங்கள் செய்ய வேண்டிய எதையுமே தேவன் உங்களிடம் சொல்லிவிடுகிறார்'' எனலாம். இல்லை, அவர் சொல்வதில்லை. உங்களைப் போலவே நான் வியர்வை சிந்தி பிரயாசப்படுகிறேன். சொல்லப்போனால் உங்களை விட அதிக கடினமாக, நிச்சயமாக, உங்களை விட நான் அதிக கடினமாக வியர்வை சிந்தி பாடுபடுகிறேன். இதைக் காட்டிலும் என்னிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் ஒரு சபைக்காக மாத்திரமே உத்தரவு சொல்ல வேண்டியவர்களாயிருக்கையில், உங்கள் குடும்பத்துக்காக நீங்கள் பதில் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறீர்கள் அல்லது உங்களுக்காக மாத்திரமே (பாருங்கள்?), நான் லட்சக்கணக்கானவர்களுக்காக உத்திரவு சொல்ல வேண்டியவனாயிருக்கிறேன். என் அசைவுகளை நான் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் பிடிக்கும் ஒரு ஆத்துமா அல்லது சிலஆத்துமாக்கள் காரணமாக சாத்தான் உங்களை வதைக்கும் போது, லட்சக்கணக்கான ஆத்துமாக்களை பிடிப்பதன் காரணத்தால் அவன் என்ன செய்வான்? இன்னும் எத்தனை வெடி விபத்துகளை அவன் அனுப்பப் போகிறானோ? பாருங்கள்? எனவே, நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டிய அநேக காரியங்கள் உண்டு, சகோதரரே அது... சில நேரங்களில் நான் கலக்கமடைவதைக் குறித்து வியப்பொன்றுமில்லை. 56ஆனால் இப்பொழுது... நான் இப்பொழுது முயன்று கொண்டேயிருக்கிறேன். நான் குண்டை துப்பாக்கியினுள் போடுகிறேன். அது வெடித்தால், நல்லது, அது வெடிக்காமல் போனால், நான் விலகிக் கொள்ளமாட்டேன். அது உதவாத ஒன்று என்று தூக்கியெறிந்துவிட்டு, வேறென்றைக் கொண்டு முயற்சி செய்வேன். எப்படியும் அவைகளில் ஒன்று வெடிக்கத்தான் செய்யும், அவ்வளவு தான் அதில் உள்ள விஷயம். அவைகளில் ஒன்று எங்காவது வெடிக்கும். நான் இலக்கை நோக்கி சுட விரும்புகிறேன். ஏனெனில் அது வெடிக்கும்போது, நான் குறி வைத்த இலக்கை அதுபோய் அடிக்கும். நான்... நான் கூறுவதை நீங்கள் விளங்கிக் கொண்டிருப்பீர்கள். அதைக்குறித்து நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். பாருங்கள்? எங்காவது ஏதாவதொன்று இருக்கும். நான் ஆர்வத்துடன் வெளியே இக்கூட்டங்களுக்குச் செல்கிறேன். மக்களாகிய உங்களுக்கு நான் போதிக்கும் பெரிய காரியங்களை அங்கு நான் போதிக்கப் போவதில்லை. அந்த சொப்பனத்துக்கு எனக்கு கிடைக்கப் பெற்ற அர்த்தம் என்னவென்று உங்களுக்கு நினைவிருக்கும். ''நீ போய் ஆகாரத்தை சேமிதித்து வை'' சேமிக்கும் இடம் எங்குள்ளது? இந்த கூடாரம் தான். நமக்கு கிடைக்கப் பெற்ற செய்தியைப் போன்ற, அதனுடன் ஒப்பிடத்தக்க ஒன்று இத்தேசத்தில் உள்ளதா? (இங்குள்ள இச்சிறிய சகோதரர்களிடம், அந்த சிறு சபைகளிடம் அது உள்ளது. அவர்கள் நம்முடையவர்கள். நாம் ஒன்றாயிருக்கிறோம்). அதை கண்டு பிடிக்க நீங்கள் எங்கு செல்வீர்கள்? அதனுடன் ஒப்பிடத்தக்க ஒன்றை காண்பியுங்கள் பார்க்கலாம். நீங்கள் ஸ்தாபன கோட்பாடுகளுக்குள் தான் செல்வீர்கள்; நீங்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தை விட்டகன்று சென்று விடுவீர்கள். இந்தக் காரியங்களிலிருந்து நீங்கள் விலகி சென்று விடுவீர்கள். பாருங்கள்? இங்கு தான் ஆகாரம் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. 57நல்லது, உங்கள் எல்லோருக்கும் இங்கு நான் பிரசங்கித்த ஒரு செய்தி... பாருங்கள், ஒரு செய்தியை நான் ஒரு மணி நேரம் முதல் ஆறு மணிநேரம் பிரசங்கித்து வந்திருக்கிறேன். நல்லது, இச்செய்தியில் ஒன்றை நான் உபயோகிக்க வேண்டுமானால், ஒவ்வொரு செய்தியிலிருந்தும் இங்கு சிறிது அங்கு சிறிது எடுக்க (பாருங்கள்?) எனக்கு ஒரு வாரம் பிடிக்கும். ஏனெனில் அது இங்கு சேமித்துவைக்கப்பட்டுள்ளது. அவை ஒலிநாடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த செய்தி ஒலிநாடாக்களின் மூலம் உலகம் முழுவதும் செல்லும், அங்கு ஜனங்கள் வீடுகளில் உட்கார்ந்துகொண்டு... இந்த ஒலிநாடாக்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் கைகளில் போய்விழும். தேவன் வார்த்தையை அவர்களிடம் நடத்த முடியும். அவர் ஒவ்வொன்றையும் அதனதன் பாதையில் செல்ல நடத்த முடியும். ஆகையால் தான் அவர் என்னை இதை செய்யும்படி இங்குஅனுப்பி, ''ஆகாரத்தை சேமித்து வை“ என்றார். நான் வெளிநாடுகளுக்குச் செல்ல அவர் என்னை அனுமதிக்கவில்லை. 58சகோ. ஆர்கன் பிரைட், ''நல்லது, வாருங்கள்; போகலாம். உங்களுக்கு ஒரு இரவு உள்ளது, ஆனால் நாங்கள் உங்களை நாடு முழுவதும் சுற்றுலா பயணமாக (tourist trip) கொண்டு செல்வோம்'' என்றார் - சகோ. ஃபிரட் மற்றும் சகோ. பாங்க்ஸ் போக முயற்சி செய்து கொண்டிருக்கும் விதமாக. நான், “அந்த விதமாக நான் போக மாட்டேன்'' என்றேன். பாருங்கள்? வேறேதோ ஒன்று இருந்தது என்பதை அது காண்பித்தது. நான் இலக்கை நோக்கி தொடர்ந்து இப்பொழுது வந்துவிட்டேன். ஆனால் எந்த வழியாகச் செல்லவேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னைக் சுற்றிலும் வெடி மருந்துகள் கிடக்கின்றன. என்னை மறுபடியும் அவர் சுவிசேஷக ஊழியத்துக்கு அழைக்கிறாரா? வெளிநாட்டு மிஷனரி ஊழியத்துக்கு அவர் என்னை அழைத்திருக்கிறாரா? அவருடைய தீர்க்கதரிசியாக இருக்க அவர் என்னை அழைத்திருக்கிறாரா? நான் எங்காவது மேய்ப்பனின் ஊழியத்தைச் செய்ய வேண்டுமா? நான் எதைச்செய்ய வேண்டியதாயிருந்தாலும், நான் வெடி குண்டை துப்பாக்கியில் நிறைத்து சுட்டுக் கொண்டேயிருப்பேன். அவைகளில் ஒன்று எப்படியும் வெடிக்கும். நான் சும்மாயிருந்து கொண்டு, ''ஆண்டவரே, நீர் துப்பாக்கியில் வெடிமருந்தை நிறையும்“ என்று சொல்லப் போவதில்லை. நானே துப்பாக்கியில் வெடிகுண்டை நிறைத்து, நானே துப்பாக்கியின் குதிரையை இழுத்துவிடப் போகிறேன். அவர் வெடிக்கும்படி செய்யட்டும். அதை கவனித்துக் கொள்ள வேண்டியவர் அவர் ஒருவரே. நான் முன்னேறிச் செல்லட்டும். 59இந்த கூட்டங்களுக்கு இப்பொழுது நான் செல்லும் போது; நான் வெளியே செல்கிறேன். எனக்குத் தெரியவில்லை. இங்கு நான் பிரசங்கித்த இச்செய்திகளைப் போல் அங்கு நான் ஒருவேளை ஒன்றும் கூற மாட்டேன். ஒருவேளை சிந்தனைகளைப் பகுத்தறியும் கூட்டத்தை ஒரு இரவும் கூட நான் நடத்தாமல் போய்விடக் கூடும். எனக்குத் தெரியவில்லை. நான் என்ன செய்யப்போகிறேன் என்றறியாமல், அங்கு செல்கிறேன். என்னால் உங்களிடம் கூற இயலாது; நான் வெறுமனே செல்கிறேன். அதுமாத்திரமே... நீங்கள் செய்வதற்கான வழி அதுவே. உங்கள் மனதில் ஏதோ ஒன்றுண்டு. இங்குள்ள ஜனங்கள் ஒரு சபை வேண்டுமென விரும்புகின்றனர். அதைக் கட்டுங்கள்! எவ்வளவு விரைவாக உங்களால் முடியுமோ, அதை எழுப்புங்கள். உங்கள் போதகர்களையும் மற்றவர்களையும் பெற்றுக்கொள்ளுங்கள். வெளியே உங்கள் சிறு சபைகளை நடத்திக் கொண்டிருக்கும் சகோதரராகிய நீங்கள் ஒரு ஊழியத்தைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்! பிரசங்கியுங்கள்! உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள்! மனிதராகிய நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, கூட்டங்களை வைத்து, வேதத்திலுள்ள ஆழமான காரியங்களின் பேரில் பேசி, ஜெபம் செய்யுங்கள். நீங்கள் தனித்திருந்து ஜெபிக்கும் கூட்டத்துக்கு வராமல், இங்கு ஒன்று கூட வராதிருங்கள். நீங்கள் அந்தரங்கத்தில் ஜெபியுங்கள். அந்த இடத்தில் இருந்து கொண்டு, உங்கள் அறைகளுக்குள் சென்று, எங்காவது மறைந்து கொண்டு, முழங்கால்படியிட்டு, தேவனுக்கு முன்பாக அங்கேயே தரித்திருங்கள். அதன் பிறகு ஏதோ ஒன்று அசைகிறது என்று நீங்கள் காண்பீர்களானால்; ஓ, நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, அது வார்த்தையை விட்டு சிறிது விலகியிருக்கக் கண்டால், ஜாக்கிரதையாயிருங்கள்! அது எவ்வளவு நல்லதாக காணப்பட்டாலும், அங்கேயே நின்று விடுங்கள்! ஒரு தவறான ஆவி உங்களை பீடித்துள்ளது. ஏனெனில் இந்நாளின் செய்தி வார்த்தையுடன் இணைந்திருக்கும். பாருங்கள்? 60பாருங்கள், நீங்கள், “ஓ என்னே, சகோ. பிரன்ஹாமே, நான் உங்களிடம் கூறுவது என்னவெனில், இன்னார் இன்னார் அன்றிரவு நின்று கொண்டிருந்தார், இன்னின்ன காரியம் இவ்வாறு நிகழ்ந்தது” எனலாம். அதை கவனியுங்கள் அதை உன்னிப்பாக கவனியுங்கள் எதையும் உதறித் தள்ளி விடாதீர்கள். அது எப்படி நடக்கிறதென்று காத்திருந்து பாருங்கள், அதை வார்த்தைக்குக் கொண்டு சென்று, அது வார்த்தையுடன் எவ்விதம் ஒத்துப் போகிறது என்பதைப் பாருங்கள். அது சரியாக ஒத்துப் போனால்; எல்லாமே நன்றாக இருந்தால், தேவனைத் துதித்து முன்னேறிச் செல்லுங்கள். பாருங்கள்? அது வார்த்தையுடன் நிலைத்திருக்கும் வரைக்கும். அதுவே என் அபிப்பிராயம். அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டுமென்பது என் கருத்தாகும். 61சகோ. நெவில், சகோ. ரட்டில், சகோ. க்ரேஸ், சகோ. பீலர், மற்றும் இங்குள்ள சகோதரர் அனைவரையும், “ஜூனி'' நீங்கள் எங்கிருந்தாலும், மற்றுமுள்ள சகோதரர் அனைவரையும்; தேவன் உங்களை அபரிமிதமாய் ஆசீர்வதிப்பாராக. நான் டெர்ரி, லின், சார்லி காக்ஸ், டேவிட், இன்னும் அநேக இளைஞர்களை இங்கு காண்கிறேன். தேவன் உங்களை அபிஷேகிப்பாராக. என்னே! உங்களில் சிலரை சுவிசேஷ ஊழியத்துக்காக தெரிந்து கொண்டு, எங்காவது அனுப்புவது எங்களுக்கு எவ்வளவு பிரியமாயிருக்கும். (பாருங்கள்?), நீங்கள் செய்தியில் முன்னேற்றமடைந்திருக்கிறீர்கள் என்று அறிந்திருக்கிறோம். நீங்கள் செய்தியை அறிந்தவர்களாய் உறுதியாய் நின்று உங்கள் ஊழியத்தை நிறைவேற்றலாம். உங்கள் வாழ்க்கையில் ஒரு அழைப்பு இருப்பதாக நீங்கள் உணருவீர்களானால்... நான் இரண்டு மூன்று இளைஞர்கள், அங்கே பின் வரிசையில் நான்கு அல்லது ஐந்து பேர் இங்கு உட்கார்ந்திருப்பதைக் காண்கிறேன். நீங்கள் இளைஞர்கள்; எனக்கு வயதாகிக் கொண்டு போகிறது. சகோ. நெவிலுக்கும் வயதாகிக் கொண்டு போகிறது. நாங்கள் நடுத்தர வயதுள்ள மனிதர். காலம் கடந்து செல்லும்போது, சற்று கழிந்து நாங்கள் காட்சியை விட்டு நடந்து சென்றிடுவோம். நீங்கள் தான் எங்களுடைய இடத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பாருங்கள்? 62எனவே, பாருங்கள்... அந்த நாளிலே அது இன்னும் பெரிதாக வளரக்கூடும், நாளை என்று ஒன்று இருக்குமானால், இன்றைக்கு என்று ஒன்று இருக்கும்போதே, பகற்காலம் இருக்குமட்டும், நாம் கிரியை செய்வோம். நாளை என்பது வராமலே போகலாம். அப்படி வருமானால், அதற்காக நாம் ஆயத்தமாயிருப்போம். நான் கூறுவது விளங்குகிறதா? அதைத்தான் நான் உங்களுக்கு ஆலோசனையாகக் கூறுகிறேன். அது அற்புதமாயிருக்குமல்லவா... ஊடிகாவிலிருந்து வந்துள்ள சகோ. க்ரேஸ், மற்றும் சகோதரராகிய நீங்கள் அனைவரும் இங்கு ஒன்று கூடி, சந்தித்து, ஓரிடத்துக்கு வந்து; ஊழியக்காரராகிய நீங்கள் ஒன்றாக உட்கார்ந்து காரியங்களை விவாதிப்பது அற்புதமாயிருக்குமல்லவா? உங்களுக்கு எங்காவது ஒரு ஐக்கியம் இருக்கவேண்டும். நீங்கள் ஒன்றுகூடி விவாதிப்பதற்கு உங்களுக்கு ஏதாவதொன்று இருக்கவேண்டும். நீங்கள் ஒரு கூட்டம் மனிதராக ஒன்று கூடி, ஒருவருக்கொருவர் விசுவாசித்து, இந்த பிரச்சினைகளின் பேரில் விவாதியுங்கள். மாதத்துக்கு ஒருமுறை ஊழியக்காரர் மாத்திரம் இவ்விதம் செய்யுங்கள். உங்கள் சபைகளில் ஒன்றில் கூடுங்கள். அங்கு உட்கார்ந்து கொண்டு விவாதியுங்கள் - மேய்ப்பர்கள் சுவிசேஷகர்கள் ஒவ்வொருவரும் - நீங்கள் யாராயிருந்தாலும். ஏதாவது ஒரு பெரிய பிரச்சினை எழுந்தால், நீங்கள் அதற்கு தீர்வு காணலாம். நான் சுவிசேஷக ஊழியத்துக்கென்று அழைக்கப்பட்டால்... நான் அழைக்கப்படுவேனோ என்று எனக்குத் தெரியாது. அப்படி அழைக்கப்பட்டாலும், நான் அடிக்கடி திரும்ப வருவேன். நான் இங்கு வரும்போது இவைகளைக் கொண்டு வந்தால், நாம் ஒன்று கூடி, உட்கார்ந்து விவாதிப்போம். உங்களில் ஒருவருக்கு உங்கள் வாழ்க்கையில் ஒரு அழைப்பு இருக்குமானால் நாம் வழக்கமாக செய்வது போல், தனிப்பட்ட முறையில் பேட்டிகள் வைக்கப் போவதில்லை. நாம் ஒன்று கூடி, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நாம் பெறும் வரை, அங்கேயே தங்கியிருப்போம். 63நீங்கள் பிரசங்கிமார்களை நேர்வழிப்படுத்தி, அவர் சரியான வழியில் செல்வாரானால், அவர் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பாருங்கள். அவர் அநேகரை தன் செல்வாக்குட்படுத்தி... அது நூற்றுக்கணக்கான காரியங்களை கவனித்துக் கொள்ளும். அதுதான், அதையே நாம் வலியுறுத்துகிறோம். பாருங்கள்? அதை நீங்கள் ஒரு முறைமையாக ஆக்க வேண்டும், தேவனுடைய முறைமையாக. எத்திரோ மோசேயிடம், “அவர்கள் எல்லாரையும் நீ சமாளிக்க முடியாது'' என்று கூறினது போல... தேவன் அங்கு எழுபது பேர்களை மூப்பர்களாக நியமித்து, மோசேயில் இருந்த ஆவியை எடுத்து அந்த எழுபது மூப்பர்கள் மேல் வைத்தார். அவர்கள் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். அது மோசேயை சிறிதளவும் பலவீனப்படுத்தவில்லை. அது அவனை பலப்படுத்தியது. அவர்கள் தீர்க்கதரிசனம் உரைப்பதற்கென, அவனிலிருந்த ஆவியை எடுப்பதற்கு முன்னால் அவர்களில் இருந்த தீர்க்க தரிசனம் தான் அதற்குப் பிறகும் இருந்தது. பாருங்கள்? அவர் பிரித்தெடுத்து, ”இப்பொழுது மோசே, அவர்கள் சிறு விஷயங்களை நியாயந்தீர்க்கட்டும், ஆனால் பெரிய விஷயங்களுக்கு அது வரும்போது, நீ அவர்களிடம் வந்து அவர்களுக்கு உதவி செய்“ என்றார். அதுதான் முறையாகும். அதுவே தேவன் முன் காலத்தில் கடைபிடித்த முறை. ஆதி சபை காலத்திலும் அதுவே தேவனுடைய முறையாக இருந்தது. இப்பொழுதும் கடைபிடிப்பதற்கு அதுவே தேவனுடைய முறையாயுள்ளது என்று நான் நம்புகிறேன் (அது உண்மை). எனவே, அதை நாம் கடைபிடிப்போம். அதைக்குறித்து பேசுவதைக் தவிர்த்து அதை கடைபிடியுங்கள். அவ்வளவுதான். தேவனுடைய கிருபையினால் நம்மால் அதைச் செய்ய முடியும். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் அல்லவா? 64இப்பொழுது... இப்பொழுது, நாம் பார்ப்போம். ஓ, நான் என் நேரத்தை இதிலேயே செலவழித்துவிட்டேன். ஆனால் ஒரு... பில்லி இங்கு ஒரு குறிப்பு எழுதி வைத்திருக்கிறான். ஒரு நிமிடம், அது என்னவென்று பார்க்கிறேன். ''நான் நியூ ஆல் பனியைச் சேர்ந்தவன்... மகள், கிரேஸ் மெமோரியல் மருத்துவ மனையில் அவளுடைய கையெலும்பு முறிந்துவிட்டது. அவளுக்காக ஜெபிக்க கேட்டுக்கொள்கிறார் ட்ரெளப், டபிள்யூ.சி. ட்ரெளப் (அப்படி ஏதோ ஒன்று) இந்த வாலிபப் பெண்ணுக்காக நாம் ஜெபத்தை ஏறெடுப்போம். எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் இப்பொழுது பேசிக் கொண்டிருக்ககையில்... ஐரேனியஸ் தன்னுடைய சிறு மனிதர் குழுவை நோக்கிப் பார்த்தபோது, அது ஒருக்கால் இன்றிரவு இங்குள்ள குழுவை விட சிறிதாக இருந்திருக்கக்கூடும் என்று நான் கருதுகிறேன். அவர்களுக்கு உட்கார இருக்கைகள் இருக்கவில்லை. அவர்கள் குளிர்ந்து போன கற்துண்டுகளின் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அவர் அவர்களுடன் பேசினார். அவர்கள் சென்றால் சிங்கங்களுக்கு இரையாவார்கள், அவர்கள் தலைகள் வெட்டப்படும் என்று அறிந்தும் கூட அவர்கள் சென்றனர். ஆனால் நம்முடைய பிதாக்களின் விசுவாசம், இருட்டறை, நெருப்பு, பட்டயம் ஆகியவை இருந்த போதிலும், இன்னும் நிலைத்திருக்கிறது. கர்த்தாவே, இந்த மனிதருக்காக உமக்கு நான் நன்றி செலுத்துகிறேன். இவர்களை ஆசீர்வதிக்குமாறு நான் வேண்டிக் கொள்கிறேன். உமது நாமத்தினால் இவர்கள் ஒவ்வொருரையும் நீர் ஆசீர்வதித்து, பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசத்திலிருந்து இவர்கள் வழுவிவிடாத படிக்கு, அந்த விசுவாசத்தில் இவர்களைக் காத்தருளுவீராக. இந்தக் குழுவிலிருந்து நீர் மேய்ப்பர்களையும், போதகர்களையும், சுவிசேஷகர்களையும் அனுப்புவீராக. ஓ, தேவனே, இதை அருளும். இவர்கள் எங்கேயிருந்தாலும், எல்லாவிடங்களிலும் உறுதியாய் நிற்கட்டும். இயேசு வரும் வரைக்கும் இவர்கள் தொடர்ந்து ஊழியம் செய்யட்டும். 65இப்பொழுதும் பிதாவே, இன்றிரவு இங்கு வந்துள்ள விண்ணப்பங்கள் ஒவ்வொன்றுக்காகவும் நான் ஜெபிக்கிறேன், தன் கைகளை முறித்துக்கொண்ட இந்த சிறு பெண்ணை நீர் நினைவு கூர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமை அவளை சுகப்படுத்துவதாக. கர்த்தாவே, இதை அருளும். அவளுக்குதவி செய்து அவளை ஆசீர்வதிக்குமாறு ஜெபிக்கிறேன். தொலைபேசியில் கூப்பிட்ட அவளுக்கு அன்பார்ந்தவர்களை ஆசீர்வதிப்பீராக. இயேசு கிறிஸ்துவை கல்லறையிலிருந்து எழுப்பின அதே வல்லமை இந்தப் பெண்ணையும் எழுப்புவதாக. அவளுடைய கை குணமாகட்டும். இன்றிரவு நாங்கள் குறிப்பிட்ட இந்த விண்ணப்பங்கள்: படுக்கையில் படுத்திருக்கும் ஏழை பையன், அவனுக்கு அந்த சகோதரன் அறிவிப்பு செய்வதை நான் கேட்டேன். ஹாகினிஸ் வியாதி அவனைத் தின்று போட்டது, அவனுடைய முகம் ரேடியத்தினாலும் அவனுக்குக் கொடுக்கும் மற்றவைகளினாலும் உரிந்து போயுள்ளது. தேவனே, அந்தப் பையனின் மேல் இரக்கமாயிரும்; அவன் உயிர் வாழட்டும். உம்மை சந்திக்க ஆயத்தமில்லாமல் இப்பொழுது மரித்துப் போன அந்த மனிதனை நினைவு கூருகிறோம். மண்டை உடைந்த அவருடைய மனைவியும் அவர்கள் சுவீகாரம் செய்த பிள்ளையும், மற்றவர்களும், தண்ணீரைக்கொண்டு வரும் சகோதரி ப்ரூஸ், அவர்களுக்கு வயதாகிறது, பிதாவே. அங்கு அவர்களுக்கு தீயினால் கரங்களை எரிந்து போயின. அவர்களுடைய சரீரம் மேலும் கீழும் எரிந்து போனது. அவர்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்கள் ஒருக்கால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பார்கள். அவர்களை நீர் விடுவித்து மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டு வரும்படி ஜெபிக்கிறோம். பிதாவே, இதை அருளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த ஆசீர்வாதங்களைக் கேட்கிறோம். ஆமென். 66உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். வார்த்தைக்காக சிறிது நேரம் இருப்பதாக நீங்கள் நம்புகின்றீர்களா என்று உங்களைக் கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு நேரம் உள்ளதா? சில நிமிடங்களே... இப்பொழுது, அது... சிறிது தாமதமாகிவிட்டதென்று நான் அறிவேன். சிறிய ஒன்றை நான் இன்று நினைத்துக் கொண்டிருந்தேன், அதை ஒரு நிமிடம் உங்களிடம் பேச நான் விரும்புகிறேன், அது உங்களுக்கு உதவியாயிருக்கும். இதை அறிவிக்கலாம் என்று நான் முதலில் நினைத்தேன். ஆனால் இது ஒலிப்பதிவு செய்யப்படப் போகிறது, இதைக் கேட்க யாராகிலும் விரும்பினால், ஜிம்மிடம் அந்த ஒலிநாடா இருக்கும். பாருங்கள்? அதுதான் செய்யப்பட வேண்டியது என்று நான் நினைக்கிறேன். சகோதரரே, அதைத் தான் செய்ய வேண்டும். ஆதிகாலத்து மனிதர் வெளியே சென்ற போது, சில சமயங்களில் ஏறக்குறைய ஆறு அல்லது எட்டு பேர் மாத்திரமே ஒன்றாக இருந்தனர் என்று உங்களுக்குத் தெரியுமா?அவர்கள் தேசத்தையே அசைத்தனர். ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும், அப்பொலோ அங்கு நடத்திக் கொண்டிருந்த அந்த மகத்தான எழுப்புதலில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஏறக்குறைய ஆறு அல்லது எட்டு பேர் மாத்திரமேயிருந்தனர். அந்த முழு சபையும் ஆறு அல்லது எட்டு பேர்களை மாத்திரமே கொண்டதாயிருந்தது. இன்றிரவு அவர்களை விட ஐந்து அல்லது ஆறு, ஏழு மடங்கு பேர்களை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். இயேசுவுக்கு பன்னிரண்டு அப்போஸ்தலர் மாத்திரமே இருந்தனர் என்று உங்களுக்குத் தெரியும். நாம் எப்பொழுதுமே ஏதாவது பெரிதான ஒன்றைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தேவன் பெரிய எண்ணிக்கையில் ஈடுபடுபவர் அல்ல. இத்தகைய சிறு குழுக்களில் அவர் அதை பெற்றுக் கொள்கிறார். பார்த்தீர்களா? காலங்கள்தோறும் பார்த்துக் கொண்டே வாருங்கள். அவர் எப்பொழுதாவது மனிதரைச் சந்தித்தாரென்றால், இச்சிறுக் குழுக்களில் மாத்திரமே (பாருங்கள்?). அவர்களுடன் அவர் பேசி அவர்களை அபிஷேகித்தார். அவ்விதம் செய்வது தேவனுடைய நற்பிரியமாய் உள்ளது. அவ்விதமாகத் தான் அவர் அதைச் செய்ய விரும்புகிறார். இப்பொழுது, நாம் தேவனை நமது மத்தியில் வைத்து, சென்று இந்தக் காரியங்களைச் செய்ய விரும்புகிறோம். 67இப்பொழுது, கர்த்தருக்குச் சித்தமானால், ஞாயிறு காலையில் நான் சாயங்கால நேர சுவிசேஷகம் என்பதன் பேரில் பேச விரும்புகிறேன். அதன்பிறகு நான்... கர்த்தர் அனுமதித்தால் இந்த இலையுதிர் காலம் இறுதிப் பகுதி வரைக்கும் நான் இவ்விடம் விட்டு சென்றிருப்பேன். அதன்பிறகு நான் திரும்பி வருவேன். நான் செப்டம்பர் மாதம் போல் ஒருவேளை திரும்பி வருவேன். அதற்குள்ளாக, எல்லாமே சகோதரராகிய உங்களுக்கு அற்புத விதமாக நடந்தேறும் என்றும், உங்கள் கூட்டங்கள் எண்ணிக்கையில் பெருகுமென்றும் நான் நம்புகிறேன். நாம் மீண்டும் சந்திக்கும் வரைக்கும் தேவனுடைய கிருபை உங்கள் அனைவர் மேலும் தங்கியிருப்பதாக. நான் வெற்றி பெற வேண்டுமென்று நீங்கள் எனக்காக ஜெபிப்பீர்கள் என்று நம்புகிறேன். எனக்காக ஜெபிக்க மறவாதீர்கள்... அப்படியானால், நீங்கள் என் கூட்டாளி, என் நெருங்கின நண்பர், எனக்கு உதவி செய்பவர் என்று அர்த்தமாகும். நாம் ஒருமித்து கர்த்தரில் உதவி செய்கிறவர்களாக இருக்கிறோம். நான் சத்துருவுக்கு முன்பாக நிற்கும்போது, வியாதியஸ்தருக்காகவும் அவதியுறுவோருக்காகவும் விண்ணப்பங்களை ஏறெடுத்து, உண்மையான போர் வீரர்களை நினைவுகூர விரும்புகிறேன், அந்த மனிதர் எனக்காக ஜெபம் செய்துகொண்டிருக்கின்றனர். அங்கே அது தேவைப்படுவது எனக்கே. அது உண்மையில் எனக்குத் தேவைப்படுகிறது. எனவே நீங்கள் ஒன்றுகூடும் போது, நீங்கள் எல்லோரும் எனக்காக ஜெபியுங்கள். எந்தக் கூட்டத்திலும் என்னை மறந்து போக வேண்டாம். எனக்காக ஜெபியுங்கள். 68இப்பொழுது பரி. யோவான் 9-ம் அதிகாரத்தில், நான் 26-ம் வசனம் முதல் 35-ம் வசனம் முடிய வாசிக்க விரும்புகிறேன். சில நிமிடங்கள் மாத்திரமே, நாம் அடுத்து இருபது அல்லது முப்பது நிமிடங்களில் முடித்து விடுவோம். அல்லது கர்த்தருக்குச் சித்தமானால் அதற்கு முன்பும் கூட, இப்பொழுது நான் யோவான் 9: 26 - 35 வசனங்களை வாசிக்க விரும்புகிறேன். நான் சிந்தித்துக் கொண்டிருந்த ஒன்றை இங்கே எழுதி வைத்துள்ளேன்: @அவர்கள் மறுபடியும் அவனை நோக்கி: உனக்கு என்ன செய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள். @அவன் பிரதியுத்தரமாக: முன்னமே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேளாமற்போனீர்கள்; மறுபடியும் கேட்க வேண்டியதென்ன? அவருக்குச் சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ என்றான். @அப்பொழுது அவர்கள் அவனை வைது: நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர். @மோசேயுடனே தேவன் பேசினாரென்று அறிவோம், இவன் எங்கேயிருந்து வந்தவனென்று அறியோம் என்றார்கள். @அதற்கு அந்த மனுஷன். அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம். @பாவிகளுக்குத் தேவன் செவி கொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவ பக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவி கொடுப்பார். @பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானது முதல் கேள்விப்பட்டதில்லையே. @அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான். @அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக; முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் புறம்பே தள்ளிவிட்டார்கள். @அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்றார். 69இப்பொழுது, சகோதரராகிய உங்களிடம் சில நிமிடங்கள் பேச விரும்புகிறேன். இங்கு நான் அளிக்கும் இச்சிறிய பேச்சை (அது என்னவாகுமென்று எனக்குத் தெரியாது) தேவன் ஏதாவதொரு வழியில் உபபோகிப்பாரென்று அறிந்திருக்கிறேன். இப்பொழுது இதில், அவருடைய வார்த்தையின் பேரில்... சகோ. சிங்க், சகோ. நெவில் அல்லது ஊழியக்காரராகிய உங்களில் ஒருவர் பிரசங்கிப்பது வழக்கம் என்று நான் அறிவேன். உங்களுடன் இங்கு நான் இருப்பதனால், நீங்கள் என்னை மன்னிப்பீர்களானால், இந்த விதமாக சிறிதளவு பேச நான் விரும்புகிறேன். இப்பொழுது, “இயேசுவின் பட்சம் சேர்ந்திருத்தல்” என்னும் பொருளை இங்கு எடுத்துக் கொண்டு பேச விரும்புகிறேன். அவருடைய காலத்தில் இருந்த பரிசேயர்களும் தலைவர்களும் அவரை ஜனங்களுக்கு முன்பாக எப்பொழுதும் சிறுமைப்படுத்த முயன்றனர். பிசாசு அந்த விதமாகத்தான் கிரியை செய்தான். அவர் காலத்திலிருந்த பரிசேயர்கள் அனைவரும் போதகர்களும் இயேசுவை அடிக்கடி சிறுமைப்படுத்த முயன்றனர். அவர்கள்... அவர் மேல் என்னவெல்லாம் எறிய முடியுமோ, அதை அவர்கள் செய்தனர். அவர் மேல் குற்றம் கண்டு பிடிக்க எண்ணி, அவர்கள் அவரை சதா கவனித்து வந்தனர். அவரிடம் காணப்பட்ட நற்காரியங்களைக் குறித்து அவர்கள் ஒருக்காலும் பேசவேயில்லை, அவரை சிறுமைபடுத்துவதற்கென அவர்கள் ஏதாவதொன்றை கண்டுபிடித்து, “பார், இங்கேபார், அவர் தேவனுடைய மனிதனாயிருந்தால், இவ்விதம் செய்ய மாட்டார்” என்றோ, அல்லது, “அவர் தேவனுடைய மனிதனாயிருந்தால்,அந்த விதமாக அவர் அதைச் செய்திருக்கமாட்டார்'' என்று அவரைக் குறை கூறினர். ஜனங்கள் அவரை நம்பாமலிருக்கச் செய்யவேண்டுமென்று அவரை அவதூறுபடுத்தினர். அது பிசாசின் கிரியையே, அவனுடைய பழைய உபாயம் ஓய்ந்து போகவேயில்லை . 70அநேக சமயங்களில் ஒரு ஊழியக்காரன் தவறு செய்கிறார். அந்த விலையேறப் பெற்ற சகோதரன் சரியானதை செய்து ஜனங்களை சரியான வழியில் நடத்த முயன்று வருகிறார். அவர் அடுத்த ஊருக்குச் செல்லும் போது, அந்த மனிதன் மேல் என்னவெல்லாம் எறிய முடியுமோ, அதையெல்லாம் பிசாசு ஒரு அவிசுவாசிக்கு அல்லது பெயர் கிறிஸ்தவனுக்கு சுட்டிக் காண்பிப்பான். உங்களுக்குத் தெரியுமா, உண்மையான கிறிஸ்தவன் கடை பிடிக்கும் வழி என்னவெனில், அவனால் கூடிய மட்டும் இவைகளை ஒரு சகோதரனிடமிருந்து மறைப்பதே. அவரில் காணப்படும் தீயவைகளைக் கூறாதீர்கள், நல்லவைகளையே கூறுங்கள். உங்களுக்குத் தெரிந்த அவருடைய நல்ல காரியங்களையே எடுத்துக் கூறுங்கள். தீயவை ஏதாவதிருந்தால், அதை விட்டு விடுங்கள். அந்த ஏழை நபருக்கு விரோதமாய் ஏற்கனவே போதுமானவை உள்ளன. ஒரு கோலை எடுத்து ஒரு மனிதனை இன்னும் ஆழமாக குழியில் தள்ளி விடாதீர்கள். அவரைக் குழியிலிருந்து வெளியே தூக்கி விடுவதே கிறிஸ்தவ மனப்பான்மையாகும். பாருங்கள்? அவரை இன்னும் ஆழத்தில் தள்ளிவிடப் பார்க்காதீர்கள்; அவர் ஏற்கனவே குழியில் இருக்கிறார். அவர் குழியிலிருந்து மேலே வருவதற்கு உதவி செய்யுங்கள். மேலும்... இன்று மிக அதிகமானவர்கள் அவரைக் குழியில் தள்ளி விடவே முயல்கின்றனர் என்று நான் கூறக் கூடும். ஒருவருக்கு விரோதமாக தீயவைகளைக் கூற அவர்களுக்கு தருணம் கிடைத்தால்... 71இப்பொழுது, உதாரணமாக, சகோதரர்களாகிய உங்களில் ஒருவர் ஏதாவதொரு தவறு செய்ய நேர்ந்தால் - நீங்கள் தவறுசெய்யக் கூடியவர்கள்; நானும் கூட, நாம் ஒவ்வொருவருமே. ஆனால் நாம் சென்று கொண்டிருக்கும்போது, நாம் சகோதரர் என்பதை நினைவுகூரக் கடவோம்; நாம் சகோதரர். நமக்கு ஏதாவது சண்டையிருக்குமானால், நம்மில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வோம். நாம் ஒன்றாக அதைக் கொண்டு வருவோம். நமது சகோதரருக்கு முன்பாக அதைக் கொண்டு வந்து அதற்கு தீர்வு காண்போம். பிரன்ஹாம் குடும்பத்தில் இவ்வாறு இருந்து வந்தது. குடும்பத்திலுள்ள இளையோர் ஏதாவதொன்றைச் செய்தால், அவர்கள் அதை என்னிடம் கூறுவார்கள், ஏனெனில் நான் தான் மூத்தவன். நான் அங்கு நின்று கொண்டு யார் சரி யார் தவறு என்று தீர்மானிக்க வேண்டும். எனது தீர்மானம்... யார் சரி யார் தவறு என்பதே. அவர்களுக்கு என் தீர்மானத்தின் பேரில் நம்பிக்கை இராவிடில், அவர்கள் எனக்குப் பின்னால் சென்று சண்டையிட்டுக் கொள்வார்கள். இருந்தாலும், அவர்கள் என் சகோதரரே. பாருங்கள்? அவர்கள் கொல்லைப்புறத்திலும் முற்றத்திலும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வார்கள். அவ்விதமாகத்தான் அது இருந்தது (பாருங்கள்?), இருந்தாலும் நாங்கள் சகோதரரே. நல்லது, அவ்விதமாகவே நாம் இதைச் செய்ய வேண்டும். பாருங்கள்? யாரோ ஒருவருக்கு எதிராக உங்களுக்கு ஏதாவது இருக்குமானால் - உங்கள் சகோதரனுக்கு எதிராக - அவர் செய்த தவறை வேறு யாரிடமாவது கூற வேண்டாம். அவரிடமே சென்று கூறுங்கள். அவர் உங்களிடம் தர்க்கம் பண்ணினால், வேறொருவரை உங்களுடன் கூட்டிச் செல்லுங்கள். வேதம் கூறும் விதமாக அதைச் செய்யுங்கள். 72ஜனங்களின் பார்வையில் இயேசுவை சிறுமைப்படுத்த, அவர்களால் கண்டுபிடிக்க முடிந்த ஒவ்வொரு சிறு தவறையும் அவர்கள் தேடிக் கண்டுபிடிக்க முயன்றனர். அதுதான் பிசாசுக்கு வேண்டும். உங்களுக்கு ஜனங்களிடமுள்ள செல்வாக்கை அவர்கள் கெடுக்க விரும்புகின்றனர். எனவே தான் நீங்கள் செய்யும் காரியங்களில் மிகவும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். உண்மையுள்ள தேவனுடைய மனிதனைப் போல நடவுங்கள், தேவனுடைய மனிதனைப் போல் பேசுங்கள். பாருங்கள்? தேவனுடைய மனிதனைப் போல் நடந்து கொள்ளுங்கள்; தேவனுடைய மனிதனைப் போல் வாழுங்கள். ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல அவனால் முடிந்தவைகளை விழுங்க வகை தேடிச் சுற்றித் திரிகிறான். அவர்கள் ஏன் அவ்விதம் செய்தனர்? அவர்கள் அவர் மேல் பொறாமை கொண்டிருந்தனர். ஆகவே தான் அவர்கள் அவரை சிறுமைப்படுத்த எண்ணினர். அவருடைய ஊழியத்தைக் குறித்து அவர்கள் பொறாமை கொண்டிருந்தனர். ஆகவே தான் அவர்கள் அவரை சிறுமைப்படுத்த முயன்றனர். அவரோ தேவனுடைய ஊழியத்தைக் கொண்டிருந்தார், அது அவர்களுக்குத் தெரியும், ஆனால் அது அவர்களுடைய கோட்பாடுகளுக்கு முரணாக இருந்தது. எனவே அவர்கள் அவரை சிறுமைப்படுத்த எண்ணினர். அவர்களால் கண்டுபிடிக்க முடிந்த சிறு தவறுகளை மிகைப்படுத்தி, அவரை புறம்பாக்க எண்ணினர். அவர் ஊழியத்தை விட்டு விலக வேண்டுமென்று விரும்பினர். ஜனங்கள் அவரை இகழ் வேண்டுமென்று அவர்கள் விரும்பினர். அவர்கள், ''இந்த ஆள் ஒன்றுமற்றவன். இங்கே பாருங்கள், இதோ அவன் இதைச் செய்தான். அது சரியல்ல என்று உங்களுக்குத் தெரியும். நமது மூப்பர்கள் கூறுவதை நாம் விசுவாசிக்க வேண்டுமென்று நமது வாழ்நாள் முழுவதும் போதிக்கப்பட்டு வந்திருக்கிறோம். ஆனால் இவனோ அங்கு நின்று கொண்டு அந்த மூப்பரைப் பார்த்து சத்தமிட்டான். அவன் பிதாக்களின் பாரம்பரியங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான், நாமோ நமது பிதாக்களின் பாரம்பரியங்களை விசுவாசிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். இத்தனை ஆண்டுகளாக நாம் ரபீக்களால் போதிக்கப்பட்டு வந்திருக்கிறோம். இந்த மனிதனோ இங்கு வந்து அவர்களுடன் இணங்க மறுக்கிறான்'' என்றனர். பாருங்கள்? அப்படிப்பட்ட ஒரு மனிதன் பிரசங்கியாயிருக்கத் தகுதியில்லை'' என்றனர். பாருங்கள், அவர்கள் அவரை தாழ்வுபடுத்த எண்ணினர். ஆனால் இவையனைத்திலும், அவரை விசுவாசித்து, அவரை நேசித்து, அவருடைய வேதப் பூர்வமான அற்புதங்களையும் அடையாளங்களையும் கண்டவர்கள், அவர்கள் கூறுவதைக் கேட்டு இடறிப் போகவில்லை. இல்லை, ஐயா அவரை விசுவாசித்தவர்கள் விசுவாசிக்கவே செய்தார்கள். அவரை நேசித்தவர்கள் அவர் பட்சம் நின்றனர். மற்றவர்கள் அவர் பேரில் சுட்டிக் காட்டினதை அவர்கள் காணமறுத்தனர். 73ஓ, நாம் மட்டும் அவ்வாறு இருப்போமானால் நாமும் காணமறுப்போமானால்! யாராகிலும் இங்கு வந்து, “உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் பெந்தெகொஸ்தேகாரர் என்று அவர்கள் கூறுகின்றனர்'' என்றால், ''அந்த ஸ்தாபனத்தை நாங்கள் சேர்ந்தவர்கள் அல்ல.'' ''நல்லது, நீங்கள் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கிறவர்கள் தானே'' “ஆம், நீர் கூறுவது உண்மை''. “நல்லது, உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். அம்முறையில் ஞானஸ்நானம் பெற்ற ஒரு மனிதனை அறிவேன். அவர் இன்னின்னதை செய்தார்''. பாருங்கள், அதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. பிசாசு உங்கள் மேல் ஒரு இழுக்கை எறிய முற்படுகிறான். அவர்கள் எப்பொழுதுமே கடற்கரையில் சேதமடைந்த எதோ ஒரு பழைய கப்பலை சுட்டிக் காட்டுகின்றனரே தவிர, பாதுகாப்பாக பயணம் செய்த ஒன்றை அவர்கள் சுட்டிக் காட்டுவதில்லை. அது உண்மை. பாருங்கள்? அது உண்மை . 74அவர்கள் எப்பொழுதும் ஒரு தரங்கெட்டதை (Crow-bait) அங்கு எறிந்து, “இதுவே உதாரணம், அவர் செய்தது இதுவே. ஓ, பரிசுத்தர் பிரசங்கி ஒருவரை நான் அறிவேன், அவன் இதை, அதை மற்றதை செய்தார்'' என்கின்றனர். ஆனால் பரிசுத்தர் பிரசங்கி அல்லாத ஒருவர் செய்த தவறுகளை அவர்கள் சுட்டிக்காட்ட மாட்டார்கள். பார்த்தீர்களா? அவர்கள் தேவன் செய்த மகத்தான கிரியைகளைச் சுட்டிக் காட்டுவதில்லை. யாரோ ஒருவர், “ஓ, இந்த மனிதன் அளவுகடந்து வெகு தூரம் சென்றுவிட்டார்” என்றார். அவர் அவ்விதம் செய்திருக்கக் கூடும். “அவர் தன்னை சேதப்படுத்திக் கொண்டார்; அவர் அளவு கடந்து வெகு தூரம் சென்றுவிட்டார்; இப்பொழுது அவர் மதவெறி கொண்டிருக்கிறார்”. ஒருக்கால் அவர் அவ்வாறு செய்திருக்கக்கூடும், எத்தனை பேர் அவ்விதம் அளவு கடந்து வெகுதூரம் சென்றுவிட்டனர் என்று அவர்கள் சுட்டிக் காட்டுகையில், அளவு கடந்து செல்லாத இலட்சகணக்கானவர்களைக் குறித்து என்ன? அவர்கள் அதைக் காணத் தவறுகின்றனர். நான் கூறுவது உங்களுக்கு விளங்குகிறதா? 75எனவே அந்த ஜனங்கள் - பரிசேயர், சதுசேயர், மாய்மாலக்காரர், ஏரோதியர் அனைவரும் - இயேசுவின் மேல் இழுக்கைச் சுமத்தப் பார்த்தனர்; ஆனால் உண்மையான விசுவாசிகளோ, அந்த செய்தியைக் கேட்க முன் குறிக்கப்பட்டிருந்த அவர்கள், அதைக் கேட்டு, அதில் எந்த தவறையும் காணவில்லை. இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது. அவரை விசுவாசிப்பவர்கள் அவரை நேசிக்கின்றனர்; அவரை விசுவாசிப்பவர்கள் அவரில் ஒரு பிழையும் காண்பதில்லை. அவர்கள் மார்க்கபேதம் ஒன்றையும் காண்பதில்லை; அவர்கள் ஒரு தவறையும் காண்பதில்லை; அவருடைய வார்த்தையில் அவர்கள் எந்த பிழையும் காண்பதில்லை; அவருடைய ஜனங்களில் அவர்கள் எந்த குற்றத்தையும் காண்பதில்லை; அவர்கள் இயேசுவைக் காண்கின்றனர், அவ்வளவுதான். அவர்கள் நித்திய ஜீவனுக்கென்று முன் குறிக்கப்பட்டவர்கள், எனவே அவர்கள் இயேசுவின் பட்சத்தில் சேர்ந்திருந்து அங்கேயே நிலைத்திருக்கின்றனர். நாங்கள் ஒரு சிறு பாடலைப் பாடுவதுண்டு. சகோ. ராய் ராபர்ஸனும்... ஒரு சிறு பாடலை நாங்கள் இங்கு பாடுவது வழக்கம். நீங்கள் இந்நேரத்தில் இங்கு வருவது நலமென்று எண்ணுகின்றேன். %நிந்தைப்படும் கர்த்தருடைய சிலருடன் என் வழியைத் தெரிந்து கொள்வேன் %நான் இயேசுவுடன் துவங்கிச்சென்று கொண்டிருக்கிறேன் %நான் இயேசுவுடன் தனிமையில் நடப்பது நலம் %யாக்கோபைப் போல் ஒரு கல்லை என் தலையணையாக்கிக் கொள்வேன். 76அந்த சிறு பாடலை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது உண்மை. தள்ளப்பட்டவர்களின் வழியை, நிந்தைப்படுபவர்களின் வழியை, மோசமாக பேசப்படுவர்களின் வழியை, நான் தெரிந்து கொண்டு, இயேசுவுடன் நடப்பேன். அதில் நான் எந்த தவறையும் காணவில்லை. மற்றொருவரின் குற்றத்தை நான் காணவில்லை. நான் போய்க் கொண்டே இருக்கிறேன். அவ்வளவுதான். இப்பொழுது, அவ்விதமாகவே அவர்கள் இயேசுவுக்கு செய்தனர். அவர்கள்... மேய்ப்பர்களாகிய நீங்கள் உங்கள் ஜனங்களுக்கு இவ்வாறு செய்யக் கற்றுக் கொடுக்கவேண்டும். யாராகிலும் அவர்களிடம் வந்து, ''ஆ, உங்களுக்குத் தெரியுமா, உங்கள் சபையில் இன்னின்னார் இருந்தனர், அவர்கள்...'' என்று கூறினால். ஆம், ஐயா, அப்படிப்பட்ட ஒரு டஜன் பேர் இங்கு உட்கார்ந்திருக்கக் கூடும், ஆனால் அங்கே உட்கார்ந்திருக்கிற சரியாயுள்ள அந்த ஒருவரையும் குறித்தென்ன? (பாருங்கள்?) அவ்வளவுதான். அது மீண்டும் நிகழ்கின்றது. இப்பொழுது பார்த்தீர்களா? 77எனவே, அவர்கள் முயன்றனர். அவர் தேவனுடைய கிரியைகளைச் செய்துகொண்டிருந்தார் என்று ஒத்துக்கொள்ள அவர்களுக்கு மனதில்லை. எனவே அவர்கள் வேற்றுமையின் விதையை விதைத்து, ஜனங்கள் அவரை விசுவாசிக்காமலிருக்கச் செய்தனர். ஆனால் அவரை விசுவாசித்த மக்களோ அவருடன் தங்கி தரித்திருந்தனர்; அவர்கள் வெவ்வேறு பக்கங்களைத் தெரிந்து கொண்டனர். உங்களுக்குத் தெரியுமா, இங்கு நான் நினைத்தேன். சிலரை நான் எழுதி வைத்திருக்கிறேன். குருடனை அவர்களால் மாற்ற முடியவில்லை, அவனுக்கு அவர் பார்வையைக் கொடுத்தார்; அந்த வரலாறு நமக்குத் தெரியும். அவன் அவர்களைப் பார்த்து வலியுண்டாக்கும் கேள்வி ஒன்று கேட்டான். அவர்கள் அங்கு வந்தனர். இயேசு நடந்து வந்தார்; அவர் இகழப்பட்டு வெறுக்கப்பட்ட ஒரு மனிதன். அவர் புறக்கணிக்கப்படுவார் என்று வேதம் உரைத்துள்ளது; நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழித்தப்பித் திரிந்தோம். அவர் துக்கம் நிறைந்தவரும், பாடு அனுபவித்தவருமாயிருந்தார். அவர் என்னவாயிருப்பார் என்று வேதம் எவ்வாறு விவரித்துள்ளது! அவர் அசட்டை பண்ணப்பட்டவரும் புறக்கணிக்கப்பட்டவருமாயிருந்தார். அந்த மனிதனை நாம் காண்கிறோம். 78இப்பொழுது, வார்த்தையை விசுவாசித்தவர்கள், இயேசு செய்த கிரியைகள் அவருடைய ஜீவனாயிருந்தது என்பதை அறிந்திருந்தனர்; அவர் யாரென்பதை அவர்கள் அறிந்திருந்தனர். எனவே அவர்கள் அவர் மேல் எந்த பழியும் சுமத்தவில்லை, ஏனெனில் அதை அவர்கள் அவரில் காணவில்லை. அன்பானது அத்தகைய காரியங்களுக்கு எப்படியும் குருடாயிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும், அது உங்களுக்குத் தெரியும். பூரண அன்பு பயத்தையும், பாவத்தையும், எல்லா வேற்றுமையையும் புறம்பே தள்ளும். அன்பு அவ்விதம் செய்யும். இப்பொழுது, இந்த குருடன் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தான், இயேசுவும் அவருடைய சீஷரும் அவ்வழியே வந்தனர். இயேசு அவர்களுக்கு ஒரு சிறுபாடத்தைக் கற்றுக் கொடுத்தார் என்று நினைக்கிறேன். அவர்கள் இந்த ஏழை குருடனைக் கண்டபோது, அவர்கள், ''நிச்சயமாக அதற்கு பின்னால் ஏதோ பாவம் உள்ளது'' என்று நினைத்தனர். ஒரு மனிதனுக்கு ஏதாவதொன்று நேரிடுவதை நாம் கண்டால், நாம் உடனே, ''அவன் பாவம் செய்திருப்பான், அவன் தேவனுடைய சித்தத்தை விட்டு எங்காவது அகன்று சென்றிருப்பான்“ என்கிறோம். சகோ. க்ரேஸ் கம்பத்தில் மோதிக் கொண்டார். அவர் கர்த்தருடைய சித்தத்தை விட்டு எங்காவது அகன்று சென்றிருப்பார் என்று யாராகிலும் ஒருவருடைய அபிப்பிராயமாயிருக்கும். என் மேல் துப்பாக்கி வெடித்த போது, ”நல்லது, அவர் கர்த்தருடைய சித்தத்துக்கு புறம்பே இருந்திருப்பார்'' என்று கூறியிருப்பார்கள். சகோ. நெவில் காரின் மேல் மோதின போது, “அவர் கர்த்தருடைய சித்தத்துக்கு புறம்பே இருந்திருப்பார்'' என்று கூறியிருப்பார்கள். அது உண்மையல்ல. இல்லை, ஐயா, அதுவல்ல, தேவன் இப்படிப்பட்ட காரியங்களை அனுமதிக்கிறார். 79இயேசு அவர்களிடம் திரும்பி அவர்களுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்தார். அவர்கள், அவன் தகப்பன் பாவம் செய்திருப்பான், அல்லது அவன் தாய் பாவம் செய்திருப்பாளர், அல்லது அவனே பாவம் செய்திருப்பானா?'' என்றார்கள். அதற்கு இயேசு, “அது அவர்கள் யார் செய்த பாவமும் அல்ல, தேவனுடைய கிரியைகள் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான்'' என்றார். அவர் அந்த மனிதனிடம் ஒரு காரியத்தைச் செய்யக் கூறி அவனுக்கு பார்வையளித்து விட்டு, அவர் தம் வழியே போனார். இந்த செய்தியைக் கேள்விப்பட்டு பரிசேயர் வந்தனர். இந்த மனிதன் குருடனாயிருந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான்; அவன் பார்வையடைந்து அவனால் காண முடிந்தது. அவர்களிடையே இத்தகவல் பரம்பினவுடன், ஓ, என்னே, அது ஏறத்தாழ ஒரு சலசலப்பை உண்டாக்கினது. அப்பொழுது அவர்கள் குருடன் பார்வையடைந்திருந்ததைக் கண்டனர். முதலாவதாக அவர்கள் ஜனங்களிடையே ஒரு பயத்தை உண்டாக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க முனைந்தனர். அவர்கள் ஏற்கனவே, “யாராகிலும் இந்த புதிய உபதேசத்தின் பின்னாலும், நசரேயனாகிய இயேசு என்றைழக்கப்படும் இந்த புதிய தீர்ககதரிசி பின்னாலும் போனால், உடனே ஐக்கிய சீட்டைக் கிழித்து கையில் கொடுத்து, சபையின் ஐக்கியத்திலிருந்து அவர் புறம்பாக்கப்படுவார். அதன் பிறகு அவர் ஜெப ஆலயத்துக்குப் போகவே முடியாது. நீங்கள் அவருடன் தொடர்பு கொண்டால், அல்லது அவருடைய கூட்டங்களில் ஒன்றுக்கு சென்றால், அப்படிப்பட்ட ஏதாவதொன்றைச் செய்தால், நீங்கள் இனி செல்லவே முடியாது என்று பயமுறுத்தியிருந்தனர். 80எனவே அவர்கள் அதைப் பெரிதும் விளம்பரப்படுத்தினர், ஏனெனில் அவர்கள் அவரை வெறுத்தனர். அவர்கள் அந்த ஏழை குருடன் பார்வையடைந்தைக் குறித்து எண்ணிப் பார்க்கவே இல்லை. ஜனங்கள் அவரை விட்டுவிலகியிருக்கச் செய்ய அவர்கள் இதைப் பெரிதும் விளம்பரப்படுத்தினர். அவர்கள் இதைக் குறித்து அவன் பெற்றோரைக் கேட்க வேண்டும் என்றனர். எனவே அவர்கள் அவன் பெற்றோரிடம் சென்று, “இது உங்கள் மகன் தானா?'' என்று வினவினர். அவன் தகப்பன், ''ஆம் ஐயா'' என்றான். ''அவன் பிறவிக்குருடனா?'' ''ஆம், ஐயா'' “அவன் எப்படி பார்வையடைந்தான்?'' அவனுடைய தாய் தகப்பன்மார் யூதர்களுக்குப் பயந்தார்கள் என்று வேதம் கூறுகிறது, ஏனெனில் இயேசுவை அறிக்கை பண்ணினால் அவர்கள் ஜெப ஆலயத்துக்குப் புறம்பாக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். பாருங்கள், அவன் தாய் தகப்பன்மாரிடம் கொண்டு செல்லப்பட்டான். அவர்கள், “இவன் எங்கள் குமாரன் தான் என்று எங்களுக்குத் தெரியும்'' என்றனர். 81ஓ, ஒருவேளை சில ஆயிரக்கணக்கான ஜனங்கள் அங்கு நின்றுகொண்டிருந்திருப்பார்கள். அவன் மட்டும்... அந்த நாற்ற மெடுத்த பரிசேயர் அவர் பெயருக்கு இழுக்கை அந்த இடத்திலேயே கொண்டு வந்தால், அல்லது ஜனங்களை பயமுறுத்த ஏதாவதொன்றைச் செய்தால், அவரை அந்தக் கூட்டத்திலிருந்து விரட்டியடித்து விடலாம் என்று எண்ணியிருப்பார்கள். பாருங்கள்? அவருடைய செல்வாக்கு அனைத்தும் இழக்கப்பட்டிருக்கும். எனவே அவர்கள் சொன்னார்கள். ஒரு கூட்டத்தார் தங்கள் ஆசாரிய அங்கிகளுடன் அங்கு வந்து, அவனைப் பற்றி சொல்லுங்கள்'' என்றனர். அவர்கள், “இவன் எங்களுடைய குமாரன் என்று எங்களுக்குத் தெரியும், அவன் குருடனாகப் பிறந்தான் என்று எங்களுக்கு தெரியும். இப்பொழுது இவன் பார்வையடைந்த வகை எங்களுக்குத் தெரியாது. அவனையே கேளுங்கள், அவன் வயதுள்ளவனாயிருக்கிறான்'' என்றனர். பாருங்கள்? சரி, எனவே அவர்கள் அவனை அழைத்து, ''உனக்கு பார்வையளித்தது யார்? அவன் எப்படி உன்னை குணமாக்கினான்?'' என்றனர். அவர்கள், ''நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம். அவன் எங்கிருந்து வந்தான்?'' என்றனர். அவன், “எனக்குத் தெரியாது. அவர் அவ்வழியே வந்து என்னை சுகப்படுத்தினார், அவ்வளவு தான் எனக்குத் தெரியும்... ஆனால் ஒன்று மட்டும் அறிவேன். அவர் பாவியா இல்லையா என்று என்னால் சொல்ல முடியாது; எனக்குத் தெரியாது. இன்று தான் நான் அந்த மனிதனை சந்தித்தேன். அவர் எனக்குப் பார்வையை அளிக்க முடிந்தால், இந்த ஒன்று மட்டும் எனக்குத் தெரியும், நான் குருடனாயிருந்தேன். இப்பொழுது காண்கிறேன். அதைக் குறித்து நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். அரை மணி நேரத்துக்கு முன்பாக நான் குருடனாயிருந்தேன். ஆனால் இப்பொழுதுதோ உங்கள் எல்லோரையும் போலவே நான் நல்ல பார்வையுடையவனாயிருக்கிறேன். எனவே என்னால் இப்பொழுது காண முடிகிறது என்பதை அறிந்திருக்கிறேன்'' என்றான். ஓ, அது எத்தகைய வலியை அவர்களுக்கு உண்டாக்கினது! எனவே அவர்கள் நினைத்தனர், “ஏன்...'' 82அவன் அவர்களை நோக்கி, “அவருக்குச் சீஷராக உங்கள் எல்லோருக்கும் மனதுண்டோ?'' என்று கேட்டான்... அது ஒரு நல்ல உறுதியான சாட்சி, அது ஒரு நல்ல முன்னுரை. அது உண்மையிலேயே நல்ல சாட்சி பகருதல் என்று நான் கூறுவேன். அவன், “உங்கள் எல்லோருக்கும்...'' என்றான். இதோ ஒரு சாதாரண உறுப்பினன், ஒரு குருடன், இயேசுவை சந்தித்த பிறகு தெருவில் நின்றுகொண்டு, சீஷரை - அல்ல, பரிசேயரை - அதாவது பேராயர்களை, தலைவர்களைப் பார்த்து, ”அவருக்குச் சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ?'' என்று கேட்கிறான். அதற்கு அவர்கள், ''நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர் (அவர்கள் வரலாற்றை நோக்கிப் பார்க்கின்றனர்). நாங்கள் மோசேயினுடைய சீஷர். இந்த மனிதனைக் குறித்து எங்களுக்கு ஒன்றும் தெரியாது; இவன் எங்கேயிருந்து வந்தவனென்று அறியோம். எங்களுடைய வேத பள்ளிகளில், அவன் எந்த பள்ளியிலிருந்து வந்தவனென்று அறியோம். அவன் எங்களிடத்திற்கு வந்து இவைகளைக் குறித்து ஒன்றுமே கேட்கவில்லை (பாருங்கள்?) அதைக் குறித்து எங்களுக்கு ஒன்றுமே தெரியாது. இங்கு கூடியுள்ள ஜனங்களே, அந்த மனிதன் குரு பட்டம் பெறவில்லை என்பதை உணருகிறீர்களா? அவன் குறி சொல்பவன்; அவன் பெயல்செபூல். நீங்கள் மாந்திரீக சக்தியில் வசீகரிக்கப்படுகிறீர்கள். அவனிடம் எந்த விதமான அதிகாரச் சீட்டும் இல்லை; அதை நாங்கள் அவனுக்குக் கொடுக்கவில்லை.(பாருங்கள்?) இவன் எங்கிருந்து வந்தவனென்று நாங்கள் அறியோம்'' என்றனர். 83ஆனால் அங்கு நின்று கொண்டிருந்த பார்வையடைந்த இந்த மனிதனோ, ''இது ஒரு அற்புதமான காரியம்'' என்று கூறினான். பாருங்கள், அவன் ஜனங்களிடம் இது உண்மை என்று கூறி அவர்களை ஏறக்குறைய நம்பச் செய்தான். ஆனால் இந்த பரிசேயர்களோ அவர்களுக்குள் பயத்தை விளைவித்தனர். பாருங்கள்? அவன் இயேசுவின் பட்சம் சேர்ந்து விட்டான். பாருங்கள்? எனவே அவன், “இது ஒரு அற்புதமான காரியம்'' என்றான். (இவ்விதமாக அவன் கூறியிருக்கலாம், அவன் கூறினவைகளை நான் இங்கே சிலவற்றை கூறட்டும்). ''இங்கு நின்றுகொண்டிருக்கும் ஆசாமிகளாகிய நீங்கள் நானூறு ஆண்டுகளாக இந்த மார்க்கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறீர்கள். வரப்போகும் மேசியாவைக் குறித்து நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஏற்ற காலத்தில் ஏதோ ஒன்று நடக்குமென்றும், நம்மை மீட்டுக்கொள்ளப் போகிறவர் நம்மை வந்து சந்திப்பார் என்றும் கூறுகிறீர்கள். அவர் வரும்போது என்னவெல்லாம் செய்வார் என்றும் நீங்கள் கூறுகிறீர்கள். ஆவிக்குரிய தலைவர்களாகிய பிரதான ஆசாரியர்களும் ஆசாரியர்களுமாகிய நீங்கள் இங்கு ஒருமித்து ஜனங்களுக்கு முன்பாக நின்று கொண்டு, அவருடைய பெயருக்கு இழுக்குண்டாக்க முனைந்து, அவருக்கு விரோதமாக பொல்லாதவைகளைக் கூற முற்படுகிறீர்கள். இந்த மனிதன் வந்து என் கண்களைத் திறந்தார். நான் குருடனாகப் பிறந்தேன். நான் குருடனாகப் பிறந்தேன் என்று இதோ என் தாய் தகப்பன்மார் சாட்சி பகருகின்றனர். இத்தனை ஆண்டுகளாக நான் உங்கள் மத்தியில் குருடனாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். உலகம் உண்டானது முதல் இது போன்ற காரியம் சம்பவித்ததேயில்லை. இதோ ஒரு மனிதன் வந்து, உலகம் உண்டானது முதல் இதுவரையிலும் சம்பவிக்காத ஒரு அற்புதத்தை செய்கிறார். ஆவிக்குரிய தலைவர்களாகிய நீங்களோ அதைக் குறித்து ஒன்றுமே அறியாதிருக்கிறீர்களே” (வ்யூ உ - உ- ம்). ''இது ஒரு அற்புதமான செயல் என்பது என் கருத்து'' என்றான். அவன் இயேசுவின் பட்சம் சேர்ந்து கொண்டான். பாருங்கள்? 84தேவனுடைய கிரியைகள் வெளியாகும் பொருட்டும் (பாருங்கள்?) அவன் கர்த்தராகிய இயேசுவின் பட்சம் சேர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவும், அவன் குருடனாக இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டான். அவன் அவர் பட்சம் சேர்ந்துகொண்டான். அவன் அவர்களிடம் வலியுண்டாக்கும் கேள்வியைக் கேட்டான். அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அவர்கள், ''நீ பாவத்தில் பிறந்தவன் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்... நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ...'' என்றனர். அவனை அவர்கள் சபையை விட்டுப் புறம்பாக்கினர். அவனை வெளியே தள்ளினர், அவனை வெளியே எறிந்தனர். அவனை வெளியே எறிந்தவுடன் என்ன நடந்ததென்பதை கவனித்தீர்களா? இயேசு அவனை மறுபடியும் தேடிக் கண்டுபிடித்தார்! ஆமென், ஆமென்! இயேசு அவனை மறுபடியும் கண்டுபிடித்தார். எனவே அவர்கள் உங்களை வெளியே எறிந்தால் கவலைப்படாதீர்கள். அவர் உங்களை மறுபடியும் கண்டுபிடிப்பார். பாருங்கள்? சரி. அவர் அவனிடம், “நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா?'' என்றார். அவன், “ஆண்டவரே, அவர் யார்?'' என்றான். அது யாரென்று அவனுக்கு தெரியக்கூட இல்லை. ஆனால் அவன் அறிந்திருந்த ஒரே காரியம், அவன் குருடனாயிருந்தான், பிறகு அவனால் காணமுடிந்தது. 85சகோதரரே, இந்த ஒரு காரியத்தை நான் அறிந்திருக்கிறேன். அவர்கள் இதை மதவெறி என்றோ, அல்லது வேறு என்ன வேண்டுமானாலும் அழைக்கட்டும். ஆனால் நான் ஒரு காலத்தில் பாவியாயிருந்தேன், இப்பொழுதுதோ அவருடைய கிருபைக்குள் வந்துவிட்டேன். ஏதோ ஒன்று எனக்கு சம்பவித்துள்ளது. பாருங்கள்? இந்த ஒரு காரியத்தை இப்பொழுது நான் அறிந்திருக்கிறேன். அவருடைய வார்த்தையை நம்பி, அவரை விசுவாசித்து... நான் வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு ஸ்தாபனத்திலிருந்தும் உதைத்து தள்ளப்பட்டிருக்கிறேன். அவர்கள் யாருமே என்னை இனி ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது உங்களுக்குத் தெரியும். இங்குள்ள ஏதாவதொரு மனிதர் - நல்ல மனிதர் - என்னை ஏற்றுக்கொள்ளக் கூடும்; ஆனால் ஒவ்வொரு ஸ்தாபனமும் என்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அது உண்மை. ஆனால் அவர் என்னைக் கண்டு பிடித்துவிடுவார். அது உண்மை . அவர் அவ்விதமாக அது நடந்தேறும்.... எனவே, அதனால் பரவாயில்லை, ஏனெனில் நாம் இயேசுவின் பட்சம் சேர்ந்திருக்க விரும்புகிறோம். இயேசுவின் பட்சம் நீங்கள் சேர்ந்திருக்கக் கூடிய ஒரே வழி, அவருடைய வார்த்தையை விசுவாசித்து அவர் உரைத்ததன் பட்சத்தில் சேர்ந்திருத்தலேயாகும். எனவே நாம் அவர் பட்சத்தில் சேர்ந்திருப்போம். அந்தக் குருடன் அவர்களுக்கு ஒரு உண்மையான சாட்சியளித்தான். சரி. 86அவருடைய பெயருக்கு அவர்கள் இழுக்கு கொண்டு வர முயன்றதாக நாம் காண்கிறோம். (இன்னும் சிறிதளவு, இங்கு எழுதி வைத்துள்ள சிலவற்றை நான் விட்டுக்கடந்து செல்ல வேண்டியதாயுள்ளது). ஒரு சமயம் ஒரு பரிசேயன் இருந்தான். சிலநாட்களுக்கு முன்பு அதைக் குறித்து இங்கு பிரசங்கித்து, அதை “இயேசுவின் பாதங்களைக் கழுவுதல்” என்று அழைத்தேன். அதைக்குறித்து இங்கு நான் பிரசங்கித்ததை நீங்கள் எல்லோரும் கேட்டிருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். பரிசேயன் ஒருவன் இயேசுவை தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தான் - ஒரு பெரிய, வயோதிப , விறைப்பான பரிசேயன் -அவரை வரும்படி அழைத்தான். அதை ஒரு நாடக வடிவத்தில் இங்கு அளித்தேன் என்று உங்களுக்குத் தெரியும், எவ்வாறு பரிசேயன் அனுப்பின் ஆள் வந்து இயேசுவைக் கண்டான் என்று. அவன் வந்து அவரை சந்தித்தான். அவர் வெறுக்கப்பட்டிருந்தார் என்று அறிந்திருந்த போதிலும், அவர் அங்கு சென்றார், அவர் அங்கு அடைந்த போது, அவருடைய பாதங்களை அவர்கள் கழுவவில்லை. அவர் சாலையில் நடந்து வந்ததனால் அவர் மேலிருந்த துர்நாற்றத்துடன் அவர் அங்கு உட்கார்ந்திருக்கும்படி விட்டுவிட்டனர். அவர் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது ஸ்திரீ ஒருத்தி உள்ளே வந்தாள். அவர்கள், “ஓ என்னே, கர்த்தர் நமக்கு நல்லவராயிருக்கிறார், ஏனெனில் பாருங்கள், நமது பெரிய விருந்துக்கு...'' என்றனர். 'அவரை கேலி பரியாசம் செய்வதற்காகவே அவரை அங்கு கொண்டு வந்திருந்தனர். இப்பொழுது, பெயர் கெட்ட ஒரு வேசிப் பெண் அங்கு வந்து அழுது, தன் கண்ணீரால் அவருடைய பாதங்களைக் கழுவி, அவளுடைய தலை மயிரினால் துடைத்ததை அவர்கள் கண்டபோது, தேவன் எல்லாவற்றையும் அவர்களிடம் சரிவர கிரியை செய்கிறார் என்பதாக அவர்கள் எண்ணினர். அந்த வயோதிப பரிசேயனும் அங்கு மூலையில் நின்று கொண்டிருந்த மற்ற ஆசாரியர்களும், சகோதரனே, எல்லாமே... நமக்காக தேவன் இதை சரிவர அமைத்து தந்துவிட்டார். இப்பொழுதே நாம் இந்தவிடத்தில் அவருடைய பெயருக்கு இழுக்கை உண்டாக்கிவிடலாம். அவர் தம்மை தீர்க்கதரிசியென்று அழைத்துக் கொள்கிறார். அவர்கள் அவரை கலிலேய தீர்க்கதரிசியென்று அழைக்கின்றனர். அவர் தம்மை மேசியாவென்று உரிமை கோருகிறார், மேசியா தீர்க்கதரிசியாயிருப்பார் என்று நாம் அறிந்திருக்கிறோம். இதோ அவர் அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவரை நாம் எங்கே கொண்டு வந்திருக்கிறோம் என்று பார்த்தீர்களா? அங்கு பாருங்கள், அவர் இப்பொழுது மாட்டிக் கொள்ளும்படி செய்துவிட்டோம். அதோ அவர் சாட்டையால் அடிக்கப்பட்ட நாய்க் குட்டியைப் போல் குனிந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய இன வகுப்பைச் சார்ந்த ஏதோ ஒரு வேசி அவரிடம் வந்து அவருடைய பாதங்களை இவ்வாறு கழுவுகிறாள். அவருக்குத் தெரியவே தெரியாது. அவர் தீர்க்கதரிசியாயிருந்தால், அவள் எப்படிப்பட்ட ஸ்திரீயென்று அறிந்திருப்பார். இப்பொழுது இங்கு கூடி வந்துள்ளாரே, இதன் பெயரில் நாம் ஆரவாரித்து களிப்போம். ஏனெனில் அங்கு பாருங்கள்...'' என்றான். 87பாருங்கள், அவருடைய பெயருக்கு இழுக்கு வருவிக்கும் எந்த ஒன்றையும், ஜனங்கள் அவர் பேரில் வைத்திருந்த நம்பிக்கையை குலைத்து போடும் எந்த ஒன்றையும், அவர்கள் செய்து, அவ்விதம் செய்ய அவர்கள் பிசாசினால் பீடிக்கப்பட்டிருந்தனர் என்பதை அறியாமலிருந்தனர். அவர்கள் பிசாசுடன் இணைந்து கிரியை செய்து, தேவனுடைய குமாரனின் பெயருக்கு இழுக்கைக் கொண்டு வர முயன்றனர். சகோதரரே, அவர்கள் ஏன் அவ்விதம் செய்தனர்? ஏனெனில் அவர்கள் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்க்கவில்லை. இயேசு, “வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே'' என்றார். ஓ, அவருக்கு எத்தனை மேன்மையான ஊழியம் உண்டாயிருந்தது! பாருங்கள்? ஆம் ஐயா. ''என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை” பாருங்கள்? ஆனால் இங்கே இந்த பரிசேயன், ''அவரை இப்பொழுது பிடித்துவிட்டோம். ஓ, இங்கே பாருங்கள், இந்த விருந்தில் ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு பேர் இருக்கின்றனர். அங்கே அவர் உட்கார்ந்திருப்பதைப் பாருங்கள். அவர் ஒரு வேசியுடன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்'' என்றான். 88ஓ என்னே, அந்நாட்களில் அது எவ்வளவு ஒரு மோசமான காரியமாக இருந்தது! வ்யூ! உம் - ம் - ம்! அவர் அங்கே பெயர் கெட்ட ஒரு ஸ்திரீயுடன் இருந்தார். அவர் மெல்ல நழுவி - அவர் மெல்ல நழுவிச் சென்றிருப்பார் என்று தோன்றுகிறது. அவர் பாதங்களைக் கழுவும் இடம், இன்னும் மற்றவைகளையும் கடந்து சென்று அங்கே போய் உட்கார்ந்தார். அந்த பரிசேயன், “இதோ அவருடைய பாதங்களை அவள் கழுவிக் கொண்டிருக்கிறாள். அவர் தீர்க்கதரிசியாயிருந்தால்... பாருங்கள், சகோதரரே, அந்த மனிதன் ஒரு தீர்க்கதரிசியல்ல. அவர் தீர்க்கதரிசியாயிருந்தால், அவருடைய பாதங்களைக் கழுவிக்கொண்டிருக்கிற அந்த ஸ்திரீ எப்படிப்பட்டவள் என்பதை அறிந்திருப்பாரே'' என்றான். இயேசு உட்கார்ந்து கொண்டு அவளையே கவனித்துக் கொண்டிருந்தார். அவள் முடிக்கும் வரைக்கும் பாதத்தை அசைக்கவில்லை. நீங்கள் இயேசுவுக்காக ஏதாவதொன்றைச் செய்வீர்களானால், அவர் சில நேரங்களில் உட்கார்ந்து கொண்டு உங்களையே கவனித்துக் கொண்டிருப்பார். நீங்கள் அதை முடிக்கும் வரைக்கும், நீங்கள் செய்யும்படி விட்டுவிடுகிறார். அதன்பிறகு பலன் வருகிறது. உங்களுடைய வாழ்க்கையின் ஓட்டப்பந்தயம் முழுவதிலும், ஒருக்கால் நீங்கள் அவருக்காக உழைத்து ஓடியிருக்கக் கூடும். ஆனால் கவலைப்படாதீர்கள். அவருடைய பட்சத்தில் உங்கள் வழியை நீங்கள் தெரிந்து கொள்வீர்களானால், முடிவில் உங்களுக்குப் பலன் காத்திருக்கும். 89நீங்கள் ஜெபித்த ஒரு நபரும் கூட சுகமடைவதை நீங்கள் காணாமலிருக்கலாம். இருப்பினும் வியாதியஸ்தருக்காக நீங்கள் ஜெபித்துக் கொண்டேயிருங்கள். “இன்றிரவு நான் ஐந்நூறு பேர்களுக்கு ஜெபித்து, அடுத்த நாள் காலையில் அந்த ஐந்நூறு பேர் மரித்துப் போனாலும், அடுத்த நாள் இரவு நான் தெய்வீக சுகமளித்தலைக் குறித்து பிரசங்கித்து, வியாதியஸ்தருக்காக ஜெபித்துக் கொண்டிருப்பேன்” என்று நான் அடிக்கடி கூறியதுண்டு. பாருங்கள்? அதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. பாருங்கள்? நீங்கள் தோல்விகளுக்கு வரும் வரைக்கும், நீங்கள் பாதையின் முடிவுக்கு வந்து உங்கள் வேலையை முடிக்கும் வரைக்கும், அவர் உங்களை அனுமதித்து, அவர் அந்த ஸ்திரீயை அனுமதித்தது போல.... அவள் அவருக்கு ஒரு சேவை செய்ய விரும்பினாள், எனவே அவருடைய பாதங்களை அவர் அங்கு நீட்டிக் கொடுத்து, அவைகளைக் கழுவும்படி அனுமதித்தார். ஓ, அவர், “அப்படி செய்யாதே” என்று கூறியிருந்தால், அவள் குதித்து ஓடிவிட்டிருப்பாள்; ஆனால் அவரோ அந்த சேவையை அவள் செய்ய அனுமதித்தார். 90அவள் செய்யவிருந்த சேவையை செய்து முடித்த பிறகு, அங்கு பின்னால் நின்று கொண்டிருந்த அவருடைய பெயருக்கு இழுக்கு கொணர முனைந்த அந்த மாய்மாலக்காரனைப் பார்த்து, “சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்ல வேண்டும்; அவளுக்கல்ல, உனக்கு. பின்னால் நின்று கொண்டிருக்கிறவனே, உன் இருதயத்தில் அந்த நோக்கத்தை நீ கொண்டிருப்பதன் காரணத்தினால் தான் என்னை நீ இங்கு கொண்டு வந்தாய். நீ என்னுடன் ஐக்கியம் கொண்டிருக்கவில்லை. அது எனக்குத் தெரியாதா என்ன? என்னைக் கேலி பரிகாசம் செய்வதற்கே இங்கு கொண்டு வந்து அங்கு உட்காரவைத்தாய்... என் கால்களைக் கழுவ எனக்கு நீ தண்ணீர் தரவில்லை; என்னை குளிரச் செய்ய எனக்கு நீ ஒன்றும் தரவில்லை. எனக்கு உடலெல்லாம் எரிச்சல் உண்டாகி இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். என் முகத்துக்கு நீ எண்ணெய் தரவில்லை. என்னை வரவேற்று முத்தம் கொடுக்கவோ அல்லது என் கையைக் குலுக்கவோ உனக்கு வெட்கமாயிருந்தது (பார்?). உன் விருந்தாளிக்கு முன்பாக அவ்விதம் செய்ய நீ வெட்கப்பட்டாய். ஆனால் இவளோ, அவள் உட்பிரவேசித்தது முதல், என் கால்களை அவளுடைய கண்ணீரினால் குளிப்பாட்டி, அவைகளை தன் தலைமயிராகிய துவாலையினால் துடைப்பதைத் தவிர வேறொன்றையும் செய்யவில்லை. நான் தீர்க்கதரிசியா இல்லையாவென்று உனக்குக் காண்பிக்கிறேன்'' என்றார். ஆமென்! அது எனக்குப் பிரியம். “இப்பொழுது உன்னிடம் ஒரு நிமிடம் பேச விரும்புகிறேன், நீ செய்த அநேக பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது.'' உம்-ம்-ம், அவர்கள் அவருடைய பெயரைக் கெடுத்தார்களா? அவர்கள் அவரைப் பிடித்துவிட்டதாக நினைத்தார்கள், அவர்கள் அதை நிறுத்திவிட்டதாக எண்ணினர்; அந்த சமுதாயத்தின் மத்தியில் அவர் எழுப்புதல் கூட்டம் நடத்தாதபடிக்கு அவரைத் தடுத்துவிட்டதாக நினைத்தனர்; அவருடைய செல்வாக்கை அவர்கள் குலைத்துவிட்டதாக எண்ணினர்; ஆனால் சூழ்நிலையை மாற்றி அமைக்க அவரை நேசித்த ஒரே ஒரு நபர் போதுமானதாயிருந்தது. 91உங்கள் சமுதாயத்தில் நீங்கள் சந்திக்கும் யாராகிலும் ஒருவருக்கு நீங்கள் ஏன் அந்த நபராக இருக்கக் கூடாது? அவர் பட்சத்தில் சேர்ந்து கொள்ளுங்கள்; அவருக்கு சேவை செய்யுங்கள்; அவருக்கு ஏதாவதொன்றைச் செய்யுங்கள். சகோதரரே, நான் கூறுவது உங்களுக்குப் புரிகிறதா? இயேசுவின் பக்கம் சேர்ந்து கொள்ளுங்கள். அவரை தெரிந்து கொள்ளுங்கள். யார் என்ன கூறின போதிலும் அதை பொருட்படுத்தாமல் அவருக்கு சேவை செய்யுங்கள். உங்களுக்கு பிரதிபலன் கிடைக்காமற்போனாலும் அதனால் எந்த வித்தியாசமும் இல்லை. வேலை முடியும் மட்டும் காத்திருங்கள். அவர் உங்களிடம் இவ்வாறு கூறினால் எப்படியிருக்கும்... நீங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபித்து அவர்கள் சுகமடையாமல் போனாலும், நீங்கள் அந்நியபாஷைகளில் பேச விரும்பி அதற்காக ஜெபித்து, நீங்கள் பேசாமல் போனாலும்; தீர்க்கதரிசனம் உரைக்க விரும்பி அதற்காக ஜெபித்து, நீங்கள் உரைக்காமல் போனாலும்; உங்களால் செய்யமுடிந்த ஒரே காரியம், உங்கள் சபையிலோ அல்லது உங்கள் சமுதாயத்திலோ இயேசுவின் வரலாற்றை கூறுவது மட்டுமே. உங்களால் வேறொன்றையும் செய்யமுடியவில்லை; நீங்கள் ஒரு நபரையும் கூட கிறிஸ்துவினிடம் நடத்தவில்லை என்று வைத்துக் கொள்வோம். அந்த ஸ்திரீ ஒருவரையும் கூட கிறிஸ்துவினிடம் நடத்தவில்லை, ஆனால் அவள் அவருக்கு ஒரு சேவை செய்தாள். பாதையின் முடிவில் அவர், ''நான் உனக்குச் சொல்லுகிறேன், உன் பாவங்களெல்லாம்... உன் ஜெபம் ஒன்றுக்கும் கூட பதில் கிடைக்கவில்லை என்றாலும், என் வார்த்தையின் அடிப்படையில் நீ வந்திருக்கிறாய். என்னை நீ விசுவாசித்தபடியினால் நீ வந்து எனக்கு சேவை செய்திருக்கிறாய். ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ செய்த அநேக பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன'' என்று அவர் கூறினால், அதனால் என்ன வித்தியாசம்? அது எனக்குப் போதுமானது. ஆமென். ஆம், ஐயா. 92சரி. அவர்கள், ''அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன'' என்று கூற விரும்புகின்றனர். அவர்கள் அவ்விதம் சொல்லிக் கொண்டே போகட்டும், நாம் கர்த்தருக்கு சேவை செய்து கொண்டே போவோம். அவர்கள் அவர் மேலிருந்த பொறாமையின் காரணமாக அவரை வெறுத்தனர். அந்த ஒரே காரணம் தான், அவர்கள் அவர் மேல் பொறாமை கொண்டனர். அவர் ஜனங்களிடம் கொண்டிருந்த செல்வாக்கை அவர்கள் அழிக்கப் பார்த்தனர். இப்பொழுதும் அவர்கள் அதையே செய்கின்றனர், அவர்கள்... அவர்கள் மட்டும் செய்தியானது ஜனங்களிடம் பெற்றுள்ள செல்வாக்கை குலைத்து போட்டுவிட்டால், அதை அவர்கள் தங்கள் கீழடக்கிவிடலாம் என்று எண்ணியுள்ளனர். அது உண்மை. ஏனெனில் அவர்கள் ஏன் அவ்விதம் செய்ய முனைகின்றனர்? ஏனெனில் அவர் அவர்களுடைய கோட்பாடுகளுக்கும், அவர்களுடைய சபை உபதேசங்களுக்கும், அவர்கள் விசுவாசித்த அனைத்துக்கும் விரோதமாயிருந்தார். அவர் அவையனைத்துக்கும் விரோதமாயிருந்தார். அவர் அவர்களுடன் ஒருமித்து செல்லாததால், அவர்கள் அவரை வெறுத்தனர். 93அவர் அங்கு வந்து, “ஓ காய்பாவே, என் பிதாவின் அற்புதமான மனிதனே, நான் தான் மேசியா காய்பாவே, இங்கே வா. அங்குள்ள தண்ணீரைப் பார்த்தாயா? எகிப்தில் அந்த மகத்தான தீர்க்கதரிசி மோசே தண்ணீரை இரத்தமாக மாற்றினது உனக்கு ஞாபகமுள்ளதா? காய்பாவே, உனக்கு ஞாபகமுள்ளதா?'' என்று கேட்டிருந்தால், “ஓ, வாலிபனே, அந்த வரலாறு எனக்கு நன்றாகத் தெரியும்'' என்று சொல்லியிருப்பான். “சரி காய்பாவே, இப்பொழுது நான் தண்ணீரை இரத்தமாக மாற்றி, மோசே முன்னுரைத்த அந்த தீர்க்கதரிசி நான் தான் என்பதை உனக்குக் காண்பிக்கப் போகிறேன். அதோ அது மாறிவிட்டது. காய்பாவே, அதைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்?'' “காய்பாவாகிய நான் ஒரு பரிசேயன் என்பதைக் குறித்து நீர் என்னை நினைக்கிறீர்?பரிசேயர்களைக் குறித்து உம் கருத்து என்ன?'' “ஓ, அவர்கள் அற்புதமான வர்க்கத்தினர். ஓ, நீங்கள் அனைவரும் உங்கள் பிதாக்களின் பாரம்பரியங்களை அப்படியே கைக்கொள்கின்றீர்கள்.'' ''அப்படியானால் நீர் மேசியாவாக இருக்கக்கூடும்.'' ஓ, அவர் இருக்கவே முடியாது. அவர் மேசியா அல்ல என்பதற்கு அதுவே அறிகுறி. யாராகிலும் ஒருவர் வந்து, ''இங்கு வா, என்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் காண்பிக்கிறேன்'' என்றும், சொல்வதைக் நீங்கள் கேட்டால், துவக்கத்திலேயே சந்தேகப்படத்தக்க ஏதோ ஒன்று அதிலுண்டு என்பதை இப்பொழுதே நினைவில் கொள்ளுங்கள். இயேசு, ''என் பிதா எனக்கு முதலில் காண்பிக்காமல் நான் எதையும் செய்வதில்லை“ என்றார். பாருங்கள்? 94ஆம், அவர் அவர்களுக்கு விரோதமாயிருந்தார்; அவர்களுக்கு விரோதமாக அவர் போதித்தார்; அவர்களுடைய ஓய்வு நாள் ஆசரிப்பை அவர் கடிந்து கொண்டார்; அவர்கள் உடுக்கும் விதத்தை அவர் கடிந்து கொண்டார்; அவர்கள் வாழ்க்கையில் கடைபிடித்த எல்லா வழிகளையும் அவர் கடிந்து கொண்டார் - அவர்களுடைய பாரம்பரியங்கள் அனைத்தையும்; பாத்திரங்களைக் கழுவுதலையும், கைகளைக் கழுவுதலையும், மற்றவைகளையும். அவை ஒவ்வொன்றாக அவர் கடிந்துகொண்டார். அவர்கள் உடுத்தும் விதத்தைக் குறித்து அவர், ''நீங்கள் சித்திரத்தையாடல் அங்கிகளை அணிந்து, முதன்மையான ஆசனங்களை விரும்பி, நீண்ட ஜெபம் செய்து, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப் போடுகிறீர்கள். நீங்கள் அதிக ஆக்கினையை அடைவீர்கள்'' என்றார். ''நல்லது, நான் டாக்டர் இன்னார் என்று ஞாபகம் கொள்ளுங்கள்.'' “நீர் யாராயிருந்தாலும் எனக்கு அக்கறையில்லை'' ஓ, அவர்களை உண்மையில் கடிந்து கொண்டார். அவர்கள்... ஏன்? ஏனெனில் அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை; அவர் வார்த்தையாயிருந்தார். பாருங்கள்? அவர் சட்டங்களைக் கைக்கொள்ளும் அந்த கூட்டத்தினரை உடைக்கப் பார்த்தார். இன்று அவர் பூமியில் இருப்பாரானால், அவர் அதையே செய்வார். 95சிலர், ''நல்லது, ஒரு நிமிடம் பொறுங்கள். நாங்கள் ஓய்வு நாளை ஆசரிக்கிறோம். எப்பொழுதாவது... நாங்கள் இதை செய்கிறோம். உங்களுக்குத் தெரியுமா, நாங்கள் இதை, அதை கைக்கொள்கிறோம். ஒவ்வொரு... ஒவ்வொரு பெரிய வெளிக்கிழமை வரும் போதும்... ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பு நாற்பது நாட்கள் நாங்கள் லெந்து நாட்களை ஆசரித்து உபவாசிக்கிறோம். அந்த நாற்பது நாட்களின் போது நாங்கள் புகைப்பதை விட்டுவிடுகிறோம். லெந்து நாட்களாகிய நாற்பது நாட்களின் போது, நாங்கள் மது அருந்துவதை விட்டுவிடுகிறோம்'' என்கின்றனர். ஓ! பிதாக்களின் பாரம்பரியம் - பிரமாணங்களை ஆசரிப்பவர்கள். நீங்கள் தேவனை நேசித்தால், நீங்கள் முதற்கண் புகை பிடிக்கவே மாட்டீர்கள். நீங்கள் தேவனை நேசித்தால், நீங்கள்... முதன்முதலாக என் சிறு வேதாகமத்தின் பின் பக்கத்தில் நான் இதைத் தான் எழுதி வைத்தேன். என்னை மூடத்தனமாக கேள்விகள் கேட்காதே இதை மனதில் தீர்மானம் செய் நீ தேவனை உன் முழு இருதயத்தோடும் நேசித்தால் நீ புகை பிடிக்கமாட்டாய், புகையிலை மெல்ல மாட்டாய் எந்த பளிங்கான மதுவையும்அருந்தமாட்டாய் அது இன்று வரைக்கும் என் விஷயத்தில் உண்மையாய் இருந்து வந்துள்ளது. அதை நான் செய்யாததன் காரணம், அதை செய்தால் அவர் என்னைக் கடிந்துகொள்வார் என்பது என் கருத்து. அதை நான் செய்யாமலிருப்பதன் காரணம் அது அசுத்தமான பழக்கம், அது ஊழியக்காரனுக்கு உகந்ததல்ல. அது உண்மை. நான் கூறமாட்டேன்... 96அநேக சமயங்களில் நான் வீடுகளுக்குச் செல்வதுண்டு, அங்கே பெண்கள் நின்று கொண்டிருப்பார்கள். நான் ஒரு வீட்டை அடைந்து கதவைத் தட்டும் போது, ஒரு சகோதரி வந்து, ''உள்ளே வாருங்கள், சகோ. பிரன்ஹாம்'' என்று அழைத்தால், அவளுடைய கணவர் அங்கு இல்லாமல் போனால், அது வியாதிப்பட்ட விஷயமாகவும், என்னோடு கூட ஒருவர் இருந்தாலொழிய, நான் உள்ளே போகமாட்டேன். அவர்கள் என்னை மருத்துவமனைக்கு அல்லது அறைக்கு அழைத்து “சகோ. பிரன்ஹாமே, இங்கே வாருங்கள். நான் சகோதரி இன்னார் இன்னார். நான் இன்னின்ன இடத்திலிருந்து வருகிறேன். நான் ஓட்டலில் தங்கியிருக்கிறேன். என் தாயாரை அழைத்து வந்திருக்கிறேன்; அவர்கள் வியாதியாயிருக்கிறார்கள்'' என்று சொன்னால், என் மனைவியை நான் கூட்டிக்கொண்டு செல்வேன். இல்லையென்றால், ஏதாவதொரு சகோதரனை கூடக் கொண்டு செல்வேன். பாருங்கள், நான் எண்ணவில்லை. அங்கு நான் செல்வதில் தவறொன்றுமில்லை என்பது என் கருத்து. ஆனால் நான் அங்கு செல்வதை யாராகிலும் கண்டால்? பாருங்கள்? முதலாவதாக என்ன தெரியுமா, அவர்கள், “அந்த பெண் இருந்த அறைக்குள் அவர் சென்றார், அவர் பெண்களின் பின்னால் நடக்கிறார்'' என்று மோசமாக பேசுவார்கள். அது பாருங்கள், அந்த காரியத்தை நான் செய்யக்கூடாது, ஏனெனில் யாராவது ஒருவருடைய வழியில் நீங்கள் இடறலைப் போடுகிறவர்களாயிருப்பீர்கள். பாருங்கள்? அவ்விதம் செல்வதனால் நான் தவறொன்றும் செய்வதில்லை என்று நினைக்கிறேன். நான் உள்ளே போகும்போது தேவனை நம்பியே செல்கிறேன். அந்த காரியம் என்னவாயிருந்தாலும், நான் தேவனையே நம்பி எல்லாவற்றையும் செய்கிறேன். இருப்பினும், பாருங்கள்... நான் கர்த்தரை போதுமான அளவுக்கு நேசிப்பதனால் அதை செய்யமாட்டேன். பாருங்கள், அது நீங்கள் கொண்டுள்ள அன்பாகும். அதை செய்ய நீங்கள் கடமைபட்டிருக்கிறீர்கள் என்பதற்காக நீங்கள் செய்வதில்லை; நீங்கள் தேவனை நேசிப்பதனால் அவ்விதம் செய்கிறீர்கள். நீங்கள் அவ்விதம் செய்ய வேண்டிய அவசியமில்லை. எனினும் நீங்கள் செய்கிறீர்கள். 97பவுல், “எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு; ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது'' என்றான். பாருங்கள்? பவுல் அநேக காரியங்களைச் செய்திருக்கலாம், ஏனெனில் கர்த்தர் அவனைப் புரிந்து கொண்டு அவன் மேல் நம்பிக்கை வைத்திருந்தார் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால் அவ்விதம் அவன் செய்வது தகுதியாயிராது. எனவே பிரமாணங்களைக் கைக் கொள்கிறவர்கள், ”ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பு நாற்பது நாட்கள் நாங்கள் உபவாசிக்கிறோம்'' என்கின்றனர். அவர்கள் எப்பொழுதும் உண்ணும் அளவே உண்கின்றனர். அவர்கள் ஒருக்கால், ''எனக்கு பீன்ஸ் பிடிக்காது, எனவே லெந்து நாட்களின் போது பீன்ஸ் சாப்பிடுவதை விட்டு விடுகிறேன்'' எனலாம். அவர்கள் அவ்விதம் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். எனக்கு பன்றி இறைச்சி பிடிக்காது, எனவே அதை நான் விட்டு விடுகிறேன்''. ''லெந்து நாட்களின் போது நான் குடிப்பதை விட்டுவிடப் போகிறேன்''. ஒரு ஸ்திரீ என்னிடம், “சகோ. பிரன்ஹாமே, இந்த ஆண்டு லெந்து நாட்களின் போது நான் எதை விட்டு விடப்போகிறேன் தெரியுமா?'' என்றான். நான், “தெரியாது, எதை?'' என்று கேட்டேன். அவள்,“மிட்டாய், எனக்கு அது அவ்வளவாக பிடிக்காது'' என்றாள். பாருங்கள், பார்த்தீர்களா? அதை அவர்கள் உபவாசம் என்றழைக்கின்றனர். பாருங்கள்? சட்டங்களைக் கைக்கொள்ளுதல் (Legalism), அவர்கள், நல்லது, என்னிடம்... உங்களுக்குத் தெரியுமா, நான் நீண்ட காலம் சபைக்குச் சென்றுகொண்டிருந்தேன், ஏனெனில் நான் வருடம் முழுவதும் ஞாயிறு பள்ளிக்குச் சென்றேன் என்று உன்னிடம் கூற விரும்புகிறேன். ஏனெனில் ஒரு நாள் கூட தவறாமல் ஞாயிறு பள்ளிக்கு வருபவர்களுக்கு ஒரு வேதாகமம் பரிசாக அளிக்கப்படும் என்று என் ஆசிரியை கூறினாள்'' என்கின்றனர். 98இப்பொழுது, சகோதரரே, அது சபைக்குச் செல்வதற்கு ஏதோ ஒருவழி. அதைக் காட்டிலும் நான் சென்று ஒரு வேதாகமத்தை விலைக்கு வாங்கிக் கொள்வது நலமாயிருக்கும். நீங்கள் தேவனை நேசிக்கும் அந்த ஒரு காரணத்துக்காக சபைக்கு போகாமலிருந்தால், நீங்கள் போகாமல் இருந்து விடுங்கள். அவ்வளவுதான். பாருங்கள்? ஏனெனில்... நீங்கள் தேவனை நேசிப்பதனால் அங்கு செல்கிறீர்கள். நாம் பாடும் இந்தப் பாடல் என் நினைவுக்கு வருகிறது. %நமது இருதயங்களை கிறிஸ்தவ அன்பினால் %பிணைக்கும் கட்டு ஆசீர்வதிக்கப்படுவதாக %ஒரே சிந்தையுடைவர்களின் ஐக்கியம் %மேலே கூறியது போல் இருக்கும் %நாம் பிரிந்து செல்லும்போது %அது உள்ளில் நமக்கு வேதனை தருகிறது %ஆயினும் நாம் இருதயத்தில் இணைக்கப்பட்டு %மறுபடியும் சந்திப்போம் என்று நம்புகிறோம். பாருங்கள்? “நாம் பிரிந்து செல்லும் போது, அது உள்ளில் நமக்கு வேதனை தருகிறது. ''சகோதரரே, நான் அவ்விதமான நேரத்தைக் கண்டிருக்கிறேன் (நம்மைக் குற்றப்படுத்துவதற்காக அல்ல, நமக்கு ஒன்றன் பேரில் விழிப்புணர்வை உண்டாக்க), ஜனங்கள் ஒருவரையொருவர் சந்திக்க புதன் இரவு வரைக்கும் காத்திருக்க நேரிட்டால், அதற்காக அழுவது வழக்கம், அப்படிப்பட்ட நேரத்தை நான் இச்சபையில் கண்டிருக்கிறேன். அது உண்மை . போதகர்கள் இங்கு வருகையில், ''உங்களால் அவ்விதம் எங்கனம் செய்ய முடிகிறது?'' என்று கேட்டிருக்கின்றனர். நல்லது, அந்த ஜனங்கள் ஒரே இருதயமுள்ளவர்கள். பாருங்கள்? அவர்கள் கதவண்டையில் சந்தித்து... சகோதரிகள் அங்கு ஒருவரையொருவர் சந்தித்து கட்டித் தழுவி, “சகோதரியே, எனக்காக ஜெபிக்க தவறவேண்டாம், தேனே, நான் மறுபடியும் உன்னை புதன் இரவன்று சந்திக்கிறேன். எனக்காக ஜெபிப்பாய் அல்லவா? எனக்காக ஜெபி; நானும் உனக்காக ஜெபிப்பேன்” என்று கூறுவார்கள். அவ்விதம் செய்யும் போது, அவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீர் மல்கும். சகோதரர்கள் ஒருவரோடொருவர் கைகுலுக்கி, ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மனதில்லாத நிலையை நான் கண்டிருக்கிறேன். அதுவே உண்மையான கிறிஸ்தவ ஐக்கியம். பாருங்கள்? காத்திருந்து, ஒருவருக்காக ஒருவர் ஜெபித்தல், ஆம், ஐயா. அவ்விதமாகத் தான் நாம் இருக்க வேண்டும். சரி. 99இப்பொழுது, இந்தவிதமான அறிக்கைகளைவிடுத்த இந்த மனிதர், கெட்டவர்கள் அல்ல. அவர்கள் பொல்லாப்பு செய்ய வேண்டுமெனும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் தேவனுக்கு தொண்டு செய்வதாக எண்ணினர். பரிசேயர்களும் மற்றவர்களும், கள்ளச் சாராயம் விற்பவர்களும் குடிகாரர்களும் அல்ல; அவர்கள் மத வைராக்கியம் உள்ளவர்கள். அவர்கள் கெட்டவர்கள் அல்ல. அவர்கள் சத்திய வசனத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஆவியை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன்? அவர்கள் தங்கள் கோட்பாடுகளையும் அவர்களுடைய தலைவர்களின் பாரம்பரியங்களையும் பற்றிக் கொண்டிருந்தனர். பாருங்கள்? அவர்கள் தங்கள் தலைவர்களை நேசித்தனர் என்பதை அது எடுத்துக் காட்டினது. இதோ, பிரதான ஆசாரியனாகிய பெரிய காய்பா இருக்கிறான்; மற்ற பெரிய ஆசாரியர்களும் அங்கிருந்தனர். இவர்கள் தலைவரின் வழியில் சென்றனர். இப்பொழுது கத்தோலிக்கரை எடுத்துக் கொள்ளுங்கள், அவர்கள்... (அவர்களைக் குறைகூற வேண்டும் என்பதற்காக அல்ல, பிராடெஸ்டெண்டுகளும் அவ்வாறேயுள்ளனர்). நீங்கள் ஒரு கத்தோலிக்கரை எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் தன்னுடைய குருவானவரை நேசிக்கிறான். நான் அவனிடம் கர்த்தருடைய வார்த்தையைக் கூறுகிறேன்; அவன் தேவனுடைய கிரியைகளைக் காண்கிறான். இருப்பினும் அவன், ''என் சபை அதை விசுவாசிப்பதில்லை'' என்கிறான். அவனிடம் நீங்கள் தொடர்ந்து பேசி உறுத்திக் கொண்டேயிருந்தால், கூறினால்... அன்றொரு நாள் ஒரு பெண் என்னிடம், “உங்களுக்குச் செவி கொடுப்பதே பாவம்'' என்றாள். பாருங்கள்? அவள் கெட்டவளாயிருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அவள் தன் சபையின் மேலும் அவளுடைய குருவானவர் மேலும்அதிக பற்று கொண்டிருந்த காரணத்தினால், வேறெதற்கும் அவள் செவிகொடுத்தால்... அவள் குருவானவரிடம் அதிக விசுவாசமுள்ளவளாயிருந்தாள். 100யேகோவா சாட்சி குழுவைச் சேர்ந்தவர்களும் தாங்கள் விசுவாசிப்பதன் பேரில் மிகுந்த பற்றுகொண்டுள்ளனர்; பாப்டிஸ்டுகளும் தாங்கள் விசுவாசிப்பதன் பேரில் மிகுந்த பற்று கொண்டுள்ளனர்; பிரஸ்பிடேரியன்களும் அவ்வாறே தாங்கள் விசுவாசிப்பதன் பேரில் மிகுந்த பற்று கொண்டு, தங்கள் போதகர்களிடம் மிகுந்த விசுவாமுள்ளவர்களாயுள்ளனர். நாமும் அவ்விதமாகவே வார்த்தையின் பேரில் மிகுந்த பற்று கொண்டிருக்கக் கூடாதா? இப்பொழுது அவர்கள்... உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். நீங்கள், நல்லது, சகோதரன் பிரன்ஹாமே, அவர்கள் வார்த்தையின் பேரில் பற்றுக் கொண்டிருக்கவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?'' என்று கேட்கலாம். அந்த பரிசேயர்களும் சதுசேயர்களும் அக்காலத்து தலைவர்களும் தங்கள் கோட்பாடுகளையும் கொள்கைகளையும் விட்டு விலகி, வார்த்தை உரைத்ததற்கும் இயேசு அவர்களிடம் கூறினதற்கும் (அதை தான் மேசியா செய்ய வேண்டும் மென்று கருதப்பட்டார்.) செவி கொடுத்திருப்பார்களானால், அவர்கள் அவரைப் பற்றிக் கொண்டிருப்பார்கள். பாருங்கள்? அவர்கள் தங்கள் தலைவர்களைக் குறித்து மிகப்பெரிய அபிப்பிராயம் கொண்டிருந்ததால்... அவர்கள் கெட்டவர்கள் அல்ல. அவர்கள் திருடமாட்டார்கள், மூர்க்கமடையமாட்டார்கள், அவ்விதமான ஒன்றையும் அவர்கள் செய்வதில்லை. அவர்கள் விபச்சாரம் செய்யமாட்டார்கள். ஆம் நிச்சயமாக செய்ய மாட்டார்கள். அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஒரு நபர் கல்லெறிந்து கொல்லப்படுவதை அவர்கள் காண்பார்கள். அப்படிப்பட்ட செயல்களை அவர்கள் செய்ய மாட்டார்கள். அவர்கள் நல்லவர்கள், ஆனால் ஒரே காரியம் என்னவெனில், அவர்கள் ஆவிக்குரிய மனிதர் அல்ல. நல்லொழுக்கத்தைப் பொறுத்த வரையில், அவர்கள் மிகவும் அருமையானவர்கள், ஆனால் அது ஒன்று மாத்திரம் போதாது. அவர்களை இயேசு என்னவென்று அழைத்தார்? அத்தகைய உத்தமமானவர்களையும் அவர், ''நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள்'' என்றார். பாருங்கள்? வார்த்தையே முக்கியம் வாய்ந்தது. 101இப்பொழுது, என்னால் முடிந்தவரை விரைவாக முடிக்கப் பார்க்கிறேன். அவர்கள் ஆவியில் நிறைந்தவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் தங்கள் தலைவர்களின் நவீன கோட்பாடுகளின் பேரில் விசுவாசமுள்ளவர்களாயிருந்து அவைகளைப் பற்றிக் கொண்டிருந்தனர். பாருங்கள்? சரி. ஆனால் இயேசுவின் ஊழியமோ அவர்களுடைய உபதேசத்தை அம்பலப்படுத்தியது. அதுதான் விஷயம். இப்பொழுது கவனியுங்கள் இப்பொழுது, இதை எடுத்துக் கொள்ளுங்கள்... (சகோதரரே, நான் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதற்காக என்னை மன்னித்துக் கொள்ளும்படி உங்களை கேட்டுக் கொள்கிறேன். நான்... மற்றொரு நீண்ட பிரசங்கத்தை செய்ய நான் மீண்டும் வரக்கூடாது என்று நீங்கள் விரும்பக்கூடும், ஆனால் பாருங்கள், இதை செவி கொடுத்து கேளுங்கள். பாருங்கள், இதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்று நான் உறுதி கொள்ள விரும்புகிறேன்) இப்பொழுது, அவர்கள் தங்கள் கோட்பாடுகளை கொண்டிருந்தனர், அவர்களுக்கு பெரிய சபைகள் உண்டாயிருந்தன, அவர்கள் பெரியவர்களாயிருந்தனர்- பரிசுத்த மனிதர், நல்லவர், நற்குணம் படைத்தவர்கள், அருமையானவர்கள், கெளரவமுள்ள மனிதர், படித்தவர்கள், சாமர்த்தியமுள்ளவர்கள், மத வைராக்கியம் கொண்டவர்கள் - அது சரியா? நம்மெல்லாருக்கும் அது தெரியும். நீங்கள் எந்தவிடத்திலும் காண்பவர்களுக்கு ஒத்த நல்லவர்கள், பாருங்கள்? ஆனால் இயேசு வந்தபோது, அவருடைய ஊழியம் அவர்களுடைய உபதேசத்தை அம்பலப்படுத்தினது. ஏனெனில் தேவன் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் மூலம், அவர் அவருடன் இருப்பதை நிரூபித்துக் கொண்டு வந்தார். பேதுருவும் அதையே கூறவில்லையா? அவன், ''இஸ்ரவேல் ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்து கொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள், நசரேயனாகிய இயேசுவை தேவன் உங்களுக்கு வெளிப்படுத்தினார்'' என்றான். பாருங்கள்? அவர்கள் மாத்திரம்... 102இந்தக் குருடன், இது ஒரு அற்புதமான காரியம் அல்லவா? நீங்கள் இந்த நாட்டின் ஆவிக்குரிய தலைவர்கள். இதோ ஒரு மனிதன் வந்து தேவனுடைய வல்லமையினால் என் கண்களைத் திறக்கிறார், இருந்தபோதிலும் அவரைக் குறித்து நீங்கள் ஒன்றும் அறியாதிருக்கிறீர்களே'' என்று கேட்டது போல. அவன், “இது ஒரு அற்புதமான செயல் என்றான். அவனிடம் ஏதோ ஒன்று இருந்தது. அல்லவா? நிச்சயமாக அவன் பெற்றிருந்தான். சரி. அவன் பெற்றிருந்தான்... இந்த அற்புதமான கிரியையை ஒரு மனிதன் செய்தார், இருப்பினும் அவர் எங்கிருந்து வந்தார் என்பதை அவர்கள் அறியவில்லை. இப்பொழுது, அது ஒரு அற்புதமான கிரியை. இப்பொழுது, இன்றைய நிலையைப் பாருங்கள், சகோதரரர்களே. பாருங்கள், நமக்கு ஒரு... நாம் தேவனுடைய அசைவைப் பெற்றிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம். அது அற்புதங்களைச் செய்து வருகிறதென்று நாம் அறிந்திருக்கிறோம். அது வியாதியஸ்தரை சுகப்படுத்துகிறது; அது மரித்தோரையும் கூட உயிரோடெழுப்புகிறது; அது பிசாசுகளைத் துரத்துகிறது; அது அந்நிய பாஷைகளைப் பேசி அவைகளுக்கு அர்த்தம் உரைக்கிறது; அது தீர்க்கதரிசனங்களை உரைக்கிறது, அவை நிறைவேறுகின்றன. அவர் நமக்கு சொப்பனங்களைக் கொடுத்து, அவைகளின் அர்த்தத்தை விளக்கினார் - முற்றிலும் பிழையற்றவைகளாயிருந்தன. அப்படியிருக்க, பெரிய தலைவர்கள், தேசத்தின் தலைவர்கள், சபைகளின் தலைவர்கள், நம்மை ஒரு பைத்தியக்காரக் கூட்டம் என்றழைப்பது விசித்திரமான செயல்அல்லவா? நடந்து கொண்டிருப்பது ஒரு அற்புதமான காரியம். 103அது என்ன? அது இப்பொழுதும் பொறாமையே. தேவனுடைய வார்த்தையின் ஆவியும் வல்லமையும் இந்தக் கடைசி நாட்களில், அவர்களுடைய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அம்பலப்படுத்துகிறது (அவ்வளவுதான்), அவர்கள் இவர்களின் மூலம் ஜனங்களை குருடாக்கி வந்தனர். எனவே என் தேவனுடைய வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். அசையாதீர்கள். உங்களால் அதை நிறைவேற்ற முடியாமல் போனால், வேறு யாருடைய வழியிலும் குறுக்கே நிற்காதீர்கள். அங்கு நின்று கொண்டு, கதவைத் தட்டிக் கொண்டு, அதை சுட்டிக் காட்டுங்கள். அங்கேயே நிலைத்திருங்கள். மதவெறியை தொடங்கிவிடாதீர்கள். ஏனெனில் அது உங்களை காட்டிக் கொடுத்துவிடும். நீங்கள் உண்மையும் பரிசுத்தமுள்ளவர்களாய் அந்த வார்த்தையில் நிலைத்திருப்பீர்களானால், தேவன் உங்களை உறுதிப்படுத்துவார். அது உண்மை . அவருடைய ஊழியம் அவர்களுடைய உபதேசங்களையும் கொள்கைகளையும் அம்பலப்படுத்தினது. எனவே அவர்கள் தங்களுக்குக் கிடைக்கப் பெற்ற ஒவ்வொரு தருணத்தையும் பயன்படுத்தி அவரை ஒழிக்கப் பார்த்தார்கள். அவரை ஒழிக்க கூடிய ஒவ்வொரு உபாயத்தையும் அவர்கள் கையாண்டார்கள். அவர்கள், ''நல்லது, இங்கே பாருங்கள். இங்கே பாருங்கள்... இன்னார் இன்னார். இவர்'' என்றார்கள். 104ஒருநாள் அவர் குஷ்டரோகியான சீமோனின் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் அவனைச் சுகப்படுத்தினதாக ஒரு வார்த்தையும் கூறவில்லை. (அவன் ஒரு குஷ்டரோகி). அவர் அவனைச் சுகப்படுத்தினதாக எதுவுமே கூறவில்லை. அது உண்மை . அவர் பெதெஸ்தா குளத்தை கடந்து சென்றபோது, ஏறக்குறைய இரண்டாயிரம் பேர் - சப்பாணிகள், குருடர், முடவர், சூம்பின் கைகளையுடையவர்கள் - அங்கிருந்தனர். அவர் ஒரே ஒரு மனிதனிடம் நடந்து சென்று அவனை சுகமாக்கிவிட்டு, அங்கிருந்து நடந்து சென்றுவிட்டார். அப்பொழுது அவர்கள், “நல்லது , அவர் மேசியாவாயிருந்தால், அவர் அவர்கள் அனைவரையும் சுகமாக்கியிருப்பார். நீங்கள் கூறுவதைப் போல், அவர் உண்மையில் மனதுருகுபவராயிருந்தால், அவர்கள் அனைவர் மேலும் அவர் இரக்கம் கொண்டிருந்திருப்பார்'' என்றார்கள். அவருக்கு கெட்ட பெயரைக் கொண்டு வருவதற்தாக அவர்களால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் அவர்கள் செய்தனர். அவர்களால் கண்டு பிடிக்க முடிந்த அனைத்தையும் அவர்கள் செய்தனர். 105சரி. அவரை ஒழிக்க அவர்களுக்கு கிடைத்த ஒவ்வொரு தருணத்தையும் அவர்கள் பயன்படுத்தினர். அவருடைய பிறப்பைக் குறித்து அவர்கள் கேள்வி கேட்டனர். அவருடைய பிறப்பு கேள்விக்குரியதாயிருந்தது. அதை அவர்கள் ஜனங்கள் முன் வைத்தனர். அவருடைய கன்னிப் பிறப்பை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அவருடைய தகப்பன் (தகப்பனாகக் கருதப்பட்டவர்) ஒரு தச்சன்; யோசேப்புக்கும் மரியாளுக்கும் விவாகமாவதற்கு முன்பே அவர் பிறந்துவிட்டார். அதை அவர்கள் ஜனங்களுக்கு முன்பாக வைத்தனர். ஆம், ஐயா, பாருங்கள்? நான் இப்பொழுது என்ன கூறிக் கொண்டிருக்கிறேன்? அவர்கள் அவருக்கு களங்கம் உண்டாக்கிக் கொண்டிருந்தனர். பாருங்கள்? “அவரைப் பாருங்கள். அவர் எங்கிருந்து வந்தார்? அவருடைய தாயைப் பாருங்கள், அவள் தெருவிலுள்ள வேசியேயன்றி வேறல்ல, அவள் இந்த குழந்தையை வயிற்றில் சுமந்தாள். குழந்தை பிறந்த பிறகு (அவள் ஏற்கனவே கருவுற்றிருந்தாள்) - குழந்தை பிறக்கவிருந்த போது, அதை மறைப்பதற்காக யோசேப்பு அவளை விவாகம் செய்து கொண்டு, அதன்பிறகு ஏதோ ஒரு வகையான விளக்கத்தை... அது பிசாசின் கிரியை, உங்களால் காண முடியவில்லையா? அந்த விதமான பிறப்புதான் அது'' என்றனர். ”ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்“ என்று ஏசாயா 9:6ல் கூறப்பட்டுள்ளதை அவர்கள் படிக்காமல், இதை அவர்கள் ஜனங்களுக்கு முன்பாக வைத்தனர். அது என்னவென்று பார்த்தீர்களா? அவர்கள் வார்த்தையை விட்டுவிலகினர். அதுதான். 106அவருடைய அதிகாரத்துக்கு அவர்கள் களங்கம் விளைவித்தனர். ''சீரிய பண்புள்ளவர்களே, நாம் மோசேயின் சீஷர்கள் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? நாம் கிறிஸ்துவின் ஊழியக்காரர் என்றுஉங்களுக்குத் தெரியுமல்லவா? நாம் தினந்தோறும் வேதத்தை ஆராய்ந்து பார்த்து, ஒன்றையும் கூட காணவில்லை என்றுஉங்களுக்குத் தெரியுமல்லவா? மேசியா தம்முடைய ஆலயத்துக்கு வருவார் என்று அவர்கள் சொன்னார்கள். அவர் ஆலயத்துக்கு வருவதைக் குறித்து ஒரு வார்த்தையும் பேசப்படவில்லை. அவர் எங்கேயிருக்கிறார்? அவர் எந்த வேதப் பள்ளியில் பயின்று வெளிவந்தார்? நீங்கள் எந்த சகோதரரையும் கேட்டுப் பாருங்கள் (மெலோடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ் பிடேரியன் யாரையாகிலும்) - பரிசேயர், சதுசேயர், மற்ற யாரையாகிலும், அவர் எந்த ஐக்கியச் சீட்டை வைத்திருக்கிறார்? அவருக்கு பிரசங்கிக்க என்ன அதிகாரம் உள்ளது? அவர் குரு பட்டம் கூட பெறவில்லை. அவருக்கு பிரசங்கிக்க அதிகாரமே கிடையாது'' என்றனர். அவர், என் குருப்பட்டம் தேவனிடத்திலிருந்து வந்துள்ளது. என் கிரியைகள் நான் யாரென்பதை உறுதிப்படுத்துகின்றன (அது உண்மை ). உங்களுடைய சீட்டுகள் எனக்கு அவசியமில்லை'' என்றார். 107நான் கூறுவது உங்களுக்கு புரிகிறதா? அவர்கள் அவர் மேல் பழி சுமத்தினார்கள். அவருடைய உபதேசம் - அவரை அவர்கள் பெயல்செபூல் என்றழைத்தனர். அவருடைய உபதேசத்தை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. “அவர் பிதாக்களின் பாரம்பரியங்களோடு இணங்குவதில்லை. அவர் பரிசேயர்களோடும் கூட இணங்குவதில்லை; அவர் சதுசேயர்களோடு இணங்குவதில்லை; அவர் அந்த குழுக்கள் அனைத்துடனும் இணங்க மறுக்கிறார். அவருடைய உபதேசத்தை அவர் எங்கு பெற்றார்?'' என்றனர். வேதாகமத்திலிருந்து தான், நிச்சயமாக. “நல்லது, அது சரியென்று எனக்கு எப்படித் தெரியும்?'' என்று நீங்கள் கேட்கலாம். தேவன் அதை ஆதரித்தார்! அதைத் தான்அந்த குருடனும் கூறினான். ''நீங்கள் சரியாயும் அவர் தவறாயும் இருப்பதாக கூறுவது ஒரு வினோதமான காரியம் தான். அவரால் தேவனுடைய வல்லமையைக் கொண்டு என் கண்களைத் திறக்க முடிகிறது, இதுவரை அப்படிப்பட்ட காரியம் செய்யப்பட்டதை நீங்கள் கண்டதில்லையே (அது வினோதமான செயல்தான். ஓ, என்னே! நான் அவர் பட்சம் சேர்ந்திருக்க விரும்புகிறேன், நீங்களும் தானே? நிச்சயமாக). நீங்கள் மோசேயின் சீஷரென்று கூறிக் கொள்கிறீர்கள். நீங்கள் சரியாகவும் அவர் தவறாகவும் இருப்பாரெனில், அவர் செய்யும் கிரியைகளை நீங்கள் செய்வதை நான் காணட்டும்'' என்றான். ஆமென்! அங்கு தான்அவருடைய உபதேசம்... அவர் கோரின உரிமைகள் அனைத்துக்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள், ''அவருக்கு ஒன்றும் இல்லை... அவர் மேசியா என்று உரிமை கோருவது தவறு. அவர் மேசியாவாக இருந்தால், அவர் சபைக்கு வராமலிருப்பது எப்படி? அவர் எப்படி மேசியாவாக இருக்க முடியும்? நாங்களோ இஸ்ரவேலின் பாலேடாக (Cream), அதாவது இஸ்ரவேலில் சிறந்தவர்களாக இருக்கிறோம் என்றனர். ஆனால் அந்த பாலேடு புளித்துவிட்டது. பாருங்கள்? ஆம், ஐயா, அதில் ஈக்கள் விழுந்துவிட்டன. எனவே அதை அவர்கள் மேலோடு எடுத்து (Skim) எறிய வேண்டியதாயிருந்தது. எனவே அவர்கள், ''இதோ நாங்கள் சபையாக, தெரிந்து கொள்ளப்பட்டவர்களாக இருக்கிறோம். நாங்கள் பாரம்பரியங்களைக் கைக்கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் மோசேயின் பிரமாணங்களைக் கைக்கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் வழிவழியாக இவையனைத்தும் செய்து கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் இந்த மனிதனோ இங்கு வந்து நாங்கள் கூறுபவை அனைத்தையும் கண்டனம் செய்கிறார். அதுவுமல்லாமல், இதையும் மற்றெல்லாவற்றையும் செய்த எங்கள் பரிசுத்த பிதாவையும், இன்னும் மற்ற எங்களுக்குள்ள சிறந்த மேதைகளையும், பிசாசினால் உண்டானவர்கள் என்று அவர் அழைத்து, தம்மையே தேவனுடைய குமாரன் என்று அழைத்துக் கொள்கிறார்'' என்றனர். 108ஓ, என்னே பாருங்கள், அவர்கள் இயேசுவின் நாமத்துக்கும் இயேசுவின் பேரிலும் களங்கம் விளைவித்து அதை ஜனங்களுக்கு முன்பாக வைத்தனர். இன்னும் அதிகமான காரியங்களைக் கூறமுடியும், ஆனால் நேரம் அதிகமாகிவிடும். ஆனால் என்ன? வார்த்தையும் கிரியைகளும் அவரை உறுதிப்படுத்தின. ஆமென்! ஓ, உண்மையான விசுவாசிகளுக்கும், முன் குறிக்கப்பட்டவர்களுக்கும், அவரைக் கண்டு அவருடைய ஊழியத்தை அறிந்து கொள்வதற்காக முன் குறிக்கப்பட்டவர்களுக்கும், அவர் உண்மையான தேவ குமாரனாக இருந்தார். அவர் எதைக் குறித்து தமது வாயைத் திறந்து பேசாமல் போனாலும், அவர் தேவகுமாரன் என்று அவர்கள் அறிந்திருந்தனர். அல்லேலூயா! 109அந்த சிறு வேசி அன்றொரு நாள் ஒரு வாளி தண்ணீர் மொள்ள கிணற்றண்டைக்குச் சென்ற போது, அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த நடுத்தர வயதுள்ள ஒருவர் “தாகத்துக்குத் தா'' என்றார். அவள், “யூதர்களாகிய நீங்கள் சமாரியாஸ்திரீ ஒருத்தியிடம் இவ்வாறு கேட்பது பழக்கமில்லையே'' என்றாள். அதற்கு அவர், ''நீ யாரிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறாய் என்பதை அறிந்திருந்தாயானால்...'' என்றார். அவள், “இதோ ஒரு அறிவு படைத்த யூதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்” என்று மனதில் எண்ணிக் கொண்டு, அவர் பக்கம் திரும்பி, “ஹ, நீர் ஒரு யூதன் என்று காண்கிறேன். நீர் யூதனாயிருந்தால் பக்தி வைராக்கியம் உள்ளவராக இருக்கவேண்டும். நீங்கள் எருசலேமில் தொழுது கொள்ள வேண்டும் என்கிறீர்கள். ஆனால் எங்கள் பிதாவாகிய யாக்கோபு இந்தக் கிணற்றின் தண்ணீரைக் குடித்து, அவருடைய மிருக ஜீவன்களுக்கும் இந்த தண்ணீரை குடிக்கக் கொடுத்தார். கிணறு ஆழமாயிருக்கிறது. உம்மிடத்தில் மொண்டு கொள்ள ஒன்றுமில்லை; நாங்கள் இந்த மலையில் தொழுது கொள்கிறோம்'' என்றாள். அவர், “ஒரு நிமிடம் நிறுத்து. நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா'' என்றார். அவள், “எனக்குப் புருஷனே இல்லை'' என்றாள். அவர், “நீ உண்மையைச் சொன்னாய், எப்படியெனில் ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது நீ கூட வாழ்ந்து கொண்டிருப்பவன் உன் புருஷன் அல்ல'' என்றார். அந்த சிறு வேசி - முன் குறிக்கப்பட்டவள் - அந்த குடத்தைக் கீழே வைத்து விடுவதை என்னால் காண முடிகிறது. அவள், ''ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்'' என்றாள். 110பாருங்கள், பாருங்கள்? அந்த வித்து அங்கே கிடந்திருந்தது, அதற்கு தேவையாயிருந்த ஒன்றே ஒன்று தண்ணீரே. அந்த தண்ணீர் மேல் விழுந்தது. அது அந்த பரிசேயர்களின் மேல் விழுந்த போது, அவர்கள், “அது பெயல்செபூல்” என்றனர். அது ஒன்றையும் கொண்டு வரமுடியவில்லை, அங்கு களைகளைத் தவிர வேறொன்றும் இருக்கவில்லை. ஆனால் முன் குறிக்கப்பட்ட வித்தின் மேல் ஜீவத் தண்ணீர் விழுந்தபோது, அவள், ''ஐயா, நீர் தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். மேசியா வரும்போது, இந்த காரியங்களை நமக்கு அறிவிப்பார் என்று அறிந்திருக்கிறேன்'' என்றாள். அவர், ''உன்னுடனே பேசுகிற நானே அவர்'' என்றார். அவள் தண்ணீர் குடத்தை கிழே வைத்து விட்டு, ஊருக்குள்ளே ஓடினாள். அவளுக்கு கூறுவதற்கு ஒன்று இருந்தது. அவள், “நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்ன மனுஷனை வந்து பாருங்கள். அவர் மேசியா அல்லவா?'' என்றாள். பாருங்கள்? அவள் இயேசுவின் பட்சம் சேர்ந்து கொண்டாள். அது உண்மை . விசித்திரமான காரியம், அல்லவா? பரிசேயர் சதுசேயர் அனைவரும் அவரை அறிந்து கொள்ளவில்லை. ஆனால் இந்த வேசியோ அவரை அறிந்து கொண்டாள். பாருங்கள்? ஏன்? அவரை விசுவாசித்து, அவரை நேசித்து, அவருடைய அடையாளத்தைக் கண்டவர்கள், அது மேசியாவின் அடையாளம் என்பதை அறிந்திருந்தனர். அந்த உண்மையை விட்டு அகல முடியாது; அவர்கள் அதை அறிந்திருந்தனர். 111நாத்தான்வேல் அங்கு பிலிப்புவுக்கு முன்பாக நடந்து வந்த போது, அவன், “பிலிப்புவே, இதைக் குறித்து எனக்குத் தெரியாது. இந்த கடைசி நாட்களில் இவ்விதமான அநேக காரியங்கள் எழும்புவதை நான் கண்டிருக்கிறேன். இப்படிப்பட்ட அநேக காரியங்கள் நடந்து கொண்டிருப்பதை நான் அறிந்திருக்கிறேன். என்றாலும் நான் சென்று அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்கப் போகின்றேன்” என்றான். அவன் இயேசுவினிடம் நடந்து சென்றான். அவர், “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்'' என்றார். அவன், “ரபீ, நீர் என்னை எப்படி அறிவீர்?'' என்றான். அவர், ''பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்தி மரத்தின் கீழிருக்கும் போது உன்னைக் கண்டேன்'' என்றார். என்ன நடந்தது... தண்ணீர் முன் குறிக்கப்பட்ட வித்தின் மேல் பட்டது. அவ்விதம் நடந்தபோது அவன், ''ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா“ என்றான். அது என்ன? வித்து அங்கு ஆயத்தமாக கிடந்திருந்தது. அது அந்த சமயத்தில் ஒளியைக் கொண்டு வர வேண்டுமென்று கருதி, தேவன் உலகத் தோற்றத்துக்கு முன்பே அதை விதைத்தார். அல்லேலூயா அதுவே என்னுடைய நிலை, சகோதரரே. அதைத் தான் நான் விசுவாசிக்கிறேன். நான் பிரசங்கிக்கிறேன், அது இங்கும் அங்கும் விழுகிறது. அவை இப்பக்கமும் அப்பக்கமும் செல்கின்றன. அதனால் பாதகம் ஒன்றுமில்லை. அது எங்காவது வித்தின் மேல் படவேண்டும். அவ்விதம் நடக்கும் போது, அது, உலகம் உள்ளது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக வித்திலுள்ள ஜீவனை வெளிக்கொணரும், ஆம், ஐயா. 112அந்த குருடனைப் போல்... “தேவனுடைய கிரியைகள் வெளிப்படும் பொருட்டு இவ்விதம் நேர்ந்துள்ளது'' என்றார் அவர். பாருங்கள்? என்ன நடக்கப் போகிறது என்பதை அவர் அறிந்திருந்தார். நிச்சயமாக அவர் அறிந்திருந்தார். சரி, முன்குறிக்கப்பட்டவர்கள் வேத பூர்வமான அடையாளங்களைக் கண்ட போது, வார்த்தை கிரியைகளை உறுதிப்படுத்தினது - இல்லை, கிரியைகள் வார்த்தையை உறுதிப்படுத்தினது என்றும், வார்த்தை சரியென்றும் அறிந்து கொண்டனர். அவர்கள் அதைக் காண முன்குறிக்கப்பட்டிருந்தனர், அவர்கள் அதைக் காண நேர்கோட்டில் இருந்தனர். அவர்கள் அதை பெற்றுக் கொண்டனர். அதன் பிறகு அவர்கள் கூறினர். நித்திய ஜீவனுக்கென்று முன் குறிக்கப்பட்டவர்கள் அதை எப்படியும் கண்டுகொள்வார்கள், அவ்வளவு தான், அவர்களைத் தடுக்க வேறொன்றும் செய்ய முடியாது என்பதை அவர்கள் கண்டு கொண்டனர். ''பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். என்னிடத்தில் வரும் யாவருக்கும் நான் நித்திய ஜீவனைக் கொடுத்து, அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன். அவர்களில் ஒருவனும் இழந்து போவதில்லை, ஆமென். அதற்கான உரிமையை நான் பெற்றிருக்கிறேன்'' பாருங்கள்? ''கிரியைகளினால் அல்ல, செய்கைகளினால் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, பலத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினோலே ஆகும் என்று கர்த்தர் சொல்லுகிறார். '' நான் என்ன செய்தேன் என்றோ, என்னவாயிருக்கிறேன் அல்லது என்னவாயிருக்கப் போகிறேன் என்றல்ல; அவர் என்னவாயிருக்கிறார் என்பதே காரியம். நான் அவரில் இருக்கிறேன். அவர் என்னவாயிருக்கிறாரோ, அவருடைய பாகமாக நான் இருக்கிறேன்! ஆமென் அவருடைய பாகமாக நான் இருப்பதனால், நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன், அவர் தேவனாயிருக்கிறார், அவருடைய குமாரனாக நான் இருப்பதால், அவருடைய பாகமாக நான் இருக்கிறேன். அது உண்மை. எனவே, நான் என்ன செய்தேன் என்றோ அல்லது என்ன செய்யப் போகிறேன் என்றல்ல; அவர் என்ன செய்திருக்கிறார் என்பதே காரியம். அதுவே என் நம்பிக்கையாய் அங்குள்ளது. 113சரி, அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று அவர்கள் அறிந்துகொண்டபோது (இங்கு எழுதிவைத்துள்ள சில வேத வாக்கியங்களை கூறாமல் கடந்து செல்லப்போகிறேன்). அவரை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கண்ட போது, அவர்கள் செய்ய நினைத்த அடுத்த காரியம், அவரை ஊழியக் களத்திலிருந்து போக்கிவிடுவதே. அவர்கள் அவருடைய சகோதரரிடமும் தாயினிடமும் சென்று, “உங்களுக்குத் தெரியுமா, அவர் மிகுந்த களைப்படைந்திருக்கிறார், அவரை சிறிது காலத்திற்கு இளைப்பாற ஓரிடத்துக்கு கொண்டு செல்லுங்கள்'' என்றனர். அந்த மாய்மாலக்காரக் கூட்டம். அவர்களுக்கு பிடிக்கவில்லை. காரியம் என்னவெனில், அவரை அவர்கள் ஒழிக்கப் பார்த்தனர். அவர் களைப்படைந்ததாக அவர்கள் உண்மையில் எண்ணவில்லை. அவர் மரணத்துக் கேதுவாக பாடுபடுவதையே அவர்கள் விரும்பினர். ஆனால் அவர் வெளியே சென்ற ஒவ்வொரு தருணத்திலும், அற்புதங்கள் பொழிய ஆரம்பித்தன; தேவனுடைய வார்த்தை புறப்பட்டுச் சென்றது. என்னே, அந்த நாளில் அவர் கடற்கரையில் நின்று சீமோன் பேதுருவை அழைத்து, என்னைப் பின்பற்றி வா'' என்று கூறினதைக் கேட்க நான் எவ்வளவாய் மகிழ்ந்திருப்பேன்! சகோ. க்ரேஸ், வெட்டப்பட்ட ஒரு மரத்துண்டைக் கொண்டு வந்து அங்கு உட்கார்ந்து கொண்டு, என் வலைகளையும் தூண்டிலையும் விட்டுவிட்டு, அங்கு உட்கார்ந்து கொண்டு, அந்த மரத்துண்டின் மேல் சாய்ந்து கொண்டு, அவர் படகில் ஏறி பிரசங்கம் பண்ணுவதைக் கேட்க நான் எவ்வளவாய் மகிழ்ந்திருப்பேன்! ஓ என்னே, என்னே! அவர் ''வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்'' என்று கூறுவதைக் கேட்க நான் எவ்வளவாய் மகிழ்ந்திருப்பேன்! ஆமென்! அவர் அவ்விதம் கூறுவதை நான் கேட்க விரும்பியிருப்பேன். 114அவர்கள் அவருடைய தாயினிடமும் மற்றவர்களிடமும் சென்று, அவரை ஊழியக்களத்திலிருந்து விலக்கி விட முயன்றனர், அவர்கள், ''நல்லது, உங்களுக்குத் தெரியுமா, அவர் அதிகமாக உழைத்துவிட்டார். அவரை ஊழியத்திலிருந்து நீங்கள் சற்று விலக்கி வைத்தால் நலமாயிருக்கும்'' என்றனர். அவரை ஒழிக்க ஏதாவதொரு வழியைக் கையாண்டனர். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அவ்வளவு தான். ஆம், ஐயா! பிறகு, அவருடன் சென்ற அநேகர், அவருடைய பேச்சில் அவரைப் பிடிக்க முயன்றனர். அது உங்களுக்கு தெரியுமா? ஒரு நாள் அவர்கள் அவரிடம் ஒரு காசைக் கொடுத்து “ரபீ (அவர்கள் காசைக் கொடுப்பதற்கு முன்பு) - ரபீ, நாம் யூதர்கள். நீர் மகத்தான தேவனுடைய மனிதன் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம் (ஓ, அந்த மாய்மாலக்காரன் பாருங்கள், பாருங்கள்?) நீர் மகத்தான தேவனுடைய மனிதன் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆம், ஐயா, ரபீ (அவரோடு கூட அவர்கள் நடந்து சென்றனர். ஓ, காலை வணக்கம், சகோதரனே, ஓ, எங்கள் தேசத்திற்கு நீங்கள் வந்திருப்பதற்காக நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். ஓ, உங்களைக் காண எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. நாங்கள் உண்மையில் உமது சார்பில் நெருங்கி இருக்கிறோம், சகோதரனே. நீங்கள் எழுப்புதல் கூட்டம் நடத்தினால், நாங்கள் உம்முடன் ஒத்துழைக்கவும் செய்வோம்'' என்றனர். அவர்கள் என்ன செய்ய முயன்றனர் என்று பார்த்தீர்களா? அவருக்கு கண்ணி வைத்தனர். பாருங்கள்? 115அவர்கள், ''நீர் மகத்தான தேவனுடைய மனிதன் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். உமக்கு எந்த மனிதனுடைய தயவும் தேவையில்லை. நீர் தேவனைத் தவிர வேறு யாருக்கும் பயப்படுகிறதில்லை. நீர் தைரியமுள்ளவர் என்று எங்களுக்குத் தெரியும். ஓ, உம்முடைய செய்தியைப் பிரசங்கிப்பதற்கு நீர் பயப்படுவதில்லை. நீர் மகத்தான தீர்க்கதரிசியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவன் தேவனுடைய தீர்க்கதரிசியாயிருந்து, தாம் எங்கு நின்று கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமல் போனால், இப்படிப்பட்ட நாட்களில் தன் செய்தியுடன் இவ்விதம் பயமின்றி நடந்து கொள்ள முடியாது. நீர் மனிதரிடம் பட்சபாதமில்லாதவர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ரபீ, நீர் பெரியவர். நாங்கள் யூதர். நாங்கள் உமது சார்பில் இருக்கிறோம். சகோதரனே, நாங்கள் நிச்சயம் இருக்கிறோம். இப்பொழுது, ரபீ, ராயனுக்கு வரி கொடுக்கிறது நியாயமா?'' என்றனர். ஓ, அந்த மாய்மாலக்காரக் கூட்டம்! பாருங்கள்? பரிசுத்த ஆவியானவர் அவருடன் இருந்தார்; அவரே பரிசுத்த ஆவி. அவர், ''உங்களிடம் ஒரு நாணயம் உள்ளதா?'' என்று கேட்டார். அவர்கள், “ஓ, ஆமாம், ஆமாம். என்னிடத்தில் ஒரு நாணயம் உள்ளது'' என்றனர். அவர், ''அதை என்னிடம் கொடுங்கள்'' என்று கூறி அதை வாங்கிக் கொண்டு, “இதன் சொரூபமும் மேலெழுத்தும் யாருடையது?'' என்று கேட்டார். அவர்கள் “இராயனுடையது'' என்றனர். ''அப்படியானால் இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்'' என்றார். 116அவருடைய நண்பர்கள் என்று அவர்கள் நடித்து, அவருக்கு கண்ணி வைத்தனர். யாருமே அவரைப் புரிந்து கொள்ளவில்லை என்பது போல் தோன்றினது. அவர்கள் அவருடன் சிறிது காலம் பயணம் செய்த பிறகு, அவர் மேல் சலிப்படைந்து அவரை விட்டுச் சென்று விடுவார்கள். அவர்கள், “ஓ, நல்லது, நாங்கள் நினைத்தோம். நாங்கள் நிச்சயமாக நினைத்தோம்...'' சீஷர்களும் கூட, ''நிச்சயமாக இதைச் செய்யப் போகிறவர் இவரே என்று எண்ணியிருந்தோம்'' என்றனர். யோவானும் கூட ஆட்களை அனுப்பி, ''வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா?'' என்று கேட்டான். பாருங்கள்? ஓ, அவர் இவைகளையெல்லாம் அறிந்தவராய் எப்படிப்பட்ட கடினமான வாழ்க்கை வாழ்ந்திருப்பார் பாருங்கள்? ஆனால் அவருக்கு ஒரே நோக்கம் இருந்தது - அது தேவனுடைய கிரியைகளைச் செய்வதே. அவருக்கு கண்ணி வைக்க வகை தேடியே, அநேகர் அவருடன் சென்றனர். இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது என்று நான் கூறினால், அது தேவதூஷணமாயிராது என்று நம்புகிறேன். அநேகர் குற்றம் கண்டு பிடிக்க வகை தேடி கூட்டங்களுக்கு தொடர்ந்து வருகின்றனர். பாருங்கள்... நீங்கள் யாருக்காவது ஜெபம் செய்கிறீர்கள். 117அண்மையில், இந்த சபைக்கு வரும் ஒரு சகோதரி வேறொரு சபைக்குச் சென்றிருந்தாள். அங்கு தேவன் எல்லாவற்றையும் நடப்பித்துக் கொண்டிருந்தார். இந்த சகோதரி மற்ற சகோதரிகளிடம், ''உங்களுக்குத் தெரியுமா, வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் அந்த மனிதன் வெற்றிக்கரமான வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்க வேண்டும். அவர் தன் குடும்பத்தார் அனைவரையும் ஒரு வார்த்தையை உரைத்து இப்படி சுகமாக்கி விடமுடியும்'' என்றாள் (சகோ. பிரன்ஹாம் விரல்களைச் சொடுக்குகிறார் - ஆசி ) அந்த மற்ற சகோதரி ஜெபர்ஸன்வில்லைச் சேர்ந்தவள் (இயேசு, ''உங்கள் ஜனத்தாரிடையே...'' என்று கூறினது யாருக்கும் தெரியாமலிருக்க முடியாது. உங்கள் மாகாணத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அது உண்மை . அந்தக் காரணத்தினால்தான் நான்... இப்பொழுது அது முடிவுக்கு வந்து கொண்டிருக்கக் கூடும்; அது நேரத்தின் மாற்றமாக இருக்கக் கூடும், பாருங்கள்). அவள், ''உனக்குத் தெரியுமா? அவருடைய குழந்தைகள் யாருக்காகிலும் ஜலதோஷம் ஏற்பட்டாலும் கூட அவர் உடனே மருத்துவரிடம் கொண்டு போய்விடுவார்'' என்றாள். அப்படிப்பட்ட ஒரு தரம் தாழ்ந்த, வஞ்சிக்கப்பட்ட ஸ்திரீ, பாருங்கள், பாருங்கள், அவள் களங்கம் விளைவிக்க எண்ணினாள். அவள், ''அவருடைய பிள்ளைகள் வியாதிப்பட்டால், அவர் மருத்துவரிடம் கொண்டு செல்கிறார்'' என்றாள். 118புத்தியுள்ள எவரும் அதைத் தான் செய்வார்கள். மருந்து தேவனால் அனுப்பப்பட்டது என்பதை ஜனங்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. சகோதரரே, அது அவ்விதம் இல்லாமல் போனால், அது பிசாசினால் உண்டானதாயிருக்கும், அது நிச்சயம். மருந்து அடைய முடியாத இடத்தை தேவன் அடைகிறார். நிச்சயமாக. மருந்து தேவனால் உண்டானது. நீங்கள், “நல்லது, எனக்குத் தெரிந்த அநேக மருத்துவர்கள்... எனலாம். ஓ ஆமாம், அதே விதமாக உள்ள அநேக பிரசங்கிமார்களையும் எனக்குத் தெரியும். அதைக் கையாளும் மனிதன் அல்ல, அது என்னவாக இருக்கிறதோ அதுவே அது. தேவனுடைய வார்த்தையைக் கையாளும் அநேகர் தெய்வீக சுகமளித்தலை விசுவாசியாமலிருப்பதை நான் அறிந்திருக்கிறேன். அவர்கள் தேவனையே விசுவாசிப்பதில்லை. உண்மை, ஆனாலும் அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கையாளுகின்றனர். மருத்துவத்திலும் அறுவை சிகிச்சையிலும் விசுவாசம் கொண்டுள்ள அநேகர் தேவனை மறுதலிக்கின்றனர், ஆனால் அவரை விசுவாசிக்கும் அநேகரும் உண்டு. அது ஜனங்களுக்கு உதவி செய்யுமானால், அது தேவனால் உண்டானது. இன்றிரவு நான் காரை ஓட்டிக் கொண்டு வீட்டுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை; வேண்டுமானால் நான் நடந்து செல்லலாம். ஆனால் தேவன் எனக்காக ஒரு காரை உண்டாக்கியிருக்கிறார். எனவே நான் அதற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன். இவை யாவும் தேவனிடத்திலிருந்து வந்தவையே. அவைகளை புத்தியோடு உபயோகியுங்கள். அவைகளைக் கொண்டு பைத்தியக்காரராகி விடாதீர்கள். பாருங்கள்? 119அதே காரியம் தான். அதன் மூலம் - அது தான், பாருங்கள். தேவனுடைய கிரியைகளுக்கு... பெயருக்கு களங்கம் உண்டாக்குவதற்கு, கெடுப்பதற்தாக மனம் மாறியிருந்த இந்த இளம்பெண்ணிடம் ஏதாவதொன்றைக் கூற முனைதல், பாருங்கள், அவர்கள் அதை கெடுக்க நினைத்தார்கள். ஒவ்வொரு முறையும் பிள்ளை வியாதிப்படும் போது, அவருடைய பிள்ளைகளில் ஒன்று வியாதிப்படும் போது, அவர் மருத்துவரிடம் கொண்டு செல்கிறார் நிச்சயமாக நான் கொண்டு செல்வேன். மருத்துவரால் முடியாமல் போனால்... அங்கு நான் செல்லும் முன்பு, உதவி செய்யும்படி தேவனை வேண்டிக் கொள்வேன். மருத்துவரால் ஒன்றும் செய்ய முடியாமல் போனால், நான் சற்று அதிக உயரத்துக்கு அவர்களைக் கொண்டு செல்கிறேன். அது உண்மை. ஆம், ஐயா. ஓ, இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது. அவர்கள் எங்காவது ஒரு கண்ணி கிடைக்குமா என்று முயற்சி செய்கின்றனர். 120அவர்களை அவர் அறிந்திருந்தார், ஆனால் கவனியுங்கள், அவர்களை அவர் கடிந்து கொள்ளவில்லை. அவர்களுடன் கூட அவர் சென்றார். இப்பொழுதும் அவர் அதையே செய்கிறார். அவர்களுடன் கூட அவர் சென்று, அவர்கள் அவருக்கு விரோதமான காரியங்களைச் செய்தபோதிலும், அவர்கள் மேல் தம் இரக்கம் பாராட்டுகிறார் (அது உண்மை). ஏன்? ஏனெனில் அவர்களை அவர் நேசிக்கிறார். அவர்களுடன் அவர் சென்றார். அவசர நேரத்தில் அவர்கள் அவரை நோக்கிக் கூப்பிட ஆயத்தமாயுள்ளனர். அப்பொழுது அவர் தேவைப்படுகிறார்... கூச்சலிடும் ஒருவரை அவர்கள் கேலி செய்வார்கள். தெய்வீக சுகமளித்தலைக் குறித்து பிரசங்கிக்கும் ஒருவரை அவர்கள் கேலி செய்து, அதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லையென்று சொல்வார்கள். அவர்கள் இன்னும் போதிய அளவுக்கு வியாதிப்படவில்லை. அப்படிப்பட்ட அநேகரை நான் கண்டிருக்கிறேன். 121ஒரு ஸ்திரீ மரணத் தருவாயிலிருந்தாள், நான் படிக்கட்டுகளில் ஓடி ஏறினேன். நான் இங்கு பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, அங்குள்ள கதவண்டையில் ஒரு மனிதன் நின்று கொண்டு என்னை அழைத்தார். அவள் வெளியே நடந்து சென்றுவிட்டாள். அவள் இந்த தெருவில் வசித்து வந்தாள். அவளுக்கு ஒரு பசு இருந்தது. அவள், 'பில்லி கடைபிடிக்கும் அவ்விதமான மார்க்கத்தை என் பசு கடைப்பிடித்தால், அதை நான் கொன்று போடுவேன்'' என்றாள். அதை கூறின பிறகு ஒரு மணி நேரத்துக்குள் அவள் வியாதிப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள் - அழகான இளம் பெண். நான் அங்கு விரைவாகச் சென்றேன். அவளுடைய கணவர் கத்தோலிக்கர். அவர்கள் என்னை ஆளனுப்பி அழைத்திருந்தனர். அவள் மரித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கண்கள் வீங்கி விட்டன. அவள், ''அவரைக் கூப்பிடுங்கள், அவரைக் கூப்பிடுங்கள்; அவரைக் கூப்பிடுங்கள்; அவரை வேகமாக, வேகமாக கூப்பிடுங்கள்'' என்றாள். அவளுடைய சகோதரன் ஓடி வந்து கதவண்டையில் நின்று கொண்டு, காத்திருந்து, காத்திருந்து, எனக்கு சைகை காட்டிக் கொண்டிருந்தார். இந்த இடம் ஜனங்களால் நிறைந்திருந்தது. சற்று கழிந்து யாரோ ஒருவர் வந்து ஒரு குறிப்பை மேசையின் மேல் வைத்தார். “மருத்துவமனையில் ஒருத்தி மரித்துக் கொண்டிருக்கிறாள்'' என்று எழுதப்பட்டிருந்தது. அது சகோ. க்ரிம் ஸ்நெல்லிங் என்று நினைக்கிறேன். அவரிடம், ''நான் திரும்பி வரும் வரைக்கும் என் இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள்'' என்றேன். அவர் பாடலை தொடங்கி நடத்துவதற்காக அங்கு நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் பிரசங்கிக்க அவர் அழைக்கப்படவில்லை. அவர் பாடலை தொடங்கி நடத்துவதற்காக வந்து கொண்டிருந்தார். நான் வெளியே சென்று, காரில் ஏறி, விரைவாக ஓட்டிச் சென்று அங்கு அடைந்தேன். நான் படிக்கட்டுகளில் ஏறிச் சென்று கொண்டிருந்த போது அவள் தன்னுடைய கடைசி மூச்சை விட்டாள். அவளுடைய குடல்களும், சிறுநீரகங்களும் இயங்கிக் கொண்டிருந்தன. அவர்கள் அவள் முகத்தை மூடிவிட்டனர். நீராவி அப்படி வந்துக் கொண்டிருந்தது. அங்கு நின்று கொண்டிருந்த வயோதிப நர்ஸ், ”சகோ. பிரன்ஹாமே, அவள் உங்களுக்காக அவளின் கடைசி மூச்சைவிட்டாள் என்றாள். அவள் அதை நேராக்க முயன்றாள், ஆனால் அப்பொழுது மிகவும் காலதாமதமாகி விட்டது. ஒரே சமயத்தில் நீங்கள் அநேக பாவங்களைச் செய்யக்கூடும். அவள் ஒரு விதமான... அவளுடைய முகத்தில் ஆழமாக... 122அவளுக்கு பொன் நிறமுள்ள தலைமயிர் இருந்தது - மிகவும் அழகான பெண். கத்தரிக்கப்பட்டிருந்த அவளுடைய தலைமயிர் கலைந்து புதரைப் போல் காணப்பட்டது. அவளுடைய பெரிய பழுப்பு நிறகண்கள் வெளியே தள்ளப்பட்டு பாதி மூடியிருந்தன. அவளுடைய முகத்தில் காணப்பட்ட சுருக்கங்கள், அவள் அதிகமான வேதனைபட்டதன் காரணமாக, அவளுடைய முகம் முழுவதிலும் சிறு வீக்கங்கள் போல் எழுந்து நின்றன. அவளுடைய வாய் திறந்திருந்தது. நான் அவளிடம் நடந்து சென்று அவளை உற்று நோக்கினேன். அவளுடைய கணவன் அங்கு நின்று கொண்டிருந்தார். அவர், ''பில்லி, நான் ஒரு கத்தோலிக்கன், அவள் பாவ விமோசன ஸ்தலத்துக்கு (purgatory) சென்றிருப்பதால், அவளுக்காக ஒரு ஜெபத்தை ஏறெடுங்கள்'' என்றார். நான் “என்ன?” என்றேன். ''அவளுக்காக ஒரு ஜெபத்தை ஏறெடுங்கள். அவள் பாவ விமோசன ஸ்தலத்தை அடைந்திருக்கிறாள். இரண்டு மணி நேரத்துக்கு முன்பு அவள் உம்முடைய சபையை கடந்து செல்லும் போது, நீர் கொண்டுள்ள அவ்விதமான மார்க்கத்தை எங்கள் பசு கொண்டிருந்தால், அதை அவள் கொன்று போடுவாள் என்று கூறினாள். அவளுக்காக ஒரு ஜெபத்தை ஏறெடுங்கள்'' என்றார். நான், “இப்பொழுது காலதாமதமாகி விட்டது. அவள் வேறொரு இடத்துக்குப் போகும்வரை காத்திருக்காமல், இங்கேயே தன் ஆத்துமாவை கழுவி சுத்திகரித்திருக்க (purge) வேண்டும்'' என்றேன். பாருங்கள்? அது உண்மை. ஓ, ஆமாம். நமது துன்ப நேரத்திலேயே அவரை நாம் தேடுகிறோம். ஜனங்கள், ''தேவன் பேரில் எனக்கு விசுவாசமில்லை'' என்று கூறக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை அவர்களுக்கு துன்பம் உண்டாகட்டும், அவர்கள் முதலாவது கூப்பிடுவது அவரையே. 123அவருடைய சீஷர்கள் கூட, ஒருமுறை புயலில் அகப்பட்டுக் கொண்ட போது, அவர்கள் அவரைக் கண்ட போதிலும், அவரைக் கண்டு சிறிது பயந்தார்கள். அது என்னவென்று அவர்களுக்கு சரியாகத் தெரியவில்லை. அவர்கள், அது ஒரு ஆவி , அது கூக்குரலிடுகிறது'' என்றனர். அவர்கள் காக்கப்படுவார்கள் என்னும் நம்பிக்கை முற்றிலும் அற்றுபோன போது, அவர்கள் அவரை உள்ளே வரும்படி அழைத்தார்கள். ஆம், அவர்கள் எப்பொழுதும்... நீங்கள் சிறிது சந்தேகப்படுகிறவர்களாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும், எல்லா நம்பிக்கையும் அற்று போகும் போது, அவரை உள்ளே வரும்படி அழைக்க விரும்புகிறீர்கள். ஆம், அவர் அவர்களுக்கு தேவைப்பட்டதால், அவரை உள்ளே அனுமதித்தனர். அது உண்மை . உங்களுக்குத் தெரியுமா, நான் அடிக்கடி வியந்ததுண்டு, ஒரு வேளை அதற்காகத் தான் புயல் வருகிறதோ என்னமோ என்று. அதைக் குறித்து நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? அவர் அவர்களுக்குத் தேவைப்படும் வரைக்கும், அங்கு உட்கார்ந்து கொண்டு அவர்களை கவனித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு அவர் காட்சியில் வருகிறார். எனவே அவர் இப்பொழுது நமக்கு தேவையாயுள்ளதை நாம் காணலாம். புயல் வருகிறதை நாம் காண்கிறோம். சகோதரரே, இன்றிரவு நாம் அவர் பட்சம் சேர்ந்து கொள்வோம், அவருடைய வார்த்தையின் பட்சம் சேர்ந்து கொள்வோம். இத்துடன் நான் முடித்துக் கொள்கிறேன். 124நாம் அவர் பட்சம் சேர்ந்திருப்போம். சகோதரரே, நாம் - நீங்களும் நானும் - இன்றிரவு அவருடன் சேர்ந்து கொள்வோம். புயல் வந்து கொண்டிருக்கிறது. சிறிய படகு மூழ்கிப்போகும் வரைக்கும் காத்திருக்க வேண்டாம். இப்பொழுதே நமது சிறிய படகில் அவரை ஏற்றிக் கொள்வோம். நீங்கள் பார்வையை திருப்பிக் கொண்டு, ''சகோ. பிரன்ஹாமே, என்னால் இவைகளையெல்லாம் புரிந்துகொள்ள முடியவில்லை'' எனலாம். பாருங்கள்,வார்த்தையிலுள்ள ஒன்றை நாங்கள் கூறும்போது, அவர் செய்வதாக வாக்குத்தத்தம் பண்ணின ஒன்று அதில் காணப்படும் போது; அது சில சமயங்களில் உங்களுக்கு பிசாசைப் போல் தோன்றக்கூடும். நீங்கள், “ஓ, என்னே, அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை'' என்று நினைக்கக்கூடும். ஆனால் உங்கள் உயிர் உங்களை விட்டுப்போகும் ஒரு நாள் வரும். அப்பொழுது இது அவ்வளவு மோசமாக உங்களுக்குத் தென்படாது. நீங்கள் உங்களை சிருஷ்டித்த தேவனிடத்தில் திரும்ப வேண்டும் என்று அறிந்து கொள்ளும் போது, அப்பொழுது அவரை ஏற்றுக் கொள்ள விரும்புவீர்கள். புயல் இன்னும் மோசமாக ஆவதற்கு முன்பு, இப்பொழுதே அவரை ஏற்றுக் கொள்வோம். 125அவர் என் இருதயத்துக்குள் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அவரை என் வாழ்க்கையில் அதிகமாக பெற்று, என் சரீரம் முழுவதும் அவரால் நிரம்பி வழிந்து, என் சிந்தனைகள், எனக்குள்ள எல்லாமே, கிறிஸ்து இயேசுவினால் ஆளப்பட்டு அவருடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். என்னிலுள்ள அனைத்துமே இழக்கப்பட்டு, நான் அறிந்திருப்பதும் காண்பதும் எல்லாமே இயேசு கிறிஸ்துவாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். உங்கள் எல்லோருக்கும் முன்பாக நான் வர விரும்புகிறேன்... பரலோகத்தின் தேவன் தாமே நான் பேசினவைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள அனுமதிப்பாரானால், உங்கள் மத்தியில் நான் வரும்போது, கிறிஸ்துவை , சிலுவையிலறைப்பட்ட அவரை நான் அறிந்திருக்க வேண்டும்மென்று விரும்புகிறேன். நான் தேவனுடைய மகிமையையும் அவருடைய விலையேறப்பெற்ற துதிகளையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் மத்தியில் நான் உட்கார்ந்து கொண்டு, போதகர் ஒருவர் எழுந்து தேவன் அவருடைய சபையில் செய்ததைத் குறித்து அவருக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுப்பதை கேட்டு, வேருெவர் அவருடைய சபையில் தேவன் செய்ததைக் குறித்து அவருக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுப்பதைக் கேட்டு, மற்றும் வேறாருவர் அவருடைய சபையில் நடந்தவைகளுக்காக தேவனைத் துதிப்பதைக் கேட்டுக் கொண்டே இருக்க விரும்புகிறேன். அதைத்தான் அவர்கள் செய்தனர். 126அப்போஸ்தலர் 4-ம் அதிகாரத்தில் அவர்கள் ஒன்று கூடி ஐக்கியம் கொண்ட போது, இங்கே தேவன் என்ன செய்தாரென்றும் இங்கே என்ன செய்தாரென்றும் எடுத்துக் கூறினர். பேதுருவும் யோவானும் வாரினால் அடிக்கப்பட்டு, அவர்கள் இயேசுவின் நாமத்தில் போதித்தால் இதுதான் அவர்களுக்குச் செய்யப்படுமென்று எச்சரிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் ஜனங்களுடன் ஒன்று கூடின போது, அவர்கள் ஒருமனப்பட்டு ஜெபித்தனர். அவர்கள் தேவனுடைய சித்தத்தில் ஜெபித்து, “ஜாதிகள் கொந்தளித்து ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன்?'' என்று வேதத்திலிருந்து மேற்கோள் காட்டினர். அவர்கள் ஜெபம் பண்ணின போது, பரிசுத்த ஆவியானவர் அவர்கள் கூடியிருந்த இடத்தை அசைத்தார். அந்த விதமான கூட்டமே நமக்குத் தேவையாயுள்ளது. அதைத் தான் நாம் பெற்றிருக்க வேண்டும், சகோதரரே. 127நாம் தேவனுடைய வார்த்தையினால், தேவனுடைய ஆவியினால், தேவனுடைய வல்லமையினால் அரணிடப்பட்டிருப்போமாக. நம்முடைய ஒளி இப்பொழுது பிரகாசித்து, நாம் ஸ்தேவானைப் போலிருப்போமாக. ஸ்தேவான் அங்கு தனி மனிதனாய் சனகரீப் சங்கத்தினர் முன்பாக நின்றான். அங்கு ஒரு வேளை ஐந்து லட்சம் ஜனங்கள் நின்று கொண்டு, அவர்களுடைய விரல்களை அவனுடைய முகத்துக்கு நேராக சுட்டிக் காட்டி, அவனைக் குற்றச்சாட்டியிருக்கக் கூடும். அந்த சிறு ஆள் அங்கு நடந்து வந்தபோது, தூதனைப் போல் பிரகாசித்ததாக கூறப்பட்டுள்ளது. அவனுடைய முகத்தில் ஒளி பிரகாசித்தது என்ற அர்த்தத்தில் நான் கூறிவில்லை; ஒரு தூதனுக்கு அவன் மேல் ஒளி இருப்பதில்லை, தூதன் என்பவன் ஒரு மனிதன், தூதன் என்பவன் ஒரு செய்தியாளன், தான் பேசுவது என்னவென்று ஒரு செய்தியாளன் அறிந்திருக்கிறான். அவன் அங்கு நடந்து சென்று, ''சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள், நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும் போது...“ என்று தொடங்கி, அவன் எவ்விதம் வெளியே கொண்டு வரப்பட்டான் என்று கூறி, வழிவழியாக இன்னார் இன்னார் வரைக்கும் வந்தான். அதன் பிறகு அவன் கெடுக்கும் நிலைக்கு வந்து, (spoiling point) ”ஓ, வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப் போல் நீங்கள் ஏன் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறீர்கள்?'' என்றான். அவன் எதன் மேல் நின்று கொண்டிருக்கிறான் என்பதை சரியாக அறிந்திருந்தான். ஆகையால் தான் அவன் பிரகாசித்தான். அவன் சிறிதேனும் பயப்படவில்லை. அவன் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிந்திருந்தான். மரணம் பரி. பவுலின் இருதயக் கதவைத் தட்டின் போதும், அவன், ''நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக் கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்'' என்றான். ஆமென்! 128சகோதரரே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களை 11.00 மணிக்கு இருபத்தைந்து நிமிடங்கள் வரையிலும் இங்கு வைத்திருந்ததற்காக வருந்துகிறேன். இது உங்களுக்கு வழக்கமில்லை என்று அறிந்திருக்கிறேன். அவ்விதம் செய்ததற்காக நான் வருந்துகிறேன். நீங்கள் உண்மையில் இன்றிரவு அருமையானவர்களாய் இருந்தீர்கள்; ஒருவருமே எழுந்து போகவில்லை. நீங்கள் இங்கு உட்கார்ந்து கொண்டு, உங்கள் முழு கவனத்தையும் செலுத்தினீர்கள். என் சிறிய, கொச்சையான , பயந்த பேச்சின் மூலம் தேவன், பரிசுத்த ஆவியானவர், எங்காவது, உங்கள் இருதயத்திலுள்ள சிறு வித்தின் மேல் ஊற்றப்பட்டு, தேவனுடைய வல்லமையானது, கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீக்கும், நித்திய ஜீவனுக்கென்று முன் குறிக்கப்பட்ட மற்றவர்களுக்கும், செய்தது போல், அந்த வித்தை உயிர் பெறச் செய்யும் என்று நம்புகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோ. நெவில், கூட்டத்தை முடிக்கப் போகிறீர்களா அல்லது என்ன செய்ய நினைக்கிறீர்கள்... எப்படி வெறும் ஒரு... அவரை நேசிக்கிறீர்களா? (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). அவரைச் சேவிப்பீர்களா? (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). அவரை விசுவாசிப்பீர்களா? (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). அவரை நேசிக்கிறீர்களா? “ஆமென்” அவரைச் சேவிப்பீர்களா? “ஆமென்” அவரை விசுவாசிப்பீர்களா? ஆமென், ஆமென், ஆமென், அதை நாம் பாட விரும்புகிறோம். ஆமென், ஆமென், ஆமென், ஆமென், ஆமென் வேதாகமம் சத்தியமாயுள்ளது. ஆமென் அதை நான் விசுவாசிக்கிறேன். ஆமென். அது தேவனுடைய வார்த்தை . ஆமென், ஆமென், ஆமென். நாம் எழுந்து நிற்போம்: ஆமென், ஆமென், ஆமென், ஆமென், ஆமென் கர்த்தாவே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம் ஆமென், ஆமென், ஆமென்,ஆமென் நீர் வருகிறீரென்று விசுவாசிக்கிறோம். ஆமென் உம்மை சந்திக்க ஆயத்தமாயிருக்கிறோம். ஆமென் கர்த்தராகிய இயேசுவே, வாரும், ஆமென்,ஆமென், ஆமென். அவரைச் சேவிக்க நம்மை எல்லா நேரங்களிலும் சிறந்தவர்களாக வைத்திருக்க தேவனிடம் ஜெபிக்கிறோம் ஆமென், ஆமென், ஆமென், ஆமென், ஆமென் அவர் உங்களை ஆசீர்வதித்து, உங்களை பாதுகாத்துக் கொண்டு, உங்களை காத்துக் கொண்டு, நம்மை கவனித்து, பெரிதான கிரியைகளைச் செய்வதற்காக உங்களை அவருடைய ராஜ்யத்தில் அனல் மூட்டி, நாம் மறுபடியும் சந்திக்கும் வரைக்கும் எனக்கு ஊழியக் களத்தில் உதவி செய்வாரென்று நம்புகிறேன். ஆமென், ஆமென், ஆமென்,ஆமென், ஆமென். உங்களுக்காக ஜெபிப்பேன்; எனக்காக ஜெப்பீர்களா? ஆமென், ஆமென், ஆமென், ஆமென், ஆமென். 129எங்கள் பிதாவே, நாங்கள் உயரிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் இன்றிரவு இங்கு கூடி வந்திருக்கிறோம். அந்த அன்பார்ந்த செல்வமான நாமத்தை நாங்கள் அனைவரும் நேசித்து தொழுது கொள்கிறோம். எவ்விதம் ஆண்டுகள் தோறும் மக்கள் குழுக்கள் இங்கு கூடி வந்துள்ளன என்றும் (முப்பது ஆண்டுகளுக்கும் அதற்கும் அதிகமாக நாங்கள் இந்த சிறு பழைய கட்டிடத்தில் கூடி வந்திருக்கிறோம்), எங்கள் கால்கள் குளிரினால் உறைந்து போன நிலையில் அவைகளை ஸ்டவ் அடுப்பின் மேல் வைத்து கர்த்தராகிய இயேசுவைக் குறித்து பேசியிருக்கிறோம் என்றும் நினைத்துப் பார்க்கிறேன். அதே நேரத்தில், இந்த பூமியில் ஒரு காலத்தில் நடந்த அந்த விலையேறப்பெற்ற கால்களையும் நினைத்துப் பார்க்கிறேன். சீஷர்களுடன் உட்கார்ந்த போது, அந்த பாதங்கள் உயர்த்தி வைக்கப்பட்டிருந்தன. ஒரு காலத்தில் தங்கள் கால்களை ஸ்டவ் அடுப்பின் மேல் வைத்த சகோ. சூவர்ட், சகோ. ஸ்பார்க்ஸ், சகோ. ஜார்ஜ் டீ ஆர்க் ஆகியோரையும், இன்னும் அநேக விலையேறப்பெற்ற ஆத்துமாக்களையும் இவ்வேளையில் நினைவு கூருகிறேன். அவர்கள் தேவனை சந்திக்கச் சென்று விட்டனர். அவர்கள் கல்லறையில் இளைப்பாறிக் கொண்டு, மேலேயிருந்து அந்த மகத்தான அழைப்பு வருவதற்காக காத்திருக்கின்றனர். அவர்கள் நல்ல போராட்டத்தைப் போராடினார்கள்; அவர்கள் விசுவாசத்தைக் காத்துக் கொண்டார்கள், அவர்கள் ஓட்டத்தை முடித்தார்கள். நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளில் அவர்களுக்கு நீதியின் கிரீடத்தைக் கொடுப்பதற்காக அவர்கள் இப்பொழுது காத்திருக்கின்றனர். 130பிதாவாகிய தேவனே, இந்த சிறு சபைக் கட்டிடத்தை நாங்கள் அந்த மூலையில் பிரதிஷ்டை செய்த போது, ''கர்த்தராகிய இயேசுவே, நீர் இரகசிய வருகையில் ஆகாயத்தை உடைத்து, வந்து, சபை வேகமாக செல்லும் வரைக்கும் இது நிலைத்திருந்து ஜனங்கள் இதில் காணப்படட்டும் என்று ஜெபித்தோம். தேவனே, இந்த பீடத்தண்டையில் வந்த ஆத்துமாக்களும், உம்மை சேவித்த ஆத்துமாக்களும் - சுவிசேஷ விதையானது முன்னும் பின்னுமாக, முன்னும் பின்னுமாக, முன்னும் பின்னுமாக கடந்த முப்பது ஆண்டுகளாக விதைக்கப்பட்டு, முன் குறிக்கப்பட்ட ஜீவனுக்கு வார்ததையைக் கொண்டு வர நாங்கள் மேற்கொண்ட எங்கள் பலவீனமான பிரயாசத்தின் விளைவாக கிடைக்கப் பெற்ற அந்த விலையேறப்பெற்ற மக்கள் அந்நாளில் அங்கே இருப்பார்கள் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இன்றுள்ள ஒவ்வொருவரும் இரத்தத்தினால் மூடப்பட்டு, இயேசுவில் நங்கூரமிடப்பட்டவர்களாய் அந்நாளில் காணப்படுவார்கள் என்று இன்றிரவு நாங்கள் தேவனிடம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். பிதாவே, இதை அருளுவீராக. நாங்கள் அவர் பேரில் நம்பிக்கையாயிருக்கிறோம். 131இப்பொழுது நாங்கள், எங்களில் அநேகர், மீண்டும் ஞாயிறு காலை இங்கு சந்திக்க விருக்கிறோம். தேவனே, எங்களை நீர் சந்தித்து, எங்களுக்கு ஜீவ அப்பத்தைப் பிட்டுக் கொடுக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம். தேவனே, சகோ. ரட்டலையும் அவருடைய இடத்தையும், அவருடன் யாத்திரை செய்பவர்களையும் இவ்வேளையில் நினைவு கூருகிறோம். அந்த விலையேறப்பெற்ற இளைஞன் மேலே வருவதை நான் காண்கிறேன். கர்த்தாவே, அவனுடன் நீர் இருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இந்த இளைஞர்களை நான் காண்கையில், அவர்கள் என் தீமோத்தேயுக்கள் என்பதாக நான் உணருகிறேன். பிதாவே, சகோ. ரட்டலை அவருடைய ஊழியத்தில் ஆசீர்வதிக்குமாறு ஜெபிக்கிறேன். சகோ. ''ஜூனி“ ஜாக்சனை ஆசீர்வதிப்பீராக. ஓ தேவனே, உம்முடைய ஆசீர்வாதங்கள் அவர் மேலும், எங்கள் சகோ. க்ரேஸ் மேலும், சகோ. ஸ்நெல்லிங் மேலும், அவருடைய இடத்தை எடுத்துக் கொண்டுள்ள அந்த மற்ற சகோதரன் மேலும், சகோ. பீலர் மற்றும் இங்குள்ள சகோதரர் அனைவர் மேலும், சகோ. நெவில் மேலும், எங்கள் ஒவ்வொருவர் மேலும் தங்கியிருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம், கர்த்தாவே, உமது ஆசீர்வாதங்களை எங்கள் மேல் புன்னகை பூத்து அருள வேண்டுமென்று ஜெபிக்கிறோம். நாங்கள் முன் செல்ல எங்களுக்குத் தேவையானதெல்லாம் உமது கிருபையே, கர்த்தாவே. இன்றிரவு உரைக்கப்பட்ட இந்த சிறு விமர்சனத்தை நாங்கள் மறந்து விட வேண்டாம்: அதாவது அங்கு நின்று கொண்டிருந்த அந்த ஸ்திரீக்கு முடிவு என்னவென்று தெரியாமலிருந்தது; ஆனால் இயேசுவுக்கு கவனம் தேவைப்பட்டது. அவள் அதை அவருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஆம், அவருடைய பாதங்களை அவள் கழுவினாள். அது அசட்டை செய்யப்பட்ட ஒன்று, அவருடைய ஊழியக்காரர் என்று உரிமை கோரினவர்களும் கூட அதை செய்யத் தவறினர். அவர்கள் அவரை கேலி செய்தனர். ஆனால் அவளோ எந்த பலனையும் எதிர் பார்க்காமல் அவருக்கு பணிவிடை செய்தாள். இதை விட ஒரு பெரிய காரியத்தை அவள் செய்திருக்க முடியாது. 132தேவனே, நாங்கள் அதையே செய்வோமாக. நாங்கள் நெருக்கி முன் சென்று தேவனுடைய ஊழியத்தை செய்வோமாக. கர்த்தாவே, எங்களுக்கு இருக்கும் வாஞ்சை எல்லாம், அந்த நாளில், “என் உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, நன்றாகச் செய்தாய், உலகத் தோற்றத்துக்கு முன்னே உனக்காக ஆயத்தம் பண்ணப்பட்டுள்ள கர்த்தருடைய சந்தோஷத்தில் பிரவேசி'' என்று சொல்லப்படுவதைக் கேட்க வேண்டும் என்பதே. தேவனே, அதை நாங்கள் செய்யவும், ஒருவரோடொருவர் ஐக்கியம் கொண்டிருக்கவும் அருளுவீராக. பரிசுத்த ஆவியானவர் தாமே எங்களோடு கூட இருந்து, எங்களை வழி நடத்தி, நாங்கள் செய்யும் அனைத்திலும் எங்களை நடத்தி, எங்களுக்கு நீடிய ஆயுளைத் தந்து, கூடுமானால் கர்த்தராகிய இயேசுவின் வருகையைக் காணச் செய்வீராக. அவருடைய நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். நமது இருதயங்களை கிறிஸ்தவ அன்பினால் பிணைக்கும் கட்டு ஆசீர்வதிக்கப்படுவதாக ஒரே சிந்தையுள்ளோரின் ஐக்கியம் மேற்கூறியது போன்று இருக்கும். நாம் பிரிந்து செல்லும்போது அது உள்ளில் நமக்கு வேதனை தருகிறது ஆனால் நாம் இன்னும் இருதயத்தில் இணைக்கப்பட்டு மறுபடியும் சந்திப்போமென்று நம்புகிறோம். அவர்கள் ஞானப்பாட்டைப் பாடிக்கொண்டே வெளியே சென்றார்கள் என்று வேதம் கூறுகிறது. கர்த்தருக்கு சித்தமானால், நான் மறுபடியும் உங்களை ஞாயிறு காலையில் காணும் வரைக்கும், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வந்தனம்! வணக்கம்! ஜிம், இன்றிரவு உங்கள் கையை நான் குலுக்கவில்லை. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.